Payday loans Cialis online
payday loans Car insurance

தத்துவம்

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், தத்துவம்

பாரதியின் சாக்தம் – 2

பாரதியின் சாக்தம் – 2

வாழ்வின் மூர்க்கத்தையும் கொடூரத்தையும் அழிவையும் ஸர்வநாசத்தையுமேகூட தெய்வத்தின் பிரதிமையாய்க் காணும் மரபு வங்காளத்தில் நிலவுவது சாக்தத்திற்கான வலுவான வேராகும்... 'நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?' என்று கேட்டு வந்த நரேந்திரரை.. பல ஆண்டுகளுக்குப் பின் அதே 'நரேனைக் காளிக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். நரேன் காளியை ஒப்புக்கொண்டு விட்டான் தெரியுமோ?' என்று ஏதோ தன் பிள்ளை பெரிய பரிட்சையில் பாஸானதைப் போல வருவோர் போவோரிடம் சொல்லிக்கொண்டிருந்த கிழவராக இருந்தவரும் ஸ்ரீராமகிருஷ்ணர்... [மேலும்..»]

ஆன்மிகம், தத்துவம்

பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 3

October 12, 2010
-
பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 3

ஒருவரை நல் வழியில் கொண்டு வருவதற்கு, மரண பயத்தைப் போன்றதொரு சாதனம் வேறு கிடையாது. ஞானம் பெறுவதற்கும், நாம் உலகில் நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்வதற்கும் அது ஒரு பயனுள்ள சாதனம் தான்.... "நான்" எனும் கணவன் இறந்துவிட்டால் அவனது மூன்று மனைவிகளும் கைம்மை அடைவதைப்போல, கர்த்தா நான் இல்லை என்றால் கர்மம் மூன்றும் நம்மை ஒட்டாது... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், தத்துவம்

பாரதியின் சாக்தம் – 1

பாரதியின் சாக்தம் – 1

பெண்ணின் சுதந்திரம் பெரிதும் முடக்கப்பட்டக் காலத்திலேயே கூட, பெண்ணின் சுதந்திர வெளியை முழுதும் உள்வாங்கிய உணர்வு பூர்வமான வழிபாடு அவனால் சாக்தமாகப் பேணப்பட்டு வந்திருப்பது பெரும் சிறப்பாகத்தான் இருக்கிறது... ஒரு கையால் வைணவத்தையும், ஒரு கையால் சைவத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும். 'இருவழிகளையும் ஒரு பார்வையால் நோக்கும்' தரிசனம் சாக்தம் எனலாம்... விவேகானந்தரிடம் ஸ்ரீராமகிருஷ்ணர், "...மக்களுக்கு ஏற்ற வழியன்று வாமாசாரம் போன்ற முறைகள். முறையான பக்தி நெறியே மக்களுக்கு நன்மை பயப்பது,” என்றாராம். [மேலும்..»]

அறிவியல், இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில், தத்துவம்

விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்

விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்

மரணம் மட்டுமே மனிதத்தின் ஒரே நிச்சயமான விஷயம். இது மனிதனை வாழவே விடாமல் நிலைகுலையச் செய்யும்... விதி ஒரு மரப்பாச்சி பொம்மையாக- குறுகிய ஓர் உளவியல் ஆறுதலுக்காக- வைத்திருக்கலாமே தவிர அதனை வாழ்க்கை முழுவதும் வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல. மனிதனின் அடிப்படட உணர்ச்சியான ஞானத்தேடலில் அவன் விதி எனும் மரப்பாச்சி பொம்மையைத் தூக்கி எறிந்துவிட்டு முன்னேற வேண்டும்... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தத்துவம், வைணவம்

அச்சுதனின் அவதாரப் பெருமை

அச்சுதனின் அவதாரப் பெருமை

பிரம்மத்தின் மேன்மையை மனதில் வைத்துக் கொண்டாலொழிய பிரம்மம் எடுக்கும் அவதாரங்களின் மகிமை புரிவது கடினம். நிற்க, இங்கு ஒரு நியாயமான ஐயம் எழக்கூடும். "நமக்கு எட்டாத இந்த பிரம்மத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்வதால் ‘நமக்கு என்ன பயன்? அப்படி ஒரு பொருள் இல்லை' என்று கூறிவிட்டு நிம்மதியாக இருக்கலாமே?" என்று கேட்கலாம். [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், சைவம், தத்துவம்

பக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்

பக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்

சத்தியத்தை - சிவத்தை - சுந்தரத்தை, சுடுகாட்டு அரங்கின் மைய நடனமாக அனுபவிக்கின்றது அம்மையின் மனம்.. புழுதி அள்ளி அவிக்க முயல்கின்றது பேய்! பூச்சுக்கள் உதிர்கையில், சாயம் வெளுக்கையில், புழுதி அள்ளி அவிக்க முயலும் கைகளும் நம் கைகளே என்பது புலனாகின்றது... ஒப்பனைகளின் அழிவில் பேயரங்கமும், அதன் மைய நிகழ்வாம் அப்பனின் ஆட்டமும் தெரிகின்றன. அந்த ஆட்டமே பிரபஞ்சத்தின் இயக்க மையம்; இலட்சிய மையம். [மேலும்..»]

சமூகம், தத்துவம், வரலாறு

சுய அறிதலும் வரலாற்று அறிதலும்

சுய அறிதலும் வரலாற்று அறிதலும்

புனிதமற்ற வாழ்க்கைதான் மானுடருக்கு லபித்திருக்கிறது. புனிதம் என்பதே ஒரு ஆதர்சம். இல்லாதது என்பதால்தான் அத்தனை கவர்ச்சியாக அது தெரிகிறது...நம் தனிவாழ்வின் வரலாற்றுச் சிறையில் இருந்தே நாம் ஒவ்வொருவரும் உலகை நோக்குகிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்... சமத்துவம் என்ற பெயரில் நிறையப் புரட்டு வேலைகள் செய்து பதவிக்கு வந்து வேறொரு அடுக்கு முறையை மக்கள் மீது திணித்த பல சர்வாதிகாரிகளை நாம் மார்க்சியம், நாசியிசம், ஃபாசிஸம், கிருஸ்தவம், இஸ்லாம் என்ற செமித்தியச் சிந்தனையின் பல வடிவங்களில் உலகில் பார்க்கிறோம்... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம், தத்துவம்

கடவுளின் பணித்திட்டம்

கடவுளின் பணித்திட்டம்

உயிர்களைவிட்டுக் கணநேரமும் பிரியாமை அவனது குறிப்பு என மாணிக்கவாசகர் அனுபவித்துக் கூறுகின்றார். ‘உய்ய என் (உயிர்களின்) உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா’, ‘மருவி எவ்வுயிரும் வளர்ப்போன் காண்க’ என்பன போலத் திருவாசகத்தின் பல இடங்களில் இறைவன் உயிர்களோடு கலந்து நின்று பிரியாமல் இருப்பதன் திருக்குறிப்பை அதாவது ‘கடவுளின் பணித்திட்டத்தை’ மணிவாசகர் அறிந்து கூறுகின்றார். [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம், தத்துவம்

அருணையின் கருணை

அருணையின் கருணை

ஒரு சாதாரணமான இரும்புக் குண்டு காந்த சக்தியுடைய இரும்புக் குண்டைச் சுற்றி வந்தால் அச்சாதாரண இரும்புக் குண்டு காந்தக் குண்டாக மாறுவதுபோல், சாதாரண மனம் (அதாவது சக்தி) சிவமாகிய திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் முடிவில் மனம் சிவத்தில் கலந்து சிவமேயாகும்... பக்தியுடன் ஒருமைப்பட்ட மனதுடனும், இறைவனிடத்தில் நம் தேவைகளைப் பற்றி ஏதும் விண்ணப்பிக்காமல் கிரி வலம் செய்தோமானால் நம் தூல வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் தேவையான பொருளும், அருளும் நம் பக்குவத்திற்கு ஏற்ப கொடுத்தருளுவார். [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம், தத்துவம்

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 2

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 2

வீடு திரும்பும் வழியெல்லாம் மனதில் தோன்றி பின் நிஜத்தில் நடந்த நிகழ்ச்சிகளையே பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு புதிது... நடந்ததை நடந்தபடியாக ஒரு சாட்சியைப்போல் பார்த்துக் கொண்டிருப்பதில் தவறேதுமில்லை; தான் நினைத்ததை நடத்துவதுபோல் எண்ணுவதுதான் தவறு... இறைவனே இல்லை என்றவர்கள், ஒருவனே தேவன் என்கிறார்கள், ஏழையில் காண்போம் என்கிறார்கள். மற்றும் “ஓம் சூர்யாய நமஹ:” என்பதற்கு “ஞாயிறு போற்றுதும்” என்கிறார்கள் அல்லவா? [மேலும்..»]