இலக்கியம்

கவிதை

அழகு

அழகு

காஞ்சிப் பெரியவர் கனிவே அழகு கமலத் திருவடி மலரும் அழகு தேன்சிந் தும்மலர் தெவிட்டா அழகு தெளிவாய் ஓடும் ஆறும் அழகு. [மேலும்..»]

இலக்கியம், கம்பராமாயணம், ராமாயணம்

கம்பராமாயணம் – 10 (Kamba Ramayanam – 10)

கம்பராமாயணம் – 10 (Kamba Ramayanam – 10)

(பாடல்கள் 31 முதல் 36 வரை) பெரிய மலைகளில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில்களின்மேல் பலத்த காற்று வீசுதால் அவை நாலாபுறமும் அலைபடுகின்றன. அவ்வாறு ஆகும் சமயத்தில் அருகிலிருக்கும் மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் பெரியபெரிய தேன்கூடுகளின்மேல் படுவதனால் அவை உடைகின்றன. தேன்கூடுகள் உடைவதனால், அவற்றிலிருந்து பெருகிஓடும் தேன், மலைச் சரிவுகளில் ஓடிவருவது ஏதோ ஒரு நீண்ட பாம்பு மலையின் மேலிருந்து தொங்குவதைப் போல் காட்சியளிக்கிறது... [மேலும்..»]

இலக்கியம், கம்பராமாயணம், ராமாயணம்

கம்பராமாயணம் – 9 (Kamba Ramayanam – 9)

கம்பராமாயணம் – 9 (Kamba Ramayanam – 9)

திணை மயக்கம் எப்போதும் தவறாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. இன்றைய மொழியில் சொன்னால், ‘கழிவறையில் கிடக்கும் பால்செம்பு; படுக்கையறையில் வைக்கப்பட்டிருக்கும் காஸ் அடுப்பு‘ என்பனவெல்லாம் பொருத்தமற்ற வருணனைகள் என்பதை ஒப்புக் கொள்வோம். திணை மயக்கம் என்று இலக்கணம் குறிப்பிடுவது இதைத்தான். ஆனாலும், நல்ல எழுத்தாளனிடம் திணைமயக்கமும் ஒரு உத்தியாகப் பயன்படும். ‘(கைகழுவி வாய்) கொப்புளிக்கும் பிறையின் (வாஷ் பேஸின்) மேல் ஸ்வாமி படம் மாட்டப்பட்டிருந்தது’ என்று எழுதினால் சிரிப்போம். ஆனால், ‘குளியலறையில் புத்தக அலமாரி இருந்தது’ என்று சொன்னால், ( [மேலும்..»]

கவிதை

கருணைக் கணபதி

கருணைக் கணபதி

பிரணவ மந்திரத்தின் பொருளே கணபதி பக்தி செய்வோரைப் பரிபாலிப்பான் கருணையின் நாயகன் கவலையைத் தீர்ப்பான் கற்பகத் தருவாய்க் கனகம் பொழிவான். [மேலும்..»]

இலக்கியம், கம்பராமாயணம், ராமாயணம்

கம்பராமாயணம் – 7 (Kamba Ramayanam – 7)

கம்பராமாயணம் – 7 (Kamba Ramayanam – 7)

கோபம் கொண்ட இடிகளே இந்த உருவத்தில் வந்திருக்கின்றன‘ என்று நினைக்கும்படியாகவும்; விரிந்து திரண்டிருக்கும் இருட்டு, இரண்டாகப் பிரிந்து, இரண்டு கூறுகளாக மாறி ஒன்றை ஒன்று முறைமுறையாக (மாறிமாறி) நெருக்கி முட்டித் தள்ளி எருமைக் கடாக்கள் பொருதுநிற்க,(கம்பராமாயணம், பால காண்டம், நாட்டுப் படலம் பாடல்கள் 16-20. கோசல நாட்டு வர்ணனை) [மேலும்..»]

இலக்கியம், கம்பராமாயணம், ராமாயணம்

கம்பராமாயணம் – 6 (Kamba Ramayanam – 6)

கம்பராமாயணம் – 6 (Kamba Ramayanam – 6)

கம்பராமாயணம், பால காண்டம், நாட்டுப் படலம் பாடல்கள் 11-15. கோசல நாட்டு வர்ணனை. கரிய நிறத்ததான கடல் அலைகளில் (கூட) சரயு நதியில் பெருகிவரும் புதிய நீரில் முங்கிக் குளிக்கும் பெண்கள் சூடியிருக்கும் பூவும், பூசியிருக்கும் கஸ்தூரியும் கலந்து அந்த மணமே வீசுகிறது என்றால், தேன்போன்ற இனிமையான மழலைச் சொல் பேசுவதும் (கொஞ்சிப் பேசுவதும்); கூர்மை மிகுந்த கடைக்கண் பார்வையை வீசுவதுமாக, அங்கே (கரைகளில்) நிற்கும் இளைஞர்கள் விருப்பத்துடன் (மனமார்ந்த காதலுடன்) பார்த்தபடி நிற்கும் (நீராடும்) பெண்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்ல முடியுமா? [மேலும்..»]

இலக்கியம், கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 4

July 3, 2008
-
கம்பராமாயணம் – 4

கம்பராமாயணம், பாலகாண்டம், நாட்டுப்படலம், பாடல்கள் 1-5. வயல் வரப்புகளில் எல்லாம் முத்துக்கள் மண்டியிருக்கும். நீர் ஓடும் மடைகளில் எல்லாம் சங்குகள். நிரம்பிய வெள்ளம் ஓடும் கால்வாய்களின் கரையெல்லாம் செம்பொன்னால் ஆனவை; எருமைகள் படுத்ததனால் ஏற்பட்ட குழிகளில் தேங்கிய நீரில் செங்கழுநீர் மலர்கள் பெருங்கூட்டமாகப் பூத்துள்ளன; சமப்படுத்திய வயல்களிலோ பவளமணிகள் பரவியுள்ளன. சாலி என்னும் உயர்வகை நெல் நிரம்பிய வயல்களில் அன்னப் பறவைகள் உலவுகின்றன; அருகிலுள்ள கரும்பு வயல்களில் கருப்பங்கழிகளுக்கு இடையிலிருக்கும் கூடுகளிலிருந்து செந்தேன் பொழிகின்றது... [மேலும்..»]

இலக்கியம், கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 3

கம்பராமாயணம் – 3

கம்பராமாயணம், பாலகாண்டம், ஆற்றுப்படலத்தின் 3 ஆம் மற்றும் இறுதிப் பகுதி. இந்தப் பாடலில் நதி, யானையாகச் சித்திரிக்கப்படுகிறது. மதகின் கதவுகளை நதி முட்டுகிறது; யானையோ கோட்டைகளின் கதவுகளை முட்டிப் பெயர்க்கக் கூடியது. நதி ஓடிவரும் வேகத்தைக் கண்டு உழவர்கள் கைகளை உயரத் தூக்கியபடி கதறுகிறார்கள்; யானை ஓடிவரும்போதும் அப்படித்தான் மக்கள் கதறுவார்கள். நீர்த்தேக்கங்களின் முன்புறம் உள்ள ஓடைகள் நிரம்பிப் பொங்கி வழியுமாறு ஆற்றின் வெள்ளம் பெருகுகிறது; யானைக்கோ மத்தகத்தின் மீது அணிவிக்கப்பட்ட அணிகலனின் ஒளி வெள்ளம் பொங்கிக் கொண்டு இருக்கும். நதியிலும் வண்டுகள் மொய்க்கின்றன; யானையின் மதநீரின் மேலும் வண்டுகள் மொய்க்கும். நெருக்கமாகக் கட்டப்பட்டுள்ள மணிகள்... [மேலும்..»]

இலக்கியம், சிறுவர், ராமாயணம், வைணவம்

பாலராமாயணம் – 2

பாலராமாயணம் – 2

சிறுவர்களுக்காக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட ராமாயணம். அந்த வேள்வித் தீயிலிருந்து சிவந்த கண்களும் நெருப்புப் போன்ற தலைமயிரும் கொண்ட பூதம் ஒன்று தன் கையில் அமுத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டது. அதை வாங்கிப் பட்ட மகிஷிகளுக்குக் கொடுக்கும்படி தசரத சக்ரவர்த்தியை வசிஷ்டர் வேண்டிக்கொண்டார்.... [மேலும்..»]

கவிதை

அனுமன் வேதம் – கவிதை

June 28, 2008
-
அனுமன் வேதம் – கவிதை

தளர்வு தகர்க்கும் சோம்பல் துடைக்கும் மயக்கம் அறுத்து மனம் தெளிவிக்கும் மாண்பு பெருக்கும் மாருதி மந்திரம் அச்சம் தவிர் அச்சம் தவிர் என அறைந்து முழங்கும் அனுமன் வேதம் [மேலும்..»]