ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும் - பாகிஸ்தானிலிருந்து திரும்பி வரும் ஹிந்துக்கள் - மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்...: தினமணி கட்டுரை

Articles in the கேள்வி-பதில் Category

சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்
By ஆசிரியர் குழு
Posted in இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில் on 22 November 2009
Stats: பார்வை: 1,026 and 16 Comments

சுவாமி சித்பவானந்தர் எழுதுகிறார், “ஹிந்து மதத்தில் யாரையாவது விலகிவைத்தல் (exclusion) என்பது மட்டும் இடம் பெறக்கிடையாது என்று அவர் வைதிக மதத்தைப் பெருமை பாராட்டினார். அத்தகைய வேதாந்தத்தினுள் சிறுமையும் அற்பத்தனமும் எவராவது நுழைத்துவிடக் கிடையாதா? இதை ஆராய்வதற்குஆதாரங்கள் வேண்டிய அளவில் இருக்கின்றன. இங்கு எழுந்துள்ள கேள்வியே அதைச் சுட்டிக்காட்டுகிறது ….”

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 3
By ஆசிரியர் குழு
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில் on 17 October 2009
Stats: பார்வை: 946 and 3 Comments

(சுவாமி சித்பவானந்தர் இயற்றிய நூலிலிருந்து): நந்துதல் என்றால் முடிவுறுதல் எனப் பொருள்படுகிறது. எது நந்தாது இருக்கிறதோ அதற்கு முடிவில்லை. சந்திரனுடைய வெளிச்சம் அமாவாசையன்று முடிவுறுகின்றது. சூரியப் பிரகாசம் அத்தகையதன்று. அது ஓயாது பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது… உள்ளிருக்கும் அந்தராத்மா புறத்திலிருக்கும் சூரியன் போன்று யாண்டும் சுயம் ஜோதியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆத்மப் பிரகாசத்திற்கு உதயமில்லை, அஸ்தமனமிலை, மறைத்தலில்லை, புதியதாகக் காட்சிக்குக் கொண்டு வருதல் என்பதும் இல்லை. நந்தா விளக்காக சர்வகாலமும் அது ஜொலித்துக் கொண்டிருக்கிறது…தூண்டப் படுவதாலேயே உயிர்கள் அனைத்தும் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. பொரித்த குஞ்சு, போட்ட குட்டி, பிறந்த சிசு ஆகியவைகள் முதலில் பசியால் தூண்டப் படுகின்றன. உள்ளிருக்கிற பேரறிவுப் பொருளே அத்தூண்டுதலை உண்டுபண்ணுகிறது.

சிலை வழிபாடு பாவமா? மூடநம்பிக்கையா? அல்லது அறிவியலா?
By ஆசிரியர் குழு
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில், தரவிறக்கம், பொது on 23 August 2009
Stats: பார்வை: 963 and 7 Comments

.. விநாயகர் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் கயிறு பரம்பொருள் நம்மை நம் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தை நோக்கி (சில நேரங்களில் அறியாமையால் நாம் தயங்கி நின்றால் கூட) இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது… சிலை வழிபாடு பற்றிய கேள்விகளை எழுப்பி, அதன் வரலாறு, தத்துவம் மற்றும் அறிவியலை விளக்கும் ஒரு தமிழ் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் - இங்கே …

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 2
By ஆசிரியர் குழு
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில் on 18 August 2009
Stats: பார்வை: 1,254 and 1 Comment

ஒரு மனிதன் தனக்காகவென்று தனியாகச் செய்கின்ற சாதனமன்று காயத்ரீ. ‘நம்முடைய அறிவை எப்பொருள் தூண்டுகிறதோ’ என்று அது பன்மையில் துவங்குகிறது. ‘அப்பெரிய பொருளை தியானிப்போமாக’ என்று பன்மையில் முடிகிறது. ஆத்மசாதகன் தனித்திருந்து சாதனங்கள் பயிலுகின்ற இடத்தும் எண்ணத்தால் தன்னை மற்ற உயிர்களோடு இணைத்துக் கொள்ளவேண்டும் … புறத்திலுள்ள சூழ்நிலை அறிவைத் தூண்டுவதற்கு ஏதுவாகிறது. தூண்டுதல் உடன்பாடு, எதிர்மறை ஆகிய இரண்டு நிலைகளிலும் நிகழ்கிறது.

மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வை
By தமிழ்செல்வன்
Posted in கேள்வி-பதில், நிகழ்வுகள், வரலாறு on 16 July 2009
Stats: பார்வை: 419 and 23 Comments

ஹார்வார்ட் ஸம்ஸ்க்ருத பேராசிரியர் மைக்கேல் விட்சல் சென்னைக்கும் வந்ததைத் தொடர்ந்து, தமிழ் இந்து ஆசிரியர் குழு அவரை நோக்கி சில கேள்விகளை தொடுத்திருந்தது நினைவிருக்கும். அவரது வருகையை ஒட்டி நடந்த சில சுவாரஸ்யமான, அதே சமயத்தில் தீவிரமான , சம்பவங்களையும் சொல்ல வேண்டியிருக்கிறது ……

சம்ஸ்கிருதம் - சில கேள்விகள்
By சுப்பு
Posted in இலக்கியம், கேள்வி-பதில், சமூகம், நிகழ்வுகள், பொது, வழிகாட்டிகள் on 13 July 2009
Stats: பார்வை: 1,582 and 39 Comments

பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம்தான் பிரமாணம்’ என்கிறார்… ”தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்” என்கிறார் ஜெயகாந்தன்.

ஊர்வம்பு - மல மல மல மல்லே மல்லே..
By பனித்துளி
Posted in அரசியல், கேள்வி-பதில், சமூகம், பிறமதங்கள் on 10 July 2009
Stats: பார்வை: 530 and 10 Comments

“எது எப்படியானா என்ன? அவனவன் சோத்துக்கே லாட்டரி அடிக்கான். இதில வேலை வெட்டி இல்லாமல் இந்த இந்துத்துவாதிகள் அயோத்தி கோயிலுக்கும், ராமர் பாலத்திற்கும், திருப்பதி கோயிலுக்கும், தென்காசி கோயில் நிலத்திற்காகவும் எதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள்? விட்டுக்கொடுத்து வாழவேண்டியதுதானே?”

சம்ஸ்கிருத அறிஞர் மைக்கேல் விட்செலுக்கு சில கேள்விகள்
By ஆசிரியர் குழு
Posted in கேள்வி-பதில், நிகழ்வுகள், வரலாறு on 6 July 2009
Stats: பார்வை: 384 and 20 Comments

மைக்கேல் விட்செல், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியர் இன்று மாலை சென்னையில் பேசுகிறார். எமது வ்ரலாற்று ஆர்வலர் குழு தொகுத்திருக்கும் இந்தக் கேள்விகளை இந்தத் தருணத்தில் அவரிடம் எழுப்ப விரும்புகிறோம், பேராசிரியர் கண்டிப்பாக அவற்றுக்கு விடையளிப்பார் என்ற நம்பிக்கையுடன்.

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 1
By ஆசிரியர் குழு
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில் on 27 June 2009
Stats: பார்வை: 890 and 3 Comments

கடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன… உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது.

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?
By ராஜா ஆர்.எஸ்
Posted in கேள்வி-பதில் on 25 January 2009
Stats: பார்வை: 1,600 and 10 Comments

டி.வி.யிலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, ஏதாவது ஒரு ஜோதிடர் “இந்த ராசிக்காரர்கள், இந்த ஊரில் இந்தக் கோவிலில் உள்ள இந்த அம்மனுக்கு நெய் விளக்கை ஏற்றி இந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்” என்று கூறிவிடுகிறார். அவர் சொல்வதைப் பார்த்தால், அந்த கோவிலில் உள்ள ஆட்களுக்கும் இவருக்கும் ஏதாவது உடன்படிக்கையோ என்றுகூடத் தோன்றி விடுகிறது…

கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்
By அரவிந்தன் நீலகண்டன்
Posted in கேள்வி-பதில், மகளிர் on 29 June 2008
Stats: பார்வை: 1,292 and 5 Comments

ஸ்ரீ கிருஷ்ணர் “பெண்களும் பரகதி பெறுவர்” (கீதை 9.32) என கீதையில் கூறுகிற போது அவர் கூறுவது ‘பெண் தாழ்ந்தவள்’ எனும் மனநிலை படைத்த ஆணினை நோக்கி என்றே கருத வேண்டும். “அவளுக்கு ஞானமும் வீடுபேறும் கிடைக்கும்” என கீதை சொல்வது மிக உன்னத நிலையை இந்த பிறவியிலேயே அவள் அடைந்திட முடியும் என்னும் எக்காலத்துக்குமான உண்மையையும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்….சீதை எந்த இடத்திலும் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கும் ஒரு பெண்ணடிமைப் பாத்திரமாக சித்தரிக்கப் படவில்லை. மாறாக வலுவான பெண்ணியப் பார்வை கொண்ட, அதே நேரத்தில் சமுதாயத்துக்கு ஒரு தன்னிறைவு இலட்சியமாக திகழும் பாத்திரமாகவே அவள் காட்டப் படுகிறாள். குறுகிய எல்லைகளைக் கடந்து மானுடம் முழுவதையும் அரவணைக்கும் பார்வையை சீதை மூலமாக இராமாயணம் நமக்கு வைக்கிறது

சோதிடம் என்பது உண்மையா பொய்யா?
By அரவிந்தன் நீலகண்டன்
Posted in கேள்வி-பதில் on 17 June 2008
Stats: பார்வை: 1,642 and 8 Comments

வாழ்க்கையை நலமும் அழகும் செய்யப் பயன்படும் வானநூல் சாத்திரங்களை, இந்து தருமம் ஏற்கிறது. இந்துக்களின் சடங்குகள், வாழ்க்கை நிகழ்ச்சிகள், விவசாய வேலைகள் ஆகிய அனைத்திலும் பஞ்சாங்கம் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது.
ஆனால் இந்த அழகிய பண்பாட்டு அம்சம் மூடநம்பிக்கையாக மாறுவதை இந்து தருமம் தடுக்கிறது.

இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?
By முரளி
Posted in கேள்வி-பதில் on 14 June 2008
Stats: பார்வை: 800 and 6 Comments

மனிதருக்கிடையே பழக்க வழக்கங்களில் இருக்கும் நியாயமான வேறுபாடுகளை இந்து மதம் ஏற்கிறது. அதுவுமன்றி, மாமிசம்தான் காட்டில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதல் உணவாக இருந்தது. அவரவர் குடும்ப வழக்கப்படி மாமிசம் உண்ணுவதை இந்துமதம் அங்கீகரிக்கிறது. ஆனால், அஹிம்ஸையை ஏதோ சமணமும் பௌத்தமும் மட்டுமே கண்டுபிடித்தது போலப் பேசுவது ஒரு கண்கட்டு வித்தைதான். தொடக்ககால சமணமும் பௌத்தமும் துறவறத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டிருந்தன. இந்து மதத்திலும் நான்காவது ஆசிரமமான சன்யாசத்துக்குப் போகும்போது ஊனுண்ணாமை வற்புறுத்தப்படுகிறது என்பதை நாம் காண வேண்டும். [...]



"));