நிழல் [சிறுகதை]

முறிந்த தொடையிலிருந்து ஓடிய ரத்தம் சேற்றோடு கலந்து சிவப்புக் கம்பளத்தில் படுத்திருப்பதைப் போல துரியோதனன் கிடந்தான். அஸ்வத்தாமன் துரியோதனன் அருகே அமர்ந்து அவன் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டான். கிருபர் ‘நான் சென்று பச்சிலைகள் கொண்டு வருகிறேன், கிருதவர்மரே, நீங்கள் எப்படியாவது ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்!’ என்று பரபரத்தார்… ஒன்றும் புரியாத அஸ்வத்தாமன் முழந்தாளிட, துரியோதனன் தொன்னையிலிருந்து நீரை எடுத்து அஸ்வத்தாமன் தலையில் ஊற்றினான்.
கிருபரின் மார்புக்கூடு விரிந்தது. அவரது மூச்சு கொல்லன் துருத்தி போல பெரிதாக எழுந்தது. அவரது கன்னங்கள் ரத்தம் பாய்ந்து சிவந்தன… பாண்டவர் படைகளின் கூடாரங்களில் விளக்குகள் அணைந்துவிட்டிருந்தன. நட்சத்திரங்களின் மெல்லிய ஒளி மேகக் கூட்டத்தின் வழியே மங்கலாகத்தான் தெரிந்தது…

View More நிழல் [சிறுகதை]

கட்டாய ஓய்வு [சிறுகதை]

‘சொல்வதற்கு என்ன இருக்கிறது மாமா? இதைச் சொல்லத்தானே நானே வந்தேன்! நீங்கள்தான் இந்த மூடனை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும்’ என்றான் கர்ணன். பிறகு துச்சாதனனின் கையில் இருந்த மதுக்குடுவையைப் பிடுங்கி தனக்கு ஒரு கோப்பை மதுவை ஊற்றிக் கொண்டான். ‘நான் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டேன்’ என்று துரியோதனன் உறுமினான்…. சகுனி எதுவும் சொல்லாமல் ஆகாயத்தை நோக்கினார். நவமியின் நிலவை மேகங்கள் மறைத்திருந்தன. நட்சத்திரங்கள் அங்கும் இங்கும் பிரகாசமாகத் தெரிந்தன. அனேகமாக எல்லா கூடாரங்களிலும் விளக்குகள் அணைந்து விட்டிருந்தன. பனைமரக் கொடி பறந்த பீஷ்மரின் கூடாரத்தில் மட்டும் இன்னும் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன…

View More கட்டாய ஓய்வு [சிறுகதை]

விழா அறை காதை (மணிமேகலை – 2)

முன்னொருகாலத்தில் கொடிகள் அசையும் தேர்ப்படையை உடைய சோழர்குல மன்னர் ஒருவரின் துன்பத்தைத் தீர்த்தது, நாளங்காடிப்பூதம் என்னும் பூதம். அந்த நாளங்காடிப்பூதம் இந்திராவிழா எடுத்து, அந்த இந்திரனை வணங்காத மக்களைத் தனது கோபத்தால் சிவந்த வாயினில், கோரமாக விளங்கும் பற்களினால் துன்பம் விளைவிக்கும். அதேபோல சதுக்கப்பூதம் என்றொரு பூதமும் இந்த நகரில் உள்ளது. அந்தச் சதுக்கப்பூதம் கையிலுள்ள பாசக்கயிற்றினை வீசி இந்தப் பழமைவாய்ந்த புகார்நகரில் பாவம்செய்பவர்களைப் பிடித்து உண்ணும்.

View More விழா அறை காதை (மணிமேகலை – 2)

வஞ்சகன் கண்ணன் [சிறுகதை]

மிருகநயனியின் குரல் உயர்ந்து கொண்டே போனதை அவளே அறியவில்லை. ஆனால் இறக்கமாட்டார் என்று அவள் சொன்னது பெருங்கூவலாகவே முடிந்தது. மிருகநயனியின் கண்ணீர் விசும்பல்களாக மாறும் வரை கூடாரமே நிசப்தமாக இருந்தது. அவளை திரௌபதி கொஞ்சம் தயக்கத்தோடு அணுகி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். அர்ஜுனன் தலைகுனிந்து கூடாரத்தின் அடித்தள மண்ணையே பார்த்தபடி நின்றான். ஒரு சுற்று சுற்றி வந்த மிருகநயனியின் பார்வை கடைசியில் கண்ணனிடம் நின்றது. கண்ணன் முகத்தின் புன்னகை சிறிதும் மாறவில்லை. சஞ்சலமே இல்லாத கண்களுடன் அவன் மிருகநயனியை நோக்கினான். அவன் புன்னகை மிருகநயனிக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது. அவனைப் பார்த்து கண்ணா என்று அழைத்தாள்… கால் போன போக்கில் நடந்த கண்ணன் சில நாழிகைகள் கழித்தே தன் கூடாரத்துக்குத் திரும்பினான். திரும்பும் வழியில் ஒரு சூதன் பாடிக் கொண்டிருந்ததை தள்ளி நின்று கேட்டான்…

View More வஞ்சகன் கண்ணன் [சிறுகதை]

பாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)

ஏன் மணிமேகலை என்ற கேள்வி எழலாம். மணிமேகலை ஒன்றுதான் அது வாழ்ந்த காலத்தில் அன்றாட வாழ்க்கைமுறை எப்படி இருந்தது என்பதைப் பதிவு செய்த காவியம். குறிப்பாகப் பெண்களின் நிலையையும், பெண்களை வெறும் உடலாகவே பார்க்கும் ஆடவர்களின் தன்மையையும் அறச்சீற்றத்தோடு எடுத்துச் சொல்கிறது. இது புத்த மதத்தின் சிறப்பைச் சொல்லவந்த காவியம்.. பண்டித மொழியிலும் இல்லாமல், கொச்சையாகவும் இல்லாமல் –ஆங்கிலத்தில் readability என்பார்கள்-அப்படியொரு வாசிப்புத் தன்மையான நடையில் மணிமேகலையை எழுதலாம் என்று இருக்கிறேன். கதைப் போக்கில் தடங்கல் இருக்காது எனினும் சில மௌன இடைவெளிகளில் என்னுடைய கருத்துக்களைச் சேர்த்து கதை சொல்லப்போகிறேன்… அகத்தியர் என்ற முனிவரின் மேற்பார்வையில் காவிரி தமிழ் நிலத்தில் பாயும் செய்தி சொல்லப்படுகிறது. சம்பாபதி என்ற பெண்தெய்வம் காவிரியைவிட வயதில் மூத்தவள் என்ற தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பாபதி என்ற தெய்வம் மேருமலையை விடுத்து தென்திசைப் புலம் பெயர்ந்த குறிப்பும் உள்ளது. இதன் காரணமோ, பின்னணியோ கூறப்படவில்லை…..

View More பாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)

அன்னையர் தினம்

ஒருதாய் எட்டு குழந்தைகளைக் காப்பாற்றுவாள். ஆனால் அந்த எட்டுக் குழந்தைகளும் சேர்ந்துகூட அந்தத் தாயைக் காப்பாற்றமாட்டார்களாம். முன்பெல்லாம் மதர்ஸ் டே என்ற ஒன்றைப்பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. இப்பொழுது வருஷம் 365 நாட்களுமே ஏதாவது ஒரு டே கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மீடியாவில் ‘மதர்ஸ் டே’ ஆரவாரமாகப் பேசப்பட்டாலும் மறுபக்கம் முதியோர் இல்லங்கள்! மதர்ஸ் டேயில் அக்கறையும் ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தால் முதியோர் இல்லங்கள் ஏன்?

View More அன்னையர் தினம்

அடுத்த வீடு

மாமா அடிக்கடி புகையிலை போடுவார். நான் அங்கு போகும்போதெல்லாம் மறக்காமல் அரையணா சாமான் (புகையிலை) வாங்கித்தரச் சொல்லுவார். சிலசமயம் காசும் தருவார். சில சமயம் ”நான் காசு தந்தேனே கார்டு எங்கே? அரையணா சாமான் எங்கே?” என்று கேட்பார். வாயில் வந்த பொய்யைச் சொல்லி சமாளிப்பேன்.

View More அடுத்த வீடு

கால்குலஸ் வாழ்க்கை

அவர் புன்னகைத்தார். “ நாலு மார்க்” என்றார். ராகவன் சாரின் ஒரு சிறப்பு அம்சம் அது என்று சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர் என்னைப் பார்த்தார். “ நீ அந்த சியாமளாவைப் பார்த்து ஜொள்ளு விடுவதை நான் பாத்திருக்கேன். அந்த காதலை ஜி g ந்னு வைச்சுக்குவோம். சியாமளாவின் புன்னகையை எக்ஸ் Xனு வைச்சுக்குவோம்” … வீட்டின் உட்புறம் , ஒரு அறையில் கட்டிலின் அருகே நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார். உடல் வற்றிப்போய், கைகளில் நரம்புகள் புடைத்து, அசாதாரணப் பளபளப்பில் தோல் மினுங்க, அவரைப் பார்க்கையில் என்னமோ செய்தது….

View More கால்குலஸ் வாழ்க்கை

அம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]

அந்த வீட்டு மாமா வருகிற கார் சத்தம் தெரு முனையில் கேட்டவுடனேயே மாமி பேச்சை அவசர அவசரமாக நிறுத்தி விட்டு “வரேன் மாமி” என சன்னலை விட்டு ஓடுவாள்.இது அம்மாவுக்கும் எங்களுக்கும் பெரிய ஆச்சரியம், ஏனெனில் எங்கள் அப்பா வருகிறாரென்று நாங்கள் எந்த வேலையையும், விளையாட்டையும், பேச்சையும் பாதியிலே நிறுத்தியதேயில்லை… ஒரு விதத்தில் மாமாவும் நல்லவர்தான். மாமியும் பாவம் பரம சாது. ஆனால் அவர்களின் உறவின் இழையில் நுண்ணிய சிக்கல்கள். சராசரி நல்ல தனத்தொடு கூடிய ஒரு ஆண் + சராசரியான ஒரு நல்ல பெண் = ஒரு சராசரி சந்தோஷமான தம்பதிகள் என்ற சமன்பாடு சரியாக இருக்கின்ற தருணங்கள் வெகு குறைவே என்ற ஞானம் எனக்கு பிறந்தது… நான் சொன்னேன் ”அந்த மாமி பாவம் இல்ல!!” அண்ணா சொன்னான் “போடி பாவமும் இல்ல ஒண்ணும் இல்ல! பெரிய பங்களாவில இருங்காங்க. கார் வச்சுண்டு இருக்காங்க பையன் கான்வெண்டில படிக்கறான் ஊட்டியிலயோ எங்கயோ, நம்மளை மாதிரி கார்பரேஷன் ஸ்கூலா என்ன? ஜாலியாத்தான் இருக்காங்க. நாமதான் பாவம்!”….

View More அம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]

ஆதிசங்கரர் படக்கதை — 6

நான் பூமியல்ல, ஆகாயமல்ல, நீருமில்ல, நெருப்புமல்ல. காற்றுமல்ல, மனமுமல்ல, உணர்வுமல்ல. அனைத்தையும் கடந்த சிவம்!

View More ஆதிசங்கரர் படக்கதை — 6