Payday loans Cialis online
payday loans Car insurance

ராமாயணம்

கம்பராமாயணம், ராமாயணம்

கம்பராமாயணம் – 5 (Kamba Ramayanam – 5)

July 4, 2008
-
கம்பராமாயணம் – 5 (Kamba Ramayanam – 5)

கம்பராமாயணம், பால காண்டம், நாட்டுப் படலம், பாடல்கள் 6 - 10. இதில் கோசல நாட்டின் வளம் பேசப்படுகிறது. ஆலைகளில் பிழியப்படும் கருப்பஞ் சாறும், தென்னை முதலிய மரங்களில் பாளையை அரிந்து வடிக்கப்படும் சாறும், சோலைகளில் கனிந்து உதிரும் பழங்களின் சாறும், தேன்கூட்டிலிருந்து தொடர்ந்து ஒழுகிக்கொண்டிருக்கும் தேனும், மாலைகளில் இருந்து விழும் தேனும் ஒன்றாகி... [மேலும்..»]

இலக்கியம், கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 4

July 3, 2008
-
கம்பராமாயணம் – 4

கம்பராமாயணம், பாலகாண்டம், நாட்டுப்படலம், பாடல்கள் 1-5. வயல் வரப்புகளில் எல்லாம் முத்துக்கள் மண்டியிருக்கும். நீர் ஓடும் மடைகளில் எல்லாம் சங்குகள். நிரம்பிய வெள்ளம் ஓடும் கால்வாய்களின் கரையெல்லாம் செம்பொன்னால் ஆனவை; எருமைகள் படுத்ததனால் ஏற்பட்ட குழிகளில் தேங்கிய நீரில் செங்கழுநீர் மலர்கள் பெருங்கூட்டமாகப் பூத்துள்ளன; சமப்படுத்திய வயல்களிலோ பவளமணிகள் பரவியுள்ளன. சாலி என்னும் உயர்வகை நெல் நிரம்பிய வயல்களில் அன்னப் பறவைகள் உலவுகின்றன; அருகிலுள்ள கரும்பு வயல்களில் கருப்பங்கழிகளுக்கு இடையிலிருக்கும் கூடுகளிலிருந்து செந்தேன் பொழிகின்றது... [மேலும்..»]

இலக்கியம், கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 3

கம்பராமாயணம் – 3

கம்பராமாயணம், பாலகாண்டம், ஆற்றுப்படலத்தின் 3 ஆம் மற்றும் இறுதிப் பகுதி. இந்தப் பாடலில் நதி, யானையாகச் சித்திரிக்கப்படுகிறது. மதகின் கதவுகளை நதி முட்டுகிறது; யானையோ கோட்டைகளின் கதவுகளை முட்டிப் பெயர்க்கக் கூடியது. நதி ஓடிவரும் வேகத்தைக் கண்டு உழவர்கள் கைகளை உயரத் தூக்கியபடி கதறுகிறார்கள்; யானை ஓடிவரும்போதும் அப்படித்தான் மக்கள் கதறுவார்கள். நீர்த்தேக்கங்களின் முன்புறம் உள்ள ஓடைகள் நிரம்பிப் பொங்கி வழியுமாறு ஆற்றின் வெள்ளம் பெருகுகிறது; யானைக்கோ மத்தகத்தின் மீது அணிவிக்கப்பட்ட அணிகலனின் ஒளி வெள்ளம் பொங்கிக் கொண்டு இருக்கும். நதியிலும் வண்டுகள் மொய்க்கின்றன; யானையின் மதநீரின் மேலும் வண்டுகள் மொய்க்கும். நெருக்கமாகக் கட்டப்பட்டுள்ள மணிகள்... [மேலும்..»]

இலக்கியம், சிறுவர், ராமாயணம், வைணவம்

பாலராமாயணம் – 2

பாலராமாயணம் – 2

சிறுவர்களுக்காக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட ராமாயணம். அந்த வேள்வித் தீயிலிருந்து சிவந்த கண்களும் நெருப்புப் போன்ற தலைமயிரும் கொண்ட பூதம் ஒன்று தன் கையில் அமுத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டது. அதை வாங்கிப் பட்ட மகிஷிகளுக்குக் கொடுக்கும்படி தசரத சக்ரவர்த்தியை வசிஷ்டர் வேண்டிக்கொண்டார்.... [மேலும்..»]

கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 2 (Kamba Ramayanam Canto 2, Part 2)

கம்பராமாயணம் – 2 (Kamba Ramayanam Canto 2, Part 2)

கம்பராமாயணம், பாலகாண்டம், ஆற்றுப்படலத்தின் இரண்டாம் பகுதி; பாடல்கள் 11-15. பருத்த முகங்களையும், (நீரில் புரள்வதால்) களிப்பையும் உடைய (அல்லது, நீரில் சிந்திக் கிடக்கும் கள்ளைபங {தேனை} பருகிய) யானைகள், குதிரைகள், பலவிதமான மிருகங்கள் என்று இவற்றையெல்லாம் அடித்து உருட்டிக் கொண்டு செல்கிறது வெள்ளம். இவற்றினோடு அழகான கொடிகளும் வந்து சேர்ந்து தங்குவதால் (அல்லது விலை மதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட கொடிகள் பறக்கின்ற தேர்களும் வந்து சேர்வதால்) அந்த ஆறு, கடல்மேல் போர் தொடுப்தற்காகப் படையைத் திரட்டிக்கொண்டு போவதைப் போல இருந்தது. [மேலும்..»]

சிறுவர், ராமாயணம்

பாலராமாயணம்

பாலராமாயணம்

இன்னும் அநேக முக்கியமான தலங்கள் உள்ளன. அவற்றுள் மிக மிக முக்கியமான நகரமான அயோத்தியில் ஸ்ரீ ராமபிரான் அவதரித்தார். சீதா, ராம, பரத, சத்ருக்ன, ஹனுமத் சமேதராய் பட்டாபிஷேகம் செய்துகொண்டதும் அயோத்தி மாநகரத்தில்தான் நிகழ்ந்தது. ராமராஜ்யம் மிக உயர்வாகத் திகழ்ந்தது. அதற்கு முன் ராஜ்யம் நடத்திய தசரதர் போன்றவர்களும் ராஜ்ய பரிபாலனம் நன்றாகவே செய்து வந்தார்கள். அயோத்தியில் வீடுகளுக்குக் கதவுகளே கிடையாதாம். கதவு இருந்தாலும் யாரும் அதைப் பூட்ட மாட்டார்களாம். தானம் கொடுக்கவே முடியாதாம். ஏனென்றால் வாங்கிக்கொள்ள வறியவர்களே கிடையாதாம். அப்படிப்பட்ட செழிப்பான பூமி. எல்லா மன்னர்களும் செங்கோல் ஆட்சி புரிந்து வந்திருக்கிறார்கள்... [மேலும்..»]

கம்பராமாயணம்

நடிகர் சிவகுமாரின் கம்பராமாயண உரை

June 12, 2008
-

நடிகர் சிவகுமார் சமீபத்தில் சென்னையில் மக்கள் தொடர்பு அமைப்பின் சார்பில் நிகழ்த்திய கம்பராமாயண உரையை இங்கு நீங்கள் கேட்கலாம். நன்றி: பாட்பஸார்.காம் மின்அஞ்சலில் அனுப்ப, சேமிக்க, பகிர்ந்துகொள்ள.. [மேலும்..»]

கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 1

பால காண்டம் 1. ஆற்றுப் படலம் – The Canto of the River மழை பொழிதல் ஆசலம் புரி ஐம் பொறி வாளியும், காசு அலம்பு முலையவர் கண் எனும் பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக் கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்: 1 சொற்பொருள்: ஆசலம்: சஞ்சலம். காசு – வைர மணிகள் (வைரமணிகளால் கோக்கப்பட்ட ஆரங்கள்) பூசல் – போர். சஞ்சலத்துக்கு மனிதனை உள்ளாக்கக்கூடிய ஐந்து புலன்களாகிய அம்புகளும்; எப்போதும் ஒன்றோடு ஒன்று மோதுவதால் ஒலியை எழுப்புகின்ற வைரமணிகள் பதிக்கப்பட்ட ஆரங்களை அணிந்த பெண்களுடைய கண்களாகிய போர் அம்புகளும், ஒருபோதும் ஒழுக்க... [மேலும்..»]

கம்பராமாயணம்

கம்ப ராமாயணம் – மூலம், உரை, மொழிபெயர்ப்பு

கம்ப ராமாயணம் – மூலம், உரை, மொழிபெயர்ப்பு

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. எல்லா உலகங்களையும் ‘உள’ எனும்படியாக ஆக்கல், அவற்றைத் தத்தம் தன்மையில் தொடரச் செய்தல், அழித்தல் ஆகிய முடிவற்ற விளையாட்டுகளைத் தொழில்களாக உடையவர் எவரோ அவரே தலைவர். நாம் அவரையே சரண் அடைகிறோம். [மேலும்..»]

ராமாயணம்

கம்பனின் கும்பன் – எதிர்வினைகள்

கம்பனின் கும்பன் – எதிர்வினைகள்

"அற்புதமாக, உருக்கமாக எழுதியிருக்கிறீர்கள். கம்பனையே முக்கியமாகப் பேசவிட்டு தேவையான இடங்களில் மட்டும் உங்கள் மணியான விளக்கங்களைத் தருகிறீர்கள்.. அருமை. இந்தக் கட்டத்தில் வரும் முக்கியமான ஒரு பாடலைக் குறிப்பிடுவீர்கள் என்று பார்த்தேன். .. தங்களை அது கவரவில்லையோ.." [மேலும்..»]