கதைகள்

கதைகள், சமூகம், மகளிர்

அடுத்த வீடு

அடுத்த வீடு

மாமா அடிக்கடி புகையிலை போடுவார். நான் அங்கு போகும்போதெல்லாம் மறக்காமல் அரையணா சாமான் (புகையிலை) வாங்கித்தரச் சொல்லுவார். சிலசமயம் காசும் தருவார். சில சமயம் ”நான் காசு தந்தேனே கார்டு எங்கே? அரையணா சாமான் எங்கே?” என்று கேட்பார். வாயில் வந்த பொய்யைச் சொல்லி சமாளிப்பேன். [மேலும்..»]

அனுபவம், அறிவியல், கதைகள்

கால்குலஸ் வாழ்க்கை

கால்குலஸ் வாழ்க்கை

அவர் புன்னகைத்தார். “ நாலு மார்க்” என்றார். ராகவன் சாரின் ஒரு சிறப்பு அம்சம் அது என்று சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர் என்னைப் பார்த்தார். “ நீ அந்த சியாமளாவைப் பார்த்து ஜொள்ளு விடுவதை நான் பாத்திருக்கேன். அந்த காதலை ஜி g ந்னு வைச்சுக்குவோம். சியாமளாவின் புன்னகையை எக்ஸ் Xனு வைச்சுக்குவோம்" ... வீட்டின் உட்புறம் , ஒரு அறையில் கட்டிலின் அருகே நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார். உடல் வற்றிப்போய், கைகளில் நரம்புகள் புடைத்து, அசாதாரணப் பளபளப்பில் தோல் மினுங்க, அவரைப் பார்க்கையில் என்னமோ செய்தது.... [மேலும்..»]

கதைகள், மகளிர்

அம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]

அம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]

அந்த வீட்டு மாமா வருகிற கார் சத்தம் தெரு முனையில் கேட்டவுடனேயே மாமி பேச்சை அவசர அவசரமாக நிறுத்தி விட்டு “வரேன் மாமி” என சன்னலை விட்டு ஓடுவாள்.இது அம்மாவுக்கும் எங்களுக்கும் பெரிய ஆச்சரியம், ஏனெனில் எங்கள் அப்பா வருகிறாரென்று நாங்கள் எந்த வேலையையும், விளையாட்டையும், பேச்சையும் பாதியிலே நிறுத்தியதேயில்லை... ஒரு விதத்தில் மாமாவும் நல்லவர்தான். மாமியும் பாவம் பரம சாது. ஆனால் அவர்களின் உறவின் இழையில் நுண்ணிய சிக்கல்கள். சராசரி நல்ல தனத்தொடு கூடிய ஒரு ஆண் + சராசரியான ஒரு நல்ல பெண் = ஒரு சராசரி சந்தோஷமான தம்பதிகள் என்ற சமன்பாடு சரியாக... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத மேன்மை, கதைகள், தத்துவம்

ஆதிசங்கரர் படக்கதை — 6

ஆதிசங்கரர் படக்கதை — 6

நான் பூமியல்ல, ஆகாயமல்ல, நீருமில்ல, நெருப்புமல்ல. காற்றுமல்ல, மனமுமல்ல, உணர்வுமல்ல. அனைத்தையும் கடந்த சிவம்! [மேலும்..»]

கதைகள்

வீடுபெற நில்!

வீடுபெற நில்!

“அங்கே போய்ப் பார்க்காதவரை நாம் ஒன்றும் சொல்ல முடியாது. நாம் காண்பதெல்லாம் வெறும் மனப் பிரமை. கண்ணைக்கூசும் வெளிச்சம் பலவிதமான இல்லாத தோற்றங்களை உண்டுபண்ணுகிறது.” "ஒண்ணைப் பார்க்காதாதுனாலே அது இல்லேன்னு நம்ம சிங்காரவேலர் சொல்றார். அந்த மலைலே ஏறி வெளிச்சத்திலே போய் மறையறவங்க யாரும் திரும்பி வரதாக் காணோம். மலைலேந்து உருண்டு விழறவங்க தூரத்திலே வீடு வேணும்கற கூட்டத்தில கலந்துடறாங்க. அதைப் பார்த்து நாம நம்ம மனசுக்குத் தோணினதைச் சொல்றோம். மலைக்கு மேல என்ன இருக்குன்னு தெரியாம வெளிச்சம்தான் நம்ம கண்ணை மறைக்குது. " “ஏன்? ... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், கதைகள்

ஆதிசங்கரர் படக்கதை — 5

ஆதிசங்கரர் படக்கதை — 5

உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற எங்கிருந்தாலும் ஒடோடிவருவேன், அம்மா! என்னைப் பிரிவதால் உங்கள் கீர்த்தி பலமடங்கு அதிகமாகும். [மேலும்..»]

கதைகள்

“காமாச்சியைக் கரையேத்தணும்!”

“காமாச்சியைக் கரையேத்தணும்!”

இன்னும் எத்தனை வருஷம் இருந்து என்னை சம்ரட்சணை பண்ணப்போறேன்னு கேக்கறே! வேற நீ என்னடா பண்ணுவே! அது ஒருவிதத்திலே நியாயம்தான்னாலும், ஒரு பிராமணன், அதிலும் ஒரு வைதிகன், குரு ஸ்தானத்திலே இருக்கறவன், இப்படி சுயநலத்தோட இருந்தா மழைபெய்யுமாடா? நீங்க இப்படி இருக்கறதுனாலதான் வைசூரி, காலரான்னு நாம அழிஞ்சுபோறோம். அதிலேயும் பிராமணன் பண்ற தப்பு இந்த ஒலகத்தையே பாதிக்கும்டா. இதை என்னிக்குத்தான் நீங்க புரிஞ்சுக்கப்போறேளோ? [மேலும்..»]

கதைகள், புத்தகம்

ஹிந்துத்துவ சிறுகதைகள்

ஹிந்துத்துவ சிறுகதைகள்

தமிழ்ஹிந்து இணையதளத்தில் ஆலந்தூர் மள்ளன் என்ற புனைபெயரில் அரவிந்தன் நீலகண்டன் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியது நினைவிருக்கும். அந்தக் கதைகள் வாசகர்களால் தொடர்ந்து விவாதிக்கப் பட்டு, பாரட்டவும் பட்டன. அவற்றை மிக நேர்த்தியாகத் தொகுத்து தடம் பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.... பிரசார சிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களை அனாயசமாக தொட்டுப் பார்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு இது. அத்தகைய கதைகளின் வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் விலகி, வரலாற்றுப் பின்னணியில் இந்திய உணர்வுடன் வெளிவரும் சிறுகதைகளை இத்தொகுப்பில் நாம் விழிவிரிய வாசிக்கலாம். பாரதப் பண்பாட்டில் வேர்கொண்டு நம் மரபின் மகத்துவக்கொடியைப் பறக்கவிடும் கதைகள் இவை...... [மேலும்..»]

கதைகள், மகளிர்

மீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)

மீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)

“பெரியபாட்டியையும் மெட்ராசுக்கு கூட்டிண்டு போயிட்டாரா?” “நன்னாயிருக்கே, நீ சொல்றது! கண்ணும் தெரியலை, கடையும் தெரியலை. மொசைக் தரைன்னு தெரியாம, ஏதோ கொட்டி இருக்குன்னு பொறுக்க ஆரம்பிச்சுடுவா. அவ ஆசாரம் மெட்ராசுக்கு லாயக்குப்படுமா? அதுதான்...” “எம் மனக்கொறையைத் தீர்த்துட்டேடா, கண்ணா. இந்தக் கட்டை கண்ணைமூடி, காட்டிலே என்னை எரிக்கறச்சே, என் நெஞ்சு வேகுமோ, வேகாதோன்னு நெனப்பேன். இனிமே அப்படி நெனைக்கமாட்டேன்டா. எம் மனசு நெறஞ்சுபோச்சுடா, கண்ணா! எப்ப ஈஸ்வரன் கூப்படறானோ அப்ப நிம்மதியா போய்ச்சேருவேன். ஏன்னா, என் நெஞ்சு வெந்துடும்டா.” என்றவள் தயங்கி, என்னிடம் கேட்டாள். “கண்ணா, என்னால... [மேலும்..»]

கதைகள்

தகுதி யாருக்கு? [சிறுகதை]

தகுதி யாருக்கு? [சிறுகதை]

சாமி, நான் அல்லாருக்கும் நன்மையத்தானே செஞ்சேன்? அதுக்குப் பர்த்தியா காசு பணமா கேட்டேன்? இல்லையே சாமி! நாலு வார்த்தை அன்பாப் பேசுங்கனுதானே நானு நெனச்சேன். அது தப்பா சாமி? அண்ணே, நல்லா இருக்கீகளா, மாமா நல்ல இருக்கீகளா, பெரியப்பு நல்லா இருக்கீகளா, தாத்தா நல்லா இருக்கீகளானு இன்னிக்கு வரை ஒரு சொல்லுகூட ஒரு தபா என் காதுல விழலயே சாமி! அப்பிடி நான் என்ன பெரிய பாவத்தைச் செஞ்சிட்டேன்? பத்து வயசுலேந்து மத்தவகளுக்காத்தானே நானு கொல்லுப்பட்டறைலே வெந்தேன். அங்கே காஞ்சுபோன மனசுக்கு குளிர்ச்சியா, காதுக்கு இனிமையா ஏன்... [மேலும்..»]