Articles in the அறிவியல் Category
Posted in அரசியல், அறிவியல், பொருளாதாரம் on 13 January 2010
Stats: பார்வை: 330 and 2 Comments
நீங்கள் ஏதேனும் ஒரு காரியத்தைத் தொடங்கினால், நீங்கள் இதுவரை சந்தித்துள்ள ஏழைகளில் பரம ஏழையாக உள்ளவருக்கு அதனால் பயன்கிடைக்குமா? என்று சிந்தித்து பார்த்து காரியத்தை தொடர்ந்து நிறைவேற்றுங்கள் என்பதுதான் மகாத்மா சொன்ன அறிவுரை ஆகும்… இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகியவை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்..சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு மாறுபடும். இதில் நெகிழ்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.
Posted in அரசியல், அறிவியல், பொருளாதாரம் on 12 January 2010
Stats: பார்வை: 222 and 1 Comment
டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் எல்லாவற்றுக்கும் செலவு அதிகமாக ஆகும். புவி பாதுகாப்பு உச்சி மாநாடு காசபிளாங்காவிலோ அல்லது கொல்கத்தாவிலோ நடைபெற்றிருந்தால் செயற்கையாக வெப்பம் அளிப்பது மற்றும் ஒளி அளிப்பது ஆகியவற்றுக்காக மின்சாரத்தை அதிக அளவில் செலவிடவேண்டி இருந்திருக்காது….. அமெரிக்கா கடந்த 30 ஆண்டில் தனது நிலப்பரப்பில் அணுசக்தி ஈனுலைகளை ஒன்றைக்கூட அமைக்கவில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் வளரும் நாடுகளுக்கு அணுசக்தி ஈணுலைகளை அமைத்துத் தருவதாக சொல்லி கோடிக்கணக்கான தொகையை அபகரிக்க முற்படுகின்றன. (மூலம்: எம்.டி.நளபத், தமிழில்: ஆழிநோக்கி)
Posted in அறிவியல், வழிகாட்டிகள் on 11 December 2009
Stats: பார்வை: 785 and 7 Comments
நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் ஒரு முக்கிய கருத்தியல் புரட்சிக்கான தொழில்நுட்ப விதை போடப்பட்டது. அதிகமாக பெயர் அறியப்படாத ஒரு கணிதப் பேராசிரியர் தான் வடிவமைத்த ஒரு பொருளை நகர சபையாரின் முன்னால் வைத்தார்,. சில அடிகளே உள்ள மரத்தாலான குழாயின் உள்ளே ஆடிச்செல்லுகளை வைத்து செய்யப்பட்ட அந்த அமைப்பு விரைவில் மேற்கின் கருத்தியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என யார்தான் நினைத்துப் பார்த்திருக்க முடியும்!
Posted in அறிவியல் on 11 July 2009
Stats: பார்வை: 357 and 2 Comments
வானியல் விஞ்ஞானம் ஒவ்வொருவர் ஆத்மாவையும் விண்ணை நோக்கக் கட்டாயப் படுத்துகிறது. மேலும் நம்மை ஓர் உலகிலிருந்து மற்றோர் உலகிற்கும் அது வழிநடத்திச் செல்கிறது.” — கிரேக்க மேதை பிளாடோ.
Posted in அறிவியல், பொது, வழிகாட்டிகள் on 4 July 2009
Stats: பார்வை: 734 and 17 Comments
”சில நேரங்களில் ஏசு என்று ஒரு மனிதர் வாழாமலே இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைப்பதுண்டு. வேறெந்தப் பெயரும் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகாரத்துக்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதில்லை… மனித இனம் ஏசுவின் பெயரால் தனக்குத்தானே என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள் …..
Posted in அறிவியல் on 30 June 2009
Stats: பார்வை: 307 and 8 Comments
1969 ஆம் ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலாவில் தடம் வைத்த பிறகு 1972 ஆண்டு வரை நாசா மொத்தம் 12 விண்வெளி விமானிகளை நிலவில் உலவிடச் செய்துள்ளது. 1959 ஆண்டு முதல் 2009 வரை ஐம்பது ஆண்டுகளாக உலக நாடுகள் (ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டு, ஜப்பான், சைனா, இந்தியா) நிலவை நோக்கி 17 பயணங்களைச் செய்திருக்கின்றன. ஆனால் நிலவில் இதுவரைத் தடம் வைத்த எல்லா விண்வெளி விமானிகளும் அமெரிக்கர் ஒருவரே!
Posted in அறிவியல் on 27 April 2009
Stats: பார்வை: 611 and 1 Comment
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புது மனித யுகம் தோன்றியது. அப்போது மொழி (பேச்சு) என்றால் என்னவென்றே மனிதனுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அழுகையும், சிரிப்பும், பசியும்தான். பின்னர் வாயசைவின் மூலம் தமது செயல்களுக்கு மொழிவடிவம் கொண்டு வந்தனர், பின்னர் அவற்றைத் தங்கள் அறிவுக்குத் தகுந்தவாறு மாற்றியமைத்தனர். இதைத்தான் நாம் சிந்தித்தல் என்கிறோம். இந்தச் சிந்தனைக்கும், மனதிற்கும் தொடர்பு உண்டா என்றால், புதிய சிந்தனைகளுக்கு நம்முடைய மனமே பிறப்பிடமாகத் திகழ்கின்றது. நம் மனம் ஒருநிலைப்பட்டு இருக்கும்போது புதுப் புதுச் [...]
Posted in அறிவியல் on 18 March 2009
Stats: பார்வை: 1,297 and 6 Comments
மிகப் பெரிய அளவில் இந்துக்களும் பௌத்த சமயத்தினரும் உயிர்களின் தோற்றம் குறித்த டார்வினிய அறிவியலை ஏற்றுக்கொள்கின்றனர்….
அகந்தையேறிய சிருஷ்டிக்கடவுளை தமிழ்கடவுள் முருகன் தலையில் குட்டி அடக்கினார் என்று சொல்லும் புராணம். ஞானக் கடவுள் முருகன். பிரபஞ்ச சிருஷ்டியின் இரகசியம் பிரணவம் என்று அந்த இரகசியத்தைத் தகப்பன் சாமியாகச் சொன்னவர். பல வாசிப்புக்களை நாம் விரித்துக்கொள்ள சாத்தியங்களை தரும் தொன்மம் இது…
Posted in அறிவியல் on 10 March 2009
Stats: பார்வை: 1,211 and 15 Comments
அந்த அரசாங்க அதிகாரியிடம் உடன் சென்றவர் சொன்னார், “இந்த மலைக்குன்றுக்கு மருத்துவாழ் மலை என்று பெயர். அனுமார் சிரஞ்சீவி மலையை கொண்டு வந்த போது ஒரு கல் இங்கே விழுந்ததாகவும் அதுதான் இந்த குன்று எனவும் ஐதீகம்.” அரசு அதிகாரியின் புருவங்கள் நெரிந்தன, “நம்மாளுங்க என்ன கதை விட்டாலும் நம்பிடுவாங்க பாருங்க, முட்டாப்பசங்க”
Posted in அறிவியல் on 11 February 2009
Stats: பார்வை: 935 and 6 Comments
லியனார்டோவின் வாழ்க்கையை ஒரு மனிதராகவும் ஒரு அறிவியலாளராகவும் இந்நூல் காண்கிறது. அமைதிவாதியாக, போரின் வீண்தன்மையை உணர்ந்தவரான ஒரு கலைஞர் டாவின்ஸி. சமயம் தாண்டிய ஆன்மிக அறிஞர். ஓவியர். சிக்கலான அதிசயமான பொறியியல் கருவிகளை வடிவமைத்தவர். இவை எல்லாவற்றுடனும் அவர் அறிவியலின் பிதாமகர் எனும் கோணத்தில் காண்கிறார் காப்ரா.
Posted in அறிவியல் on 1 December 2008
Stats: பார்வை: 1,232 and 7 Comments
“மூக்குக் கட்டைப் பிரிக்கப் போகிறேன். ரத்தம் வந்தால் குடித்துவிட வேண்டும். என் மேல் துப்புகிற வேலையெல்லாம் வேண்டாம். ஒருவர் என்மேல் துப்பி, என் சட்டையெல்லாம் ஒரே ரத்தக் கறையாகிவிட்டது. கொஞ்சம் வலிக்கும். பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார் டாக்டர்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆபரேஷன் செய்தபின் ஒரு பொட்டு கூட ரத்தம் வராமல், வலியும் இல்லாமல் இரண்டு, மூன்று நாள் தெம்பாக சுற்றிக்கொண்டிருந்தேன். கட்டு பிரிக்கப்போனால் இப்படி ரத்தம், வலி என்றால் வயிற்றைக் கலக்காமல் என்ன செய்யும்!
படுக்க வைத்து என் [...]
Posted in அறிவியல் on 24 November 2008
Stats: பார்வை: 1,092 and 17 Comments
இந்து மரபில் மட்டுமே இந்த ராகு-கேது தொன்ம மரபு பூமி-சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்துடனும் நிழல்களுடனும் தொடர்பு கொள்ளச் செய்யப்பட்டு அவை சாயாகிரகங்கள் என அழைக்கப்பட்டன. வானியல் கணித்தல்களில் ஒரு கணிதச்சமன்பாட்டின் அங்கமாக மாற்றப்பட்டன….இந்திய பாரம்பரிய் அறிவியல் சஞ்சிகையில் பஞ்சாங்கங்களின் மழைக்கணிப்பு குறித்து ஒரு ஆராய்ச்சி வெளிவந்தது.. போலி பகுத்தறிவு பேசி அரசியல் நடத்தி இன்றைக்கு பெரும் பொறுப்பில் இருக்கும் தமிழகத் தலைவர் ஒருவர் சந்திரயான் விண்கலம் குறித்து கவிதை என்கிற பெயரில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் தெரியும் இந்து எதிர்ப்பு வக்கிரம் அந்த தலைவரது பகுத்தறிவின்மைக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருப்பதுதான் இதில் வேடிக்கை!
Posted in அறிவியல் on 18 November 2008
Stats: பார்வை: 639 and 3 Comments
நமக்குப் பொதுவாக கிடைக்கும் சித்திரம் உலகெங்கும் பரவிய மேற்கத்திய நாகரிகத்தின் பிரதிநிதிகள் ஆங்காங்குள்ள செடிகொடிகள் விலங்குகளை ஆராய்ந்து அவற்றினை ஒரு அறிவியல் முறைப்படிப் பாகுபடுத்தி அந்த வகைப்படுத்தல் அறிவியலை உலகெங்கும் பரப்பினர் என்பதுதானே? … அறிவியல் வரலாற்றாசிரியர் க்ரூவின் கணிப்புப்படி தாவரவியல் ஆராய்ச்சியாளர் லின்னயஸ் இந்தியப் பகுப்பு முறையின் அடிப்படையிலேயே ஏறக்குறைய 240 தாவரங்களை தனித்தனியான தாவர இனங்களாக பாகுபடுத்த முடிந்தது… ஒவ்வொரு தாவரத்தையும் குறித்த தகவல்கள் அவற்றின் மருத்துவப் பயன்பாடுகள் செய்யுள் வடிவத்தில் மலபார் பகுதி ஈழவர்களால் தெரிவிக்கப்பட்டன. இவற்றுள் சில செய்திகள் மிகத் தொன்மையான பழஞ்சுவடிகளிலிருந்து வந்தவையாக இருந்தன. இந்தத் தாவரத் தொகுப்பியல் ஐரோப்பாவில் வெகுவாகப் பரவியது… “தாவரவியலின் இலக்கணம் குறித்து எழுதிய ஜான் ரே (John Ray) வான் ரீட்டினை வாசித்திருந்தார் என்ற போதிலும் உயிரினம் (species) குறித்த அறிவினை அவரிடம் சேர்த்த ஈழவர்களின் பங்களிப்புக்கு அவர் முக்கியத்துவமும் அளிக்கவில்லை…”
Posted in அறிவியல் on 22 October 2008
Stats: பார்வை: 758 and 7 Comments
பாரத விண்வெளியாளர்கள் வெற்றிகரமாக “சந்திரயான்-1″ என்னும் விண்கலத்தை விண்வெளியில் நிலவை நோக்கிச் செலுத்தியுள்ளார்கள். தமிழ் இந்து.காம் அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. “பாரதம் போன்ற வளரும் நாடுகளுக்கு சந்திர மண்டல ஆராய்ச்சியெல்லாம் தேவையா? தரையில் மக்கள் கஷ்டப்படும் போது இந்த விண்வெளி ஆராய்ச்சி விரயமல்லவா” எனும் கேள்விகளை சிலர் எழுப்பலாம். உண்மையில் இந்த சந்திரயான் மூலம் நமது பூமியின் பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். பனிப்போரின் போது விண்வெளி ஆராய்ச்சி ஏறக்குறைய சோவியத்துக்கும் அமெரிக்காவுக்குமான கௌரவ [...]
Posted in அறிவியல் on 25 June 2008
Stats: பார்வை: 1,181 and 12 Comments
இந்திய மரபணு வகைகள் ஆராய்ச்சித் திட்டம் (The Indian Genome Variation Project or IGV Project) என்கிற இந்த இந்த ஆராய்ச்சியின் மூலமாக, மரபணுக்கள் எவ்வாறு நோய்களுக்குக் காரணமாக உள்ளன, எவ்வாறு நோய்த் தொற்றுக்கு மக்களை இலக்காக்குகின்றன, மருந்துகளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகின்றன என்பது பற்றிய பல முக்கியமான விவரங்கள் தெரியவந்திருப்பாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்…..
இந்த அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் ஆரியப் படையெடுப்பு, திராவிடர்களின் பூர்வீகம், இந்தியாவின் பண்டைக்கால புலம் பெயர்தல்கள் ஆகியவை பற்றி பொதுவாக நிலவும் வரலாற்று ஊகங்கள் பற்றிய பல துணுக்குறும் கேள்விகளை எழுப்புகின்றன.
Posted in அறிவியல் on 5 June 2008
Stats: பார்வை: 2,095 and 11 Comments
பூஜ்யம் மற்றும் தசம எண் முறை (decimal number system) இவற்றின் தோற்றம் பற்றி, இவை பாரத நாட்டில் தான் தோன்றியிருக்க வேண்டும் என்று உலகளாவிய அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது.
Posted in அறிவியல் on 30 April 2008
Stats: பார்வை: 1,125 and 4 Comments
இன்று சுற்றுப்புற சூழல் மாசுபட்டு அதுவே மனிதகுலத்துக்கு பெரிய சாபக்கேடாக விளங்குகிறது. மானுடகுலமே அழிந்துவிடுமோ என்கிற அளவில் இயற்கை வளங்கள் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பலவித இயற்கை பேரழிவுகளும் இடர்பாடுகளும் நோய்களும் உருவாகியுள்ளன. இந்த சூழலில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க இந்து தருமம் பல நல்லவழிகளை நவீன மனிதனுக்கு அளிக்கிறது. அடுத்த தலைமுறைகளும் நன்றாக வாழும்படியான வளங்குன்றா வளமை காண இந்து தருமம் கூறும் வழிகளைக் குறித்த ஒரு சிறியபார்வையே கீழே உள்ளது.
இந்து தருமத்தில் மலைகளும் நதிகளும் [...]
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்