கதைகள்

இலக்கியம், கதைகள், மஹாபாரதம்

ரிஷிமூலம் [சிறுகதை]

March 18, 2015
-
ரிஷிமூலம் [சிறுகதை]

கண்ணன் எதுவும் பேசவில்லை. சகுனியை மீண்டும் உற்று நோக்கினான். சகுனியால் கண்ணனின் கண்களை சந்திக்க முடியவில்லை. தன் பார்வையைத் திருப்பிக் கொண்டார். கண்ணன் ரகசியக் குரலில் "தெரியும்" என்றான். சகுனி இடி விழுந்தது போல திடுக்கிட்டார். அவரது கால்கள் நடுங்கின. தடுமாறிய அவரை கண்ணன் கைத்தாங்கலாக ஏந்திக் கொண்டான். அவரை ஒரு திண்டில் உட்கார வைத்து காலுக்கு ஒரு தலையணையையும் வைத்தான். சகுனியின் உடல் குளிர் ஜுரம் வந்தவனைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது. கண்ணன் ஒரு கிண்ணத்தில் பழச்சாறை ஊற்றி எடுத்து வந்து அவருக்கு புகட்டினான்.... [மேலும்..»]

கதைகள்

விடுகதையா… இந்த வாழ்க்கை ? [சிறுகதை]

February 3, 2015
-
விடுகதையா… இந்த வாழ்க்கை ? [சிறுகதை]

“ஒரு பக்கமா சாஞ்ச இரண்டு பொண்டாட்டிகாரன்... கவிழ்ந்துவிட்டான்...” இரண்டு விரலளவு சிறிய துண்டு வெள்ளை காகிதத்தில் நாலாவது படிக்கும் அந்தச் சிறுவன் பூங்காவின் பெஞ்சில் அமர்ந்தவாறு இந்த வரியை முத்து முத்தாய் எழுதிக்கொண்டிருந்தான். எழுதிவிட்டு பிழையேதும் இருக்கிறதா என்று இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தான்... ஸ்வாமிஜி பக்கத்திலிருந்த ஒரு பக்தரிடம் மும்முரமாய் பேசிக் கொண்டிருக்க, ஒரு சிலர் திவாகரை சூழ்ந்துகொண்டு நடந்த விபரங்களை கேட்டனர். திவாகர் கையிலிருந்த காகிதத்தை பிரித்து காட்டினார். படித்தவர்களுக்கு தூக்கிவாரி போட்டது... திருக்குமரன் கேட்டுக் கொண்டிருந்தவர்களுடைய ரியாக்ஷனுக்கேற்றவாறு ஸ்வாரஸ்யமாய் ஈடுபாட்டோடு கதைச் சொல்ல... சொல்ல... அவர்களுக்கு பரமதிருப்தியாயிற்று. இயக்குனர்... [மேலும்..»]

அனுபவம், இசை, கதைகள்

உண்மையான ரசிகன்

உண்மையான ரசிகன்

என்ன ராகம் என்று நினைவு இல்லை. ஆனால் அவர் அப்போது தான் ஆரம்பித்து 'உலாத்திக்' கொண்டிருந்தார். அப்படி என்றால் என்ன தெரியுமா? ராகத்தை, ஆலாபனையை ஆரம்பித்து, ஒரு நாலைந்து வட்டங்களுக்குள்ளேயே திரும்பத் திரும்ப வலம் வருவார்கள். ராகத்தின் ஒவ்வொரு கூடுதல் நெளிவும் சுளிவும் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பிக்கும். பின்னே? நாலைந்து மணி நேரம் அல்லவா, விடிய விடிய வாசிக்கணுமில்லையா?... திடீரென்று ஒரு சலசலப்பு! பார்த்தால் அங்கே வித்வானுக்கு முன்னால் மேடையின் எதிரில் நிற்கிறார் சீதாராம ஐயர். கண்ணிலிருந்து நீர் காவேரி மாதிரி வழிகின்றது. தலை இப்படியும் அப்படியும் பிள்ளையவர்களின் நாதஸ்வரத்திலிருந்து எழும் ஒவ்வொரு சங்கதிக்கும் ஆடுகின்றது....... [மேலும்..»]

அறிவியல், கதைகள், புத்தகம்

“7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வை

“7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வை

"அமைதி ஓர் ஆயுதம் ஷிவானி. ஆயுதம்னா தாக்குறதுக்கு மட்டுமில்லை, தற்காப்புக்கு வச்சிருக்கிறதும்தான். எந்த ஆயுதமும் இல்லாத நிலையிலும் உன் மன அமைதி, தெளிவுதான் உன்ன மனுஷனா வச்சிருக்கு. அமைதியா இருக்கும் வரை உனது கட்டுப்பாடு உன் வசம். உன் மன அமைதியை நான் குலைச்சேன்னா உன்னால் தெளிவாக சிந்திக்க முடியாது. உள்ளிருக்கும் மிருகம் வெளிவரும்"... தமிழில் இதுவரை சொல்லப்படாத கதைக்களனை எடுத்துக்கொண்டு அதை நாம் விரும்பி வாசிக்கும் வகையில் சுதாகர் கஸ்தூரி இந்தக் கதையைச் சொல்லி இருக்கும் விதம் அருமை...இந்திய ராணுவம் மற்றும் உளவுத்துறைகள் எப்படி பல துறைகளுடன் ஒன்றினைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன என்பதும், துப்பாக்கிகள், ஓநாய்கள்,... [மேலும்..»]

கதைகள், மகளிர், மஹாபாரதம்

பாஞ்சாலியின் புலம்பல்

பாஞ்சாலியின் புலம்பல்

ஆண் மட்டும்தான் பிடிக்காத பெண்ணை விலக்கி வைக்க வேண்டுமா, பிடிக்காவிட்டால் பெண்ணும் அவ்வாறு செய்வதில் என்ன தவறு என்று பெண்ணுக்குத் திருமண முறிவில் முதலிடம் வைக்க முயலுகிறீர்களே – ஒரு பெண், ஒருவர் பின் ஒருவராக, ஒன்றுக்கு மேற்பட்ட கணவருடன் வாழலாம் என்ற கருத்தை ஆதரிக்கிறீர்களே, ஐவரோடு வாழ்ந்தாலும் அவர்களுக்கு மட்டுமே என் மனதில் இடம் கொடுத்திருந்தேனே, யாரையும் தூக்கி எரியவில்லையே, அதை என் போற்ற மாட்டேன் என்கிறீர்கள்?... என் கணவன் குடாகேசி(அருச்சுனன்)யிடம் நான்கு முறை தோற்று ஓடியவனும், போர்க்களத்தை விட்டுப் பதினான்கு முறை ஓடியவனுமான கர்ணனை உயர்த்தியும், என்னவர் அருச்சுனனைத் தாழ்த்தியும் பேசுகிறீர்களே, பலவாறு ஊடகங்களிலும்,... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், கதைகள், மஹாபாரதம்

நாயினும் கடையேன் நான்.. [சிறுகதை]

நாயினும் கடையேன் நான்.. [சிறுகதை]

“என்ன இது? ஒரு நாய்க்கு இத்தனை பரிவா? என் நகையும், சகாதேவனின் அறிய ஓலைச் சுவடிகளும், அழகன் நகுலனின் ஒப்பனைப் பொருள்களும், விஜயனின் வில்லும், பீமனின் கதையும், உங்கள் ஈட்டியும் வேண்டாதபோது இந்த நாய் வேண்டுமா? இந்த நாயுமா நம்முடன் சொர்க்கத்திற்கு வரவேண்டும்? விட்டுவிட்டு வாருங்கள்!” என்று கத்தினாள் பாஞ்சாலி.... விண்ணவரில் சிறந்தவரே! பந்த பாசத்தத் துறந்து, திட சித்தத்துடன், தன்னலமின்றி எவன் மகாமேரு மலைமேல் எருகிறானோ, அவன் பூத உடலுடன் விண்ணுலகம் புகத் தக்கவன் என்று சாத்திரங்கள் பறைகின்றன. நானோ மனிதன். எனக்கு ஆறாம் அறிவான பகுத்தறிவு இருக்கிறது. எது அறம், எது நெறி... [மேலும்..»]

கதைகள், சைவம்

அடியெடுத்துக் கொடுத்த அம்பலவாணன்

அடியெடுத்துக் கொடுத்த அம்பலவாணன்

பொன்னம்பலத்துப் பிரகாரத்துக் கீழ்ச் சுவரில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கும் புடைப்புச் சிற்பங்களைக் கவனிக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.  சமணர்கள் கழுவேற்றப்பட்டதை காட்டும் சிற்பத்தைக் கண்டதும் அவர் முகம் சற்று சுருங்குகிறது. “சை! இந்தச் சிற்பம் இங்கு இருக்கவேண்டுமா?” என்று அவரையும் அறியாமல் அவரது வாய் முணுமுணுக்கிறது. “என்ன ஓய், சிவாச்சாரியாரே! எந்தச் சிற்பம் இங்கு இருக்கக் கூடாது என்று நீர் அருவருப்பு அடைகிறீர்?” என்ற சேக்கிழார் பெருமானின் குரல் அவரைத் திருப்பிப் பார்க்கச் செய்கிறது. “வணக்கம், சேக்கிழார் பெருமானே! திடுமென்று தாங்கள் இங்கு எப்படி?” என்று இழுக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார். “அது இருக்கட்டும், எந்தச் சிற்பம் உம்மை அருவருப்படையச்... [மேலும்..»]

கதைகள், மஹாபாரதம்

ஆயிரம் துச்சாதனர் [சிறுகதை]

February 19, 2014
-
ஆயிரம் துச்சாதனர் [சிறுகதை]

கர்ணன் காதில் எதுவும் விழவில்லை, அவன் தன் பாட்டில் போய்க்கொண்டிருந்தான். ஆனால் "மாமா! மாமா!" என்று அழைத்தபடி ஒரு அழகிய இளம் பெண் தன் நீலப்பட்டாடை சலசலக்க வேகவேகமாக ஓடி வந்து கர்ணனின் நீண்ட கை ஒன்றைப் பற்றினாள். பாதி அலங்காரத்தில் ஓடி வந்ததால் அவள் தலையில் சரியாக செருகப்படாத மல்லிகைச் சரம் கீழே கர்ணன் கால்களில் விழுந்தது. மீண்டும் புற உலகத்துக்கு வந்த கர்ணனின் முகம் அவளைப் பார்த்ததும் முதலில் தன்னிச்சையாக மலர்ந்தது. ஆனால் அடுத்த கணமே மீண்டும் அவன் கண்கள் சுருங்கின. அதற்குள் பானுமதியும் அருகில் வந்தாள்.... "இந்த சூதன் மகனை அங்க நாட்டு... [மேலும்..»]

கதைகள், மஹாபாரதம்

வீரனுக்கு வீரன் [சிறுகதை]

வீரனுக்கு வீரன் [சிறுகதை]

தன்னை இழிவு செய்தவர்தானே, எப்படியாவது தொலைந்து போகட்டும் என்ற எண்ணம் இல்லை அந்த மாவீரனுக்கு. பீஷ்மரைக் கொல்வதற்காக வீரத்திற்கு இழுக்கு வரும் செயலையா அர்ஜுனன் போன்ற மாவீரன் செய்தான் என்ற மனக்குமுறல்தான் இருந்தது... கர்ணன் சிறிது சிந்தித்தான். என்னதான் தன்னை இகழ்ந்து பேசியிருந்தாலும், மாவீரரான பீஷ்மப் பாட்டனாரிடம் வாழ்த்துப் பெற்ற பின்னரே போரை வழிநடத்த வேண்டும் என்ற அவா அவனுள் எழுந்தது. தவிரவும், தன் மனதில் புழுவாகக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு கேள்விக்குப் பதிலை அவரிடமிருந்துதான் தெரிந்து கொண்டாக வேண்டும் என்ற விருப்பமும் அவனை அம்புப் படுக்கையில் கிடக்கும் பீஷ்மப் பாட்டனாரிடம் நடத்திச்... [மேலும்..»]

கதைகள், மஹாபாரதம்

மீன் வாசம் [சிறுகதை]

January 27, 2014
-
மீன் வாசம் [சிறுகதை]

"அடே!" என்று திடீரென்று பீஷ்மர் கத்தினார். தலைமைப் பரிசாரகன் ஓடிவந்தான். "மீன் எங்கே? மீன் இல்லாமல் அரசியாருக்கு உணவு செல்லாது என்று உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கிறேன்?" என்று கோபப்படுவது போல கேட்டார். சத்தியவதி தலையைக் குனிந்து கொண்டாள்...... சரி என்னவோ அரண்மனை, நாகரீகம், பாரம்பரியம் என்கிறீர்களே, அவன் அம்மா ஏழு பிள்ளைகளைக் கொன்றது நாகரீகமா? எங்கள் குலத்தில் இப்படி ஒரு பெண் நடந்துகொண்டிருந்தால் அவளை எப்போதோ துரத்திவிட்டிருப்போம். கொலைகாரியின் பிள்ளை நாகரீகம், மரியாதை என்கிறான், போய் அவன் அன்னைக்கு கற்றுக் கொடுக்கச் சொல்லுங்கள் இந்த மரியாதையை எல்லாம்!.... [மேலும்..»]