மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்

உண்மையை ஒத்துக் கொள்வதென்றால் மகாபாரதம் எனக்கு உலகத்தின் தலை சிறந்த இலக்கியம். தர்க்கபூர்வமான, அறிவுபூர்வமான அணுகுமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது அந்த உணர்வு. ஆழ்ந்த பித்து என்றே சொல்லலாம்…மகாபாரதத்தை மூலமாக வைத்து எழுதப்பட்ட புனைவுகள், எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு soft corner உண்டு. அப்படிப்பட்ட எல்லா இலக்கிய/கலை முயற்சிகளையும் ஒரு பட்டியல் போட வேண்டும் என்று எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசையும் உண்டு. இவை சுருக்கங்களாக இருக்கலாம், இந்திய மொழிகளில் பாரதத்தைக் கொண்டு போகச் செய்த முயற்சிகளாக இருக்கலாம், மறுவாசிப்புகளாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அவற்றை ஒரு பட்டியல் போடும் முயற்சியே இந்தக் கட்டுரை…

View More மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்

வியாசன் எனும் வானுயர் இமயம்

வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இந்த நான்கு “வியாசர்களும்” ஒருவராக இருப்பது என்பது முற்றிலுமாக சாத்தியமில்லாதது. கிருஷ்ண துவைபாயன வியாசர் என்பவர் முழுமையான ஒரு தனித்த வரலாற்று ஆளுமை என்பது மகாபாரதத்தை ஆழ்ந்து வாசிக்கும் எவருக்கும் கிடைக்கும் சித்திரம். வேதகால கருத்தாக்கங்களின் மிக இயல்பான நீட்சியாகவே மகாபாரதம் உள்ளது… “கைகளைத் தூக்கிக் கொண்டு கதறுகிறேன். ஆனால் கேட்பார் ஒருவருமில்லை. அறத்திலிருந்து தான் பொருளும், இன்பமும் எல்லாம். ஆனால் அதை ஏன் மனிதர் பின்பற்றுவதில்லை? காமத்தாலோ பயத்தாலோ பொறாமையாலோ உயிர் போகும் என்ற நிலையிலோ கூட தர்மத்தை விட்டு விடாதீர்! தர்மம் என்றும் உள்ளது. இன்ப துன்பங்கள் அநித்தியமானவை…

View More வியாசன் எனும் வானுயர் இமயம்

திரௌபதியின் கேள்வி

அநியாயம் எனும் நெருப்பால் சுடப் பட்டு, துயரம் இழைக்கப் பட்டு, நீதிமான்களின் சபையில் வந்து தங்கள் உரிமைகளைக் கேட்டு முறையிடுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள். அந்த முறையீட்டுக்கு பதிலளிக்காமல் இருப்பதோ, பொய்யாக பதிலுரைப்பதோ இரண்டுமே தரும துரோகம்…. எது தர்மம், எது அதர்மம் என்று முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது? அரசாட்சியின் மூலமாக, சாஸ்திரங்களின் மூலமாக அந்த அதிகாரம் வழங்கப் பட்டவர்கள் முறை தவறும் போது, அநீதி இழைக்கும் போது, ஒரு சாமானியன் என்ன செய்வது?…. உலகமயமாக்கல் என்னும் பகடையாட்டத்தில் நாமே தேர்ந்தெடுத்த நமது அரசாங்கம், நம் ஒவ்வொருவரையும் பணயப் பொருளாக வைக்கும் போதெல்லாம் அந்தக் கேள்வி நம் முன் வந்து நிற்கிறது…

View More திரௌபதியின் கேள்வி

தீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்?: ஓர் எதிர்வினை – 1

அண்மையில் எம்.டி. முத்துகுமார சுவாமி எனும் தமிழக அறிவுஜீவி இந்து மூல நூல்கள் நான்கு வர்ணத்தாருக்கு அப்பாற்பட்ட இனக் குழுக்களை தன் மனிதர்களாகவே கருதவில்லை; அவை தீண்டாமை குறித்துப் பேசின என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு சான்றாக, மகாபாரதத்தில் உள்ள அரக்கு மாளிகை சம்பவம், காண்டவ வன அழிப்பு, கடோத்கசன் மரணம் ஆகிய சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தார். .. இதனை மறுத்து, உண்மையில் இச்சம்பவங்கள் வியாச பாரதத்தில் சித்தரிக்கப் பட்டுள்ள விதம் என்ன, இவற்றில் உள்ள மானுடவியல், சமூக வரலாற்று பார்வைகள் என்ன என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதற்காகவே இந்த எதிர்வினை…

View More தீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்?: ஓர் எதிர்வினை – 1

புனிதமான போர்க்களம்

“ கீதை எப்போது சொல்லப்பட்டது என்பது நமக்கு முக்கியமில்லை. அதில் என்ன சொல்லபட்டிருக்கிறது என்பது தான் முக்கியம்,” என்ற விவேகானந்தரின் அற்புதமான வாசகம் நினைவிற்கு வந்தது.

View More புனிதமான போர்க்களம்

மஹாபாரதத்தில் ஒரு நாள்

கேவலம் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே யாராலும் நாட்டின் அரசனாக முடியாது. ராஜசிம்மாசனத்தின் மீதுள்ள அதிகாரம் என்பது பிறப்பின் அடிப்படையால் மட்டுமல்ல, செயல்பாடு யோக்கியதை போன்றவைகள் வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். ராஜா என்ற அதிகாரம் தன் குடும்பத்திற்காகவும் மகனுக்காகவும் அல்ல. அவனது தேசம் மற்றும் நாட்டின் விசுவாசிகளுக்காகத்தான்.

View More மஹாபாரதத்தில் ஒரு நாள்

கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

இந்தியாவைப் பொருத்தவரை கிருஷ்ணன் ஒரு மிக முக்கியமான அம்சம். கலாசார மையம். எவ்வித அறுபடுதலுமற்ற தொடர்ச்சியான ஆளுமை… இன்றைய மேலாண்மை சார்ந்த பல்வேறு நேர்மறைக் கூறுகளை நாம் கண்ணனிடம் காணமுடியும். அந்த அளவிற்கு கண்ணனுடைய தாக்கம் அறிவுபூர்வமான தளத்தில் இருந்ததோடு, நடைமுறை வாழ்க்கையிலும் இயைந்து கிடக்கிறது…

View More கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

மஹாபாரத உரையாடல்கள் – 007 கர்ணன்

நான் அர்ஜுனனோடு போர் தொடுக்க விரும்புகிறேன். ஆகவே எனக்கு பிரமாஸ்திரப் பயிற்சி அளியுங்கள்’ என்று குருவிடம் ஒரு சீடன் போய்க் கேட்கிறான். ‘உங்களுடைய எல்லாச் சீடர்களும் உங்களுடைய மகனைப் போலத்தானே நீங்கள் கருதுகிறீர்கள், அன்பு செலுத்துகிறீர்கள்’ என்று சொல்லி, தனக்குப் பயிற்சி அளிக்க வேண்டுகின்ற கர்ணன், ஒன்றைக் கவனித்தானோ?…

View More மஹாபாரத உரையாடல்கள் – 007 கர்ணன்

மஹாபாரத உரையாடல்கள் – 006 கர்ணன்

திறமையைக் காட்டுகிறேன் என்று வந்த சமயத்தில் யாரும் ‘அப்பன் பேர் என்ன, நீ என்ன பிறப்பு’ என்று கேட்கவில்லை. ‘என்கூட ஒண்டிக்கு ஒண்டி வா’ என்று அறைகூவும்போது, இளவரசனோடு மோதவேண்டுமானால், உன் தகுதி என்ன என்று கேட்டார்கள். கேட்கத்தான் கேட்பார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்த ஜனநாயக சூழலை மறந்துவிட்டு, அரசர்கள் ஆண்ட அந்த சூழலுக்கு மனத்தை எடுத்துச் சென்று, அந்தச் சூழலில் இந்தக் கணத்தை நிறுத்திப் பாருங்கள்.

View More மஹாபாரத உரையாடல்கள் – 006 கர்ணன்

மஹாபாரத உரையாடல்கள் – 005 கர்ணன்

இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். பாஞ்சாலனுடைய பிள்ளையான திருஷ்டத்யும்னனும் துரோணருடைய சீடன்தான். தன்னைக் கொல்வதற்காகவே பாஞ்சாலன் யாகம் செய்து பிறந்தவன் இவன் என்பது தெரிந்தே துரோணர் அவனைப் பயிற்றுவித்தார். இதற்குள் போவது, துரோணருடைய குணசித்திர அலசலாகிப் போகும் என்பதால் இப்போதைக்குத் தவிர்க்கிறேன்.

எதற்காக இதைச் சொன்னேன் என்றால், தன்னைக் கொல்வதற்காக பிறந்த பிள்ளைக்குக்கூட வித்தை பயிற்றுவிக்க துரோணர் மறுக்கவில்லை. அவன் குருவம்சத்துக்கு நெருக்கமானவரின் பிள்ளை என்ற காரணம் ஒன்றே அவருக்குப் போதுமானதாக இருந்தது.

View More மஹாபாரத உரையாடல்கள் – 005 கர்ணன்