கம்பன் பாடிய குறள்

இந்த சிறிய பிரசங்கத்தையும் கவித்துவம் மிளிரும் அழகிய பாடல்களில் கம்பன் விவரிக்கிறான்.. ஆலமரம் முழுவதையும் தன் உள்ளே அடக்கிய விதை போல, நெடியோனாகிய திருமால் வாமனனாக அவதரித்தான்.. குள்ளனான வாமனன் ஓங்கி உயர்ந்து நின்றதற்கு அபாரமான ஒரு உவமை சொல்கிறார், உயர்ந்தவர்க்கு உதவிய உதவி போல… மண்ணில் நின்று உலகம் அளந்தது வாமனக் குறள். வானிலும் மண்ணிலும் நின்று உலகம் அளந்தது வள்ளுவர் குறள்.. அன்று தன் நெடுமையால் மாயன் அளந்த உலகை எல்லாம், தன் மனத்தில் நினைந்து செய்யும் கொடுமையாள் அளந்தவள் இவள்…

View More கம்பன் பாடிய குறள்

பாகிஸ்தான் சிறுகதைகள் [புத்தக விமர்சனம்]

இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு அவர்களது வாழ்வையும் அடையாளங்களையும் காத்துக்கொள்ள முடியாது என்றும் வாதித்து, கலவரங்கள் செய்து பிரிந்து சென்றார்கள்… பகை உணர்வு எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் அவன் இங்கு காலடி வைத்ததும் பார்க்க விரும்புவது மொகலே ஆஸம் படம்தான்… பண்பாட்டையும் வரலாற்றையும் பகிர்ந்து கொண்டவர்கள், தம்மை அடையாளப்படுத்திக் கொள்வது மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளோடு. உலக முஸ்லீம் இனத்தோடு சேர்ந்தவர்களாகவே தம்மைக் காண்கிறார்கள்… எனவே எதையும் நேரடியாகச் சொல்லாத எழுத்துமுறை- குறியீடுகளும், அருவுருவங்களும் ஒன்றோடென்று கொளுவிக்கொண்டு ஒரு புதிய அவதாரம் எடுத்தது… “வெறி பிடித்த கும்பல் மதமும் அறியாது, மனிதாபிமானமும் அறியாது” என்று மண்டோ யாரை நோக்கிச் சொல்கிறார்? ஹிந்துக்களையா முஸ்லீம்களையா?… 500 பக்கங்களில் ஒரு பெரும்பகுதி வெறும் மாயாஜாலங்கள்

View More பாகிஸ்தான் சிறுகதைகள் [புத்தக விமர்சனம்]

மதம் [சிறுகதை]

மன்னனுக்கும் அடிமைக்கும் ஆன்மா ஒன்றுதான் என்றெல்லாம் போதிக்கிறார்களாமே?[…] நாளைக்கு ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் இந்தத் தத்துவங்கள் பெருகினால் அப்புறம் எந்தப் பிரஜை தன் அரசனை தெய்வமகனாகப் பார்ப்பான் ஈஸிபஸ்? எவன் தன் தேவகுமாரனான எனக்காக உயிர்துறக்க முன்வருவான்?

View More மதம் [சிறுகதை]

எல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்

தமிழர் பெருமிதம் கொள்ளும் சீனத் தொடர்பு, அராபிய வணிகத் தொடர்பு, கீழ்த்திசை நாடுகளின் தொடர்பு இவற்றுக்கும் முன்பாகவே ஒரு நீடித்த வடபுலத் தொடர்பிருந்ததை பாரதத்தின் பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன…. அடிகளாரின் விரிந்த பார்வையின் விளைவே சிலப்பதிகாரக் காப்பியம்… பாகவதத்தை முன்மாதிரியாகக் கொண்டு தேவகுமாரனான, தேவதூதரான இயேசு பிரானுக்கும் கடந்த நூற்றாண்டில் தேவசி என்பவர்… பேரா. வையாபுரிப் பிள்ளையவர்களின் பல்சந்த மாலை இஸ்லாமிய இலக்கியத்தைச் சார்ந்தவை… இவர் தொகுத்த ’ப்ரதானப்பெட்ட மதிலகம் ரேககள்’ (Important Temple Records) அநந்தபுரம் ஆலயத்தில் தற்போது கண்டெடுக்கப்பட்ட ஆபரணக் குவியலைப் பதிவு செய்துள்ளது… இலக்கிய ஈர்ப்பும் இறையுணர்வும் இனிய கவிதைகளும் பல்லினப் பாகுபாட்டைத் தகர்த்து மக்களை ஒன்றுபடுத்தி வருவதை உலக வரலாற்றில் நாம் தொடர்ந்து காண முடிகிறது.

View More எல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்

அவ்வரங்கள் இவ்வரங்கள்

இராமகாதை வரங்கள் காரணமாகவே வளர்கிறது… கைகேயி இராமனை, ‘உங்கள் மகன்’ என்றோ, ‘கோசலை மகன்’ என்றோ கூடச் சொல்லாமல் யாரோ மூன்றாம் வீட்டுப் பையனைச் சொல்வது போல ‘சீதை கேள்வன்’ என்று குறிப்பிடுகிறாள்… இராமன், ‘என் தாய்’ என்று கூடச் சொல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே போய், ‘என் தெய்வம்’ என்கிறான்… “இராமபிரான் எனக்கொரு வரம் தந்தார். அதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டும்,” என்கிறாள் சீதை… கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது.

View More அவ்வரங்கள் இவ்வரங்கள்

தாண்டவம் [சிறுகதை]

அவரது கலை ஆளுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், விரல்களை மடக்கிக் காட்டும் பேருண்டப் பட்சி முத்திரைதான் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றும்… பரதநாட்டியத்தை மதத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டியிருக்கிறது… கோபமும், பீபத்சமும், சிருங்காரமும் எல்லாம் ஒருவித கலாபூர்வமான அழகியல் வெளிப்பாடாக இருக்கவேண்டுமே தவிர அப்பட்டமாக இருக்கக் கூடாது என்பது நாங்கள் படித்து உள்வாங்கியிருந்த பரதக் கலை கோட்பாடு… தி மடோன்னா முத்ரா… தி ரைஸன் கிரைஸ்ட் அபிநயா… தி சர்ச் முத்ரா…

View More தாண்டவம் [சிறுகதை]

அமுதம் [சிறுகதை]

தொழுவக்குடிகளை தர்மானுசாராங்களுக்கு எதிராக கலகம் விளைவிக்கத் தூண்டியிருக்கிறீரென்று உம்மை உடனடியாக அழைத்து வர ஆணையாகியிருக்கிறது ஓய். பிராமணர் என்று கூடப் பார்க்காமல், உடனே வராவிட்டால் பிணைத்து அழைத்து வரவும் உத்தரவாகியிருக்கிறது… அதென்ன நிக்ருஷ்ட ஜந்மம்? தாழ்ந்த சாதியா?… நியான் ஒளியில், அந்த ஒரே பாதையின் ஈர மணற் பரப்பில் என்னுடைய காலடித்தடங்கள் மட்டுமே இருந்தன…

View More அமுதம் [சிறுகதை]

அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை

அருணகிரிநாதரின் ஜனனம் எப்படி, எப்போது ஏற்பட்டது? தாய் தந்தையர் யாவர்? பரவலாக கூறப் படுவது போல அவர் தன் வாழ்வில் தனது பொருள், இளமை, அழகு, அறிவு எல்லாவற்றையும் பறி கொடுத்தனரா? மேலும் பல நம்பிக்கைகள், ஐதீகக் கதைகள்.. இவற்றை எல்லாம் மீள்பார்வை செய்ய தூண்டும் கட்டுரை…

View More அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை

நமக்கு எதற்கு வெ.சா.?

[…]வெசாவின் கட்டுரைகளில் நம் தலையில் அடித்து விழிப்புறச் செய்வது ‘பான்:ஸாய் மனிதன்’; 1964 இல் எழுத்து இதழில் வெளியானது. இறுதியாக இப்படி முடியும்: “ஒரு அடிப்படையான சாதாரண கேள்வி கேட்க எனக்கு உரிமை அளிப்பீர்களா? எருமைக்கு எதற்கு நீச்சுக்குளம்?” அந்தக் கட்டுரைக்குள் இருக்கும் கோபம் ஆதங்கம் பரவலாக தமிழனது மூளையில் இன்னும் இயங்கும் பாகங்களை சென்று சேர்ந்திருந்தால் தமிழ்நாட்டு ரசனை கொஞ்சமாவது ஏற்றமடைந்திருக்கும்.[…]

View More நமக்கு எதற்கு வெ.சா.?

வெ.சா என்னும் சத்திய தரிசி

எந்தக் கும்பலிலும் கூடாரத்திலும் அடங்காத குரலாக, ஒரு கலை, இலக்கியவாதியின் அறச்சீற்றத்தின் குரலாகவே அவரது குரல் உண்மையுடன் ஒலித்து வந்திருக்கிறது. சமயங்களில் அளவு கடந்த ஆவேசத்துடன் இருக்கிறது.. சத்தியத் தேடல் கொண்ட ஒரு கலை ரசிகனை, இலக்கிய வாசகனை எல்லாக் காலகட்டங்களிலும் அவரது விமர்சனங்களும், பார்வைகளும் ஈர்த்திருக்கின்றன. சொல்லப் போனால், சுண்டி இழுத்திருக்கின்றன…

View More வெ.சா என்னும் சத்திய தரிசி