தத்துவம்

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தத்துவம்

கடவுள் என்றால் என்ன? – 2

கடவுள் என்றால் என்ன? – 2

சுவாமி தயானந்த சரஸ்வதியின் விளக்கங்கள் - ஈஸ்வரன் பௌதீக ஒழுங்கு முறைகளிலும், உயிரியல் ஒழுங்கு முறைகளிலும் வியாபித்து இருக்கின்றார். எனவே உயிரியலைப் பற்றித் தெரிந்துகொள்வது ஈஸ்வரனை பற்றி தெரிந்து கொள்வதே ஆகும். அதனால் இதுவும் புனிதமானது... என்னடா ஒரு எலிக்கு வேலை செய்யும் மருந்து நமக்கு அந்த வேலையை செய்வதா ! நாம் எலியைவிட மட்டமா என்பது உண்மை அல்ல. முத்துக்களை தாங்கி பிடிக்க அதன் இடையே கோர்க்கப்பட்ட நூல் இழைபோல் பிராணன் என்பது எல்லா உயிரினிடத்தும் உள்ளே இருந்து உயிருடன் இருக்கும் வரையில் தாங்கிப்பிடிக்கிறது... தர்மம் என்பது மனிதனுடைய... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தத்துவம்

கடவுள் என்றால் என்ன? – 1

கடவுள் என்றால் என்ன? – 1

சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் விளக்கங்கள் - வேதம் இங்கே இருப்பது ஒரு ஈஸ்வரன் என்று சொல்லவில்லை, இங்கே இருப்பது எல்லாமுமே ஈஸ்வரன்தான் என்கிறது... ஒரு பௌதீக பேராசிரியர் சக்தி-பொருண்மை என்பதை கூறுகையில் E=mc2 என்கிறார். ஒரு எம்.எஸ்.சி. மாணவன் அவர் வகுப்பில் எழுந்து எனக்கு உங்கள்மேல் நம்பிக்கை இருப்பதால் எனக்கு அந்த சமன்பாடு பற்றி புரியாவிட்டாலும் பரவாயில்லை என்பது எப்படி முட்டாள் தனமோ அப்படித்தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பதுவும். இந்த அகிலமே ஈஸ்வரன் தான் என்றால் அது வெறும் நம்பிக்கை சார்ந்தது அல்ல; நாம் துருவித் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்ள... [மேலும்..»]

ஆன்மிகம், தத்துவம், தொடர்

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5

January 1, 2013
-
ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5

அது எப்படி மனத்தை மனத்தால் அறியமுடியும் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றினால் அது நியாயமான கேள்விதான். அதனை விளக்க வேதாந்திகள் ஒரு உதாரணம் சொல்வார்கள். ரமணரும் 'பிணம் சுடு தடி போல்' என்ற அந்த உவமையைக் கூறுகிறார். மற்ற கட்டைகளோடு பிணத்தையும் நன்கு எரியவிட்ட கழியும் சேர்ந்து தானும் எரிந்துவிடும். இப்படியாக மனத்தின் மூலத்தை அறிவிக்க உதவிய மனம் தானும் அழிந்து போவதை மனோ நாசம் என்பார்கள்.... தடி ஒன்றை எடுத்துக்கொண்டு தன்னை நோக்கி ஒருவன் வருகிறான் என்றால் ஓடிவிடப் பார்க்கும் ஒரு பசு, அவனே தடிக்குப் பதிலாக புல்லை எடுத்துக்கொண்டு வருகிறான் என்றால் அவனை நோக்கித்... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தத்துவம்

[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்

December 21, 2012
-
[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்

ருத்ரன் என்பதன் பொருள் “அழச்செய்பவன்” என்பதாகும். உயிர்களை அழச் செய்வதன் மூலம் அவைகளைப் பண்பாடுறச் செய்வது ருத்ரனின் ஒப்பற்ற செயலாகிறது. உலகத்தவர் அழுகின்ற அழுகையின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தால் அது துன்பத்தினை தவிர்த்து இன்பத்தினை நாடுவதாகவே இருப்பதைக் காணலாம்.... அழிந்து போகும் உலகப் பொருட்களை நாடி ஓடும் மனிதன் ஒருக்காலும் நிலைத்த இன்பத்தினைப் பெறமாட்டான். அதற்கு மாறாக அவன் மேலும் மேலும் துன்பத்தில் அகப்பட்டுப் பிறவிப் பெருங்கடலினூடே தத்தளிக்க வேண்டியதுதான்... யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் - ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே... [மேலும்..»]

ஆன்மிகம், தத்துவம், தொடர்

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 4

December 5, 2012
-
ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 4

அறியாமை என்பதற்கு ஒரு தனியான இருப்பு கிடையாது. அறிவு இல்லாமல் இருப்பதுதான் அறியாமை எனும் நிலை. அறியாமையை அகற்றுவதுதான் அறிவைப் புகட்டுவது என்றாகிறது.... கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங் கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் சீவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்... . கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படாததால், அவைகள் அஞ்ஞானத்தை நீக்குவதில்லை. ஞானம் ஒன்றே அறியாமையைப் போக்கும்.... [மேலும்..»]

ஆன்மிகம், தத்துவம், தொடர்

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 3

October 31, 2012
-
ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 3

ஒரு கர்மத்தைச் செய்வதால் அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைப்பதை நாம் பெறுவது ஆப்ய கர்மம்; கர்மம் செய்வதால் இப்போது இல்லாவிட்டாலும் வேறொரு காலத்தில் கிடைக்கும் என்பது உத்பாத்ய கர்மம்; ஒரு வடிவத்தில் இல்லாவிட்டால் உரு மாற்றி வேறொரு வடிவத்தில் காணலாம் என்பது விகார்ய கர்மம்; ஒரு பொருளின் மேல் உள்ள அசுத்தத்தை நீக்துவதம்மூலன் அந்தப் பொருளை நன்கு காணக்கூடியது சம்ஸ்கார்ய கர்மம்.... இருக்கும் ஆன்மாவை மறைக்கும் உபாதிகளை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் முயற்சிகள் எல்லாமே... [மேலும்..»]

ஆன்மிகம், தத்துவம், தொடர்

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2

October 17, 2012
-
ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2

இறக்காமல் இருப்பதற்கு பிறக்காமல் இருக்க வேண்டும்; அது எப்படி என்று யோசிப்பவன்தான் முமுக்ஷூ என்ற சாதகன்... ஒன்றை அறிவது மட்டுமல்லாது, அந்த அறிவைப் பற்றி அறிவது என்பதில் மனிதன் மற்ற ஜீவராசிகளிடம் இருந்தும் வித்தியாசப்படுகிறான்... தவங்கள் செய்வதாலேயே ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றிய அறிவு வளர்ந்துவிடாது. ஆனால் அவை ஆன்மாவைப் பற்றிய அறிவை வளரவிடாது தடுக்கும், நமது முந்தைய பாவச் செயல்களால் நாமே வளர்த்துவிட்டுள்ள, திரைகளை அகற்ற உதவும்... நாம் ஆன்மாவைப் பற்றிய போதத்தின் முதல் படியில் இருக்கிறோம். [மேலும்..»]

ஆன்மிகம், தத்துவம், தொடர்

[பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்

October 12, 2012
-
[பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்

அவதார புருஷர்கள் பெரிய கப்பல் போன்று மற்றவர்களையும் கரையேற்றுவர். சச்சிதானந்தம் பிறப்புரிமை என்பதை ஒவ்வொருவரும் அறியவேண்டும். செயல் அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைக்கிறவர்கள், தங்களுடைய பிறப்புரிமையைப் பெறத் தகுதியுடையவர்களாகிறார்கள்... நம்முடைய கோட்பாட்டினின்று மாறுபட்டுள்ளது என்ற ஒரே காரணம் பற்றி, பிறர் கோட்பாடுகளை ஒதுக்குதல், புறக்கணித்தல் பொருந்தாது... அன்பு செய்து வாழும் தன் மனைவியைத் தன்பாற்பட்டவள் என்ற காரணம்பற்றி ஒருவன் தாழ்வாக எண்ணுவானாயின் அவனினும் குறைபாடுடையவன் எவன்? [மேலும்..»]

ஆன்மிகம், தத்துவம், தொடர்

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 1

October 8, 2012
-
ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 1

எப்போதும் இருக்கும் சூரியனை மேகம் மறைப்பதால் சூரியன் இல்லை என்று சொல்வது எப்படித் தவறோ, அதே போன்று பிரம்மத்தைப் பற்றி அறியாததால் பிரம்மம் இல்லை என்று சொல்வது தவறு... பகவான் ரமணர் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும் பின்னணியில் காரணம் இருக்கிறது. பகவான் தானாக எழுதியவை மிகக் குறைவு. முஸ்லீம் அன்பர் ஒருவரால் உந்தப்பட்ட ஒரு ரசமான பின்னணியுடன் இந்த "ஆன்ம போதம்" தமிழில் உருவெடுத்தது. சங்கரரின் இந்த நூல் முழுவதும், 69 சுலோகங்களும் தமிழ் வெண்பாக்களாக பகவானால் எழுதி முடிக்கப்பட்டன... தவங்களினால் பாவம் தவிர்ந்தவராய், சாந்தி அவிர்ந்தவராய், ஆசை அறுந்தாராய் .... ... [மேலும்..»]

ஆன்மிகம், தத்துவம், தொடர், வேதம்

[பாகம் 19] வண்டிக்கார ரிஷி பகர்ந்த பிரம்மஞானம்

October 5, 2012
-
[பாகம் 19] வண்டிக்கார ரிஷி பகர்ந்த பிரம்மஞானம்

ஒரு கிராமத்தின் சஞ்சாரமில்லாத ஒதுக்கிடத்தில் வண்டி ஒன்றுக்குப் பக்கத்தில் ரைக்வர் அமர்ந்து இருப்பதைச் சாரதி பார்த்தான்.... அரசன் பண்டமாற்றும் முறையில் ஞானத்தைப் பெற்றுவிடலாம் என்று எண்ணினான் போலும்! ரைக்வர் அரசனுடைய மனப்பான்மையை அறிந்து கொண்டார். ... பிரம்ம ஞானத்தைத்தவிர நாம் பெறும் மற்றவைகளுக்கெல்லாம் ஒரு முடிவு உண்டு. புண்ணியச் செயல்களால் வரும் நற்பயன் நம்மை முற்றிலும் திருப்திப்படுத்துவதில்லை.... தூங்கும் போது வாக்கு பிராணனில் ஒடுங்குகிறது. பார்வையும், கேள்வியும், மனதும் ஆகிய யாவும்... [மேலும்..»]