Articles in the கதைகள் Category
Posted in இலக்கியம், கதைகள், புத்தக விமர்சனம் on 17 February 2010
Stats: பார்வை: 554 and 10 Comments
ஆனாலும், இன்னமும் வல்லிக்கண்ணனைப் புரிந்து கொண்டதாகச் சொல்லமுடியவில்லை. “கோயில்களை மூடுங்கள்” என்னும் பிரசார சிறுபிரசுரத்தில் காணும் வல்லிக்கண்ணனைத் தெரியவில்லை. அதைத் தொடர்ந்து மேலே ஈ.வே.ரா.விலிருந்து கருணாநிதி வரை அத்தனை திராவிட இயக்கத் தலைவர்களையும் 1963-லேயே கிண்டலும் கண்டனமுமாக, எங்கே இடம் கிடைக்கும், எழுதவேண்டுமே என்று எழுதிய வல்லிக்கண்ணன்தானா, ஈ.வே.ரா, சின்னக்குத்தூசியிடம் பாராட்டு பெற்ற வல்லிக்கண்ணன் என்பதும் தெரியவில்லை. அந்த வல்லிக்கண்ணன், 40 வருட காலம்…
Posted in அனுபவம், கதைகள் on 8 February 2010
Stats: பார்வை: 599 and 4 Comments
இந்த நீதிக்கதையை எழுதிய கே.தேவராஜ் பத்திரிகை தர்மத்தை மீறிச் செய்த ஒரு காரியம்தான் என் கோபத்தைக் கிளறியது. வகுப்பில் நான் கடைசி பெஞ்ச் என்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள். கே.தேவராஜ் முதல் பெஞ்ச். கிளாஸ் லீடர் வேறு. கடைசி பெஞ்ச்சுக்கு வந்து கதையைக் கொடுத்துவிட்டு காத்திருப்பதுதான் பத்திரிகை தர்மம்
Posted in இந்து மத மேன்மை, கதைகள் on 21 September 2009
Stats: பார்வை: 2,561 and 105 Comments
[மூர் நாம் அவர்களின் 'The Principle Of Adaptation' என்கிற புனைவைத் தழுவியது]
[மூலம்: http://moor-nam.sulekha.com/blog/post/2004/12/the-principle-of-adaptation.htm]
-0-
‘அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே..’ குழைவான கிறங்கடிக்கும் குரலில் சித்ரா பாடிக் கொண்டிருந்தார். கோகுலாஷ்டமி கொண்டாடி விட்டு, முறுக்கும் சீடையும் தின்று மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தேன். “சீசந்திக்கு காசு…” வாசலில் இரண்டு மூன்று குழந்தைகள் சிறு தேர் செய்து, கிருஷ்ணர் படத்தை அதில் வைத்து இழுத்து வந்து, வீட்டின் முன் நின்று கூவினர்.
“பவானி…,” குரல் கொடுத்தேன். கல்லூரி விடுமுறை ஆதலால் இன்று [...]
Posted in இலக்கியம், கதைகள், சமூகம், பொது on 28 August 2009
Stats: பார்வை: 845 and 3 Comments
அடா, வேணு முதலி, கேள். ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக்கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்ளவரை பிழைத்திருக்கவும் செய்யும். அடா வேணு முதலி, பார்! பார்! பார்!”
Posted in இலக்கியம், கதைகள், கலைகள், சிறுவர், நிகழ்வுகள் on 26 August 2009
Stats: பார்வை: 756 and 10 Comments
பவித்ரா ஸ்ரீனிவாசன் பல பரதநாட்டிய விற்பன்னர்களிடம் பயிலும் பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீமதி மற்றும் ஸ்ரீமான் தனஞ்சயன் நடனத் தம்பதியரிடம் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். மேலும், ‘பத்மபூஷன்’ கலாநிதி நாராயணனிடம் கற்றுக்கொள்ளும் பெரும்பேற்றையும் பவித்ரா பெற்றுள்ளார். முதல் முறையாக குறுந்தகட்டில்(CD), பாரம்பரிய நடனத்தை வெளியிட்டவர் இவரே. கிருஷ்ண கான சபா இவருக்கு ‘பால சரஸ்வதி’ பட்டம் கொடுத்துச் சிறப்பித்தது. பாரத் கலாச்சார் ‘யுவகலா பாரதி’ பட்டம் வழங்கியுள்ளது. மியூசிக் அகாடமி, திறமை மிக்க இளம் கலைஞருக்கான ‘எம்ஜியார் விருது’ வழங்கியுள்ளது.
Posted in கதைகள், பொது on 16 August 2009
Stats: பார்வை: 582 and 2 Comments
தூ! பிரஷ்டப் பயலே! என்னை நீ ஏமாற்றப் பார்த்தாய். உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா?நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய்ப்பேசினாய்; நான் சுதந்திரப் பிரியன்.
Posted in இலக்கியம், கதைகள், வரலாறு on 9 August 2009
Stats: பார்வை: 374 and 5 Comments
… இந்தப் புண்ணிய பரத கண்டத்தின் வடமேற்குத் திசைக்கு அப்பால் மௌடீக அசுர சக்திகள் சில தோன்றியிருப்பதாக அறிகிறேன். அவர்கள் மூர்க்காவேசத்துடன் போர் புரிந்து நகரங்களைச் சூறையாடிக் குற்றமற்ற மக்களைக் கொன்று கோயில்களையும் விக்கிரகங்களையும் உடைத்துத் தகர்த்து நாசமாக்குகிறார்களாம். .. இந்தத் தெய்வத் தமிழ்நாட்டுக்கு அத்தகைய கதி நேராதிருக்கட்டும். அப்படி நேர்வதாயிருந்தால், வீரமறக் குலத்தில் பிறந்த நீங்கள் அந்த அசுர சக்திகளுடன் போராடச் சித்தமாயிருக்க வேண்டுமல்லவா?” …
Posted in இலக்கியம், கதைகள், பொது on 6 August 2009
Stats: பார்வை: 381 and No Comments
அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம்.
அவன் வரும் வழியிலே கற்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்தி வைப்போம்.
Posted in கதைகள், சமூகம், வழிகாட்டிகள் on 5 August 2009
Stats: பார்வை: 453 and 7 Comments
… அந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி சற்றே ஆராய்ந்து பார்த்ததில், வெள்ளைத்தாதன்பட்டி பக்கம் உள்ள கோயில் வெறும் கோயில் மட்டுமல்ல. சுரங்க வாசலும்கூட என்று தெரியவந்தது. நான்கு நாயக்கர்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் நான்கு தூண்களுக்கு நடுவில் ரகசிய சுரங்கம் ஆரம்பிக்கிறது. நிலக்கோட்டை அரண்மனைக்கு இட்டுச் செல்லும் இரண்டு மூன்று சுரங்கங்களில் இதுவும் ஒன்று என்று யூகம். என்னைத் தவிர வேறு யாரிடமும் இதைப் பற்றி ஜெயக்குமார் சொன்னதில்லை ….
Posted in ஆன்மீகம், கதைகள், சமூகம், பயங்கரவாதம், பொது on 30 July 2009
Stats: பார்வை: 376 and 20 Comments
பல நூற்றாண்டுகளாக ஆப்கானிஸ்தானிலிருந்தும் அதற்கு அப்பாலிருந்தும் இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் பாரதத்தின் மீது படையெடுப்பதும் தாக்குவதும் கொள்ளை அடிப்பதும், அடிமைகளாக மக்களை சிறைபிடித்து செல்வதும் நடந்து வந்துள்ளன. மகாராஜா ரஞ்சித் சிங் காலத்தில்தான் இந்த கொடூரச்செயல்களை நிறுத்தும்படி ஆப்கானிஸ்தானம் பணியவைக்கப்பட்டது.
Posted in கதைகள், பொது on 19 July 2009
Stats: பார்வை: 497 and 3 Comments
“நாட்டியம் மிகவும் மேலான தொழில். இப்போது அந்தத் தொழிலை நமது நாட்டில் தாஸிகள் மாத்திரமே செய்கிறார்கள். முற்காலத்தில் அரசர் ஆடுவதுண்டு. பக்தர் ஆடுவது லோக பிரசித்தம். கண்ணன் பாம்பின் மேலும், சிவன் சிற்சபையிலும் ஆடுதல் கண்டோம்.
Posted in இலக்கியம், கதைகள், சமூகம், தொடர், பொது on 12 July 2009
Stats: பார்வை: 334 and No Comments
காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான்… குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலையில் ஒரு வெளிநாட்டு வியாபாரக் கப்பல் …
Posted in இலக்கியம், கதைகள், பொது on 5 July 2009
Stats: பார்வை: 178 and No Comments
நடுக்கடலில் ஒரு தீவு; அதனிடையே பெரிய அரண்மனை. அரண்மனைக்கருகே சிங்காரத் தோட்டம். அதில் ஒரு நீரோடை. அதனருகே புல்லாந் தரை மேல் பதினாறு வயதுள்ள ஒரு கன்னிகை உட்கார்ந்திருந்தாள். அவள் என்னைக் கண்ட மாத்திரத்தில் எழுந்து அரண்மனைக்குள் ஓடிப்போய் விட்டாள். நான் அவ்வழியைப் பின்தொடர்ந்து சென்றேன்.
Posted in இலக்கியம், கதைகள் on 28 June 2009
Stats: பார்வை: 188 and No Comments
குடுகுடு, குடுகுடு, குடுகுடு, குடுகுடு, சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது, தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது, எட்டு லச்சுமியும் ஏறி வளருது, பயந் தொலையுது, பாவந் தொலையுது, சாத்திரம் வளருது, சாதி குறையுது, நேத்திரம் திறக்குது, நியாயந் தெரியுது, பழைய பைத்தியம் படீலென்று தெளியுது. வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது, சொல்லடீ சக்தி, மலையாள பகவதி, தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.
Posted in கதைகள் on 21 June 2009
Stats: பார்வை: 217 and 1 Comment
“டாம், டாம் என்று வெடிச் சத்தம் கேட்கிறது. எங்கு பார்த்தாலும் புகை. அந்தப் புகைச்சலுக்குள்ளே நான் சுழற் காற்றில் அகப்பட்ட பக்ஷி போலே அகப்பட்டுக் கொண்டேன்.
Posted in கதைகள் on 18 June 2009
Stats: பார்வை: 253 and 5 Comments
“பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. “நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ?” என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை.”
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்