ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும் - பாகிஸ்தானிலிருந்து திரும்பி வரும் ஹிந்துக்கள் - மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்...: தினமணி கட்டுரை

Articles in the ராமாயணம் Category

கம்பன் கண்ட சிவராம தரிசனம்
By ஜடாயு
Posted in இந்து மத விளக்கங்கள், இலக்கியம், கம்பராமாயணம் on 28 January 2010
Stats: பார்வை: 1,465 and 85 Comments

நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை… இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ?

அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி
By எஸ்.ஜயலக்ஷ்மி
Posted in ராமாயணம் on 15 May 2009
Stats: பார்வை: 475 and 6 Comments

தாயின் உயர்வைச் சொல்லும் முதுமொழிகள் ஏராளம். ஏனென்றால் அன்பே உருவானவள் தாய். அரக்க குலத்தில் பிறந்த பெண் ஒருத்தி, அவள் காட்டும் அன்பின் காரணமாகத் தாயினும் இனியவளாகப் புகழப்படுகிறாள். ஆம், திரிசடையைத்தான் கம்பன் இப்படி அறிமுகம் செய்கிறான்.

அரக்க மகளான திரிசடையை ஒருமுறை அல்ல, மூன்றுமுறை அன்னை, அன்னை, அன்னை என்று விளிக்கிறாள். என்ன காரணம்?…

மலைக்குல மயில்
By எஸ்.ஜயலக்ஷ்மி
Posted in ராமாயணம் on 2 May 2009
Stats: பார்வை: 704 and 21 Comments

ராமாயண நாயகனான ராமனின் மனைவி சீதை. எதிரணித் தலைவன் இராவணன் மனைவி மண்டோதரி. இருவரும் சிறந்த கற்புக்கரசிகள். அவர்களுக்கு நடுவில் வைத்துப் போற்றப்படுகிறாள் தாரை. அவளை “மலைக்குல மயில்” என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கிறான் கம்பன்….

பகைவனும் பாராட்டும் பகழி
By எஸ்.ஜயலக்ஷ்மி
Posted in ராமாயணம் on 3 April 2009
Stats: பார்வை: 1,047 and 14 Comments

பொதுவாக உலகில் ஒருவரை நண்பர்கள், உறவினர்கள் பாராட்டுவார்கள். ஆனால் ஒருவருடைய பகைவனே அவரைப் பாராட்டுவது என்பது மிகவும் அருமை. அதிலும் யாரைப்பற்றி, யாருடைய வீரத்தைப் பற்றி முன்னொரு முறை மிக இழிவாக, மிக ஏளனமாகப் பேசினானோ அவரைப் பற்றியும் அவருடைய வீரத்தைப் பற்றியும் மனம் திறந்து பாராட்டுகிறான். ஒரு தடவை அல்ல பல தடவை. பலவகையாகப் பாராட்டுகிறான். பாராட்டுபவர் யார்? பாராட்டுப் பெறுபவர் யார்?…

கம்பராமாயணம் - 19 (Kamba Ramayanam - 19)
By ஹரி கிருஷ்ணன்
Posted in கம்பராமாயணம் on 27 February 2009
Stats: பார்வை: 1,315 and 14 Comments

நன்கு ஆலோசித்துத் திட்டமிடப்பட்டு எழுப்பப்பட்டுள்ள (நகர) மதில் சுவரைச் சுற்றிலும் உள்ள பாறைகளை எல்லாம் பிளந்து, மிக ஆழமாக உருவாக்கப்பட்ட அகழிகளில் பொங்கி எழுவதும், மீள வீழ்வதுமாகத் திரியும் பெரிய முதலைகளைப் பார்த்தால், அடக்க முடியாத மதம்பிடித்த யானைகள் (தம்முடைய மதமயக்கத்தினால்) பெரிய கப்பல்கள் இயங்குகின்ற கடலி்ல் வீழ்ந்து, அதிலிருந்து மீளமுடியாமல்… (Verses 16-20)

ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!
By வினோத் ராஜன்
Posted in ராமாயணம் on 16 January 2009
Stats: பார்வை: 1,064 and 8 Comments

மலேசியாவில் இராமாயணம் பாரம்பரியமிக்க வயங்க் என்னும் நிழல்கூத்து மூலம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அண்மைக் காலங்களில் இத்தகைய அழகிய கலைவடிவங்கள் “இஸ்லாமுக்கு எதிரானவை” என்று அறிவிக்கப்பட்டு, எதிர்க்கப்படுவதால், அவை முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளன…

கம்பராமாயணம் - 18 (Kamba Ramayanam - 18)
By ஹரி கிருஷ்ணன்
Posted in கம்பராமாயணம் on 21 November 2008
Stats: பார்வை: 815 and 2 Comments

அந்த மதிலில், (தொலைதூரத்துக்கு அம்புகளை எறியக் கூடிய மிகப் பெரிய) விற்கள் பொருத்தப்பட்டிருந்தன. கூர்மை மிகுந்த, கொல்லக் கூடிய வாளையும், கோடரிகளையும், இரும்புத் தடிகளையும், சக்கரங்களையும், எறியீட்டிகளையும், உலக்கைகளையும் வீசக்கூடிய கணக்கில் அடங்காத எந்திரப் பொறிகள் அமைக்கப்பட்டிருந்தன… (Verse 11-15)

ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 3
By ஸ்ரீகாந்த்!
Posted in ராமாயணம், வைணவம் on 6 August 2008
Stats: பார்வை: 737 and 3 Comments

ராமன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத துணிவுடைய பெரும் வீரன். துணிவு என்பது மனச்சோர்வு ஏற்படும் காலத்திலும் அதற்கு இடம் கொடுக்காது சிறிதளவும் பின்வாங்காது இருத்தலே ஆகும்.

கம்பராமாயணம் - 17 (Kamba Ramayanam - 17)
By ஹரி கிருஷ்ணன்
Posted in கம்பராமாயணம் on 1 August 2008
Stats: பார்வை: 1,000 and 3 Comments

‘இதன் முடிவு எது’ என்று அறிவால் ஆராய்ந்து தெளிந்துகொள்ள முடியாத காரணத்தால், இந்த மதிற்சுவர் வேதங்களையும் ஒக்கும். வானத்தைச் சென்று அடையும் காரணத்தால், (விண்ணில் உலாவுகின்ற) தேவர்களையும் ஒக்கும். வலிய பொறிகளைத் தம்முள் அடக்கியிருக்கும் காரணத்தால் முனிவர்களை ஒக்கும். நகரத்துக்குப் பாதுகாவலாக இருக்கின்ற காரணத்தால், கலைமான் வாகனத்தைக் கொண்டவளான துர்க்கையையும் ஒக்கும். மிகப் பெரிய அளவில் அமைந்த எல்லாப் பொருள்களையும் ஒக்கும். எல்லோராலும் எளிதில் அடைய முடியாத (உச்சியைக் கொண்ட) தன்மையால், ஈசனையும் இது ஒக்கும். (நகரப் படலம் பாடல்கள் 06-10; Verses 06-10)

கம்பராமாயணம் - 16 (Kamba Ramayanam - 16)
By ஹரி கிருஷ்ணன்
Posted in கம்பராமாயணம் on 29 July 2008
Stats: பார்வை: 813 and 1 Comment

இது ராம ராஜ்ஜியம் நடைபெற்ற இடம். இதைவிட அயோத்தியின் சிறப்பைக் குறித்து நான் சொல்ல வேறு என்ன இருக்கிறது!

(நகரப் படலம் பாடல்கள் 01-05 Verses 01-05 of Canto of City)

கம்பராமாயணம் - 15 (Kamba Ramayanam - 15)
By ஹரி கிருஷ்ணன்
Posted in இலக்கியம், கம்பராமாயணம் on 22 July 2008
Stats: பார்வை: 699 and 3 Comments

திருமாலுடைய சங்கம் (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர்சனம்), தண்டம் (கௌமோதகி - கதை), வில் (சார்ங்கம்), வாள் (நாந்தகம்) ஆகிய ஐந்து ஆயுதங்களையும் பொன்னால் செய்வித்துச் சங்கிலியில் கோத்து அணிவிக்கப்பட்ட ஐம்படைத் தாலி குழந்தைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்தது… (பாடல்கள் 56-61 End of Canto of Country)

கம்பராமாயணம் - 14 (Kamba Ramayanam - 14)
By ஹரி கிருஷ்ணன்
Posted in இலக்கியம், கம்பராமாயணம், ராமாயணம் on 21 July 2008
Stats: பார்வை: 786 and 4 Comments

‘செவிநுகர் கனிகள்’ என்ற ஆட்சியே பின்னால் பாரதியை ‘இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே’ என்று பாடவைத்தது. பின்னால், அயோத்தியா காண்டத்தில், இராமனைத் திரும்ப அழைத்து வருவதற்காகப் பயணப்படுவதை மக்களுக்கு அறிவிக்குமாறு சத்ருக்கனனிடம் பரதன் சொல்கிறான்… பாடல்கள் 51-56)

கம்பராமாயணம் - 13 (Kamba Ramayanam - 13)
By ஹரி கிருஷ்ணன்
Posted in இலக்கியம், கம்பராமாயணம் on 17 July 2008
Stats: பார்வை: 630 and No Comments

இளம்பெண்களின் இனிமை நிறைந்த, குழறலான மழலைப் பேச்சை ஒத்துக் குயில்கள் கூவின. அவர்களுடைய நடையின் ஒசிவைப் பார்த்தே மயில்கள் நடனம் பழகிக் கொள்கின்றன. அவர்களுடைய பற்களின் வெண்மையையும் பிரகாசத்தையும் ஒத்த முத்துகளையே சங்கினங்கள் ஈனுகின்றன (பாடல்கள் 46-50)

கம்பராமாயணம் - 12 (Kamba Ramayanam - 12)
By ஹரி கிருஷ்ணன்
Posted in இலக்கியம், கம்பராமாயணம், ராமாயணம் on 16 July 2008
Stats: பார்வை: 701 and 3 Comments

எல்லா வீடுகளிலும் அகில் கட்டைகளை எரிக்கும் புகையும், சமையல் செய்யும்போது விறகுகளை எரிக்கும் புகையும், கரும்பு ஆலைகளில் கருப்பஞ் சாற்றைக் காய்ச்சும்போது எழுகின்ற புகையும், நான்கு மறைகளையும் ஓதியபடி வளர்க்கும் ஓமங்களில் எழும் புகையும் அடர்த்தியாகப் பரந்து, சூழ்ந்து, மேகங்களைப் போல் படர்ந்து வானின் எல்லாப் பரப்பையும் கவித்தன. (Verses 41-45)

கம்பராமாயணம் 11 (Kamba Ramayanam - 11)
By ஹரி கிருஷ்ணன்
Posted in இலக்கியம், கம்பராமாயணம், ராமாயணம் on 14 July 2008
Stats: பார்வை: 735 and No Comments

மிக முக்கியமான குறிப்பு ஒன்றைக் கவி இங்கே பேசுகிறான். பெண்களுக்கு முழுமையான கல்வி இருந்தது என்பதும், ‘பொருந்து செல்வம்‘ என்று அவன் அழுத்தந் திருத்தமாக அடிக்கோடிட்டுச் சொல்வதைப்போல், பெண்களுக்கென்று தனிப்பட்ட செல்வவளம் இருந்தது; அதன் காரணமாக…. (பாடல்கள் 36-40)

கம்பராமாயணம் - 10 (Kamba Ramayanam - 10)
By ஹரி கிருஷ்ணன்
Posted in இலக்கியம், கம்பராமாயணம், ராமாயணம் on 11 July 2008
Stats: பார்வை: 836 and No Comments

(பாடல்கள் 31 முதல் 36 வரை) பெரிய மலைகளில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில்களின்மேல் பலத்த காற்று வீசுதால் அவை நாலாபுறமும் அலைபடுகின்றன. அவ்வாறு ஆகும் சமயத்தில் அருகிலிருக்கும் மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் பெரியபெரிய தேன்கூடுகளின்மேல் படுவதனால் அவை உடைகின்றன. தேன்கூடுகள் உடைவதனால், அவற்றிலிருந்து பெருகிஓடும் தேன், மலைச் சரிவுகளில் ஓடிவருவது ஏதோ ஒரு நீண்ட பாம்பு மலையின் மேலிருந்து தொங்குவதைப் போல் காட்சியளிக்கிறது…

கம்பராமாயணம் - 9 (Kamba Ramayanam - 9)
By ஹரி கிருஷ்ணன்
Posted in இலக்கியம், கம்பராமாயணம், ராமாயணம் on 8 July 2008
Stats: பார்வை: 709 and 2 Comments

திணை மயக்கம் எப்போதும் தவறாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. இன்றைய மொழியில் சொன்னால், ‘கழிவறையில் கிடக்கும் பால்செம்பு; படுக்கையறையில் வைக்கப்பட்டிருக்கும் காஸ் அடுப்பு‘ என்பனவெல்லாம் பொருத்தமற்ற வருணனைகள் என்பதை ஒப்புக் கொள்வோம். திணை மயக்கம் என்று இலக்கணம் குறிப்பிடுவது இதைத்தான். ஆனாலும், நல்ல எழுத்தாளனிடம் திணைமயக்கமும் ஒரு உத்தியாகப் பயன்படும். ‘(கைகழுவி வாய்) கொப்புளிக்கும் பிறையின் (வாஷ் பேஸின்) மேல் ஸ்வாமி படம் மாட்டப்பட்டிருந்தது’ என்று எழுதினால் சிரிப்போம். ஆனால், ‘குளியலறையில் புத்தக அலமாரி இருந்தது’ என்று சொன்னால், (



"));