அறிவியல்

இந்து அறிவியல் சிந்தனைகள், பங்களிப்புகள், ஆன்மிக-அறிவியல் உரையாடல்கள்..

அறிவியல்

வெறும்கால் அறிவியல்

வெறும்கால் அறிவியல்

“மூக்குக் கட்டைப் பிரிக்கப் போகிறேன். ரத்தம் வந்தால் குடித்துவிட வேண்டும். என் மேல் துப்புகிற வேலையெல்லாம் வேண்டாம். ஒருவர் என்மேல் துப்பி, என் சட்டையெல்லாம் ஒரே ரத்தக் கறையாகிவிட்டது. கொஞ்சம் வலிக்கும். பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார் டாக்டர். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆபரேஷன் செய்தபின் ஒரு பொட்டு கூட ரத்தம் வராமல், வலியும் இல்லாமல் இரண்டு, மூன்று நாள் தெம்பாக சுற்றிக்கொண்டிருந்தேன். கட்டு பிரிக்கப்போனால் இப்படி ரத்தம், வலி என்றால் வயிற்றைக் கலக்காமல் என்ன செய்யும்! படுக்க வைத்து என் வயிற்றின் மேலேயே மருத்துவக் கருவிகள் நிறைந்த துண்டையும் வைத்தார். மெல்ல மெல்ல கட்டை அவிழ்த்து, ஒரு... [மேலும்..»]

அறிவியல்

சந்திரயான், பாரம்பரிய அறிவியல் மற்றும் அரைகுறை ‘பகுத்தறிவு’…

சந்திரயான், பாரம்பரிய அறிவியல் மற்றும் அரைகுறை ‘பகுத்தறிவு’…

இந்து மரபில் மட்டுமே இந்த ராகு-கேது தொன்ம மரபு பூமி-சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்துடனும் நிழல்களுடனும் தொடர்பு கொள்ளச் செய்யப்பட்டு அவை சாயாகிரகங்கள் என அழைக்கப்பட்டன. வானியல் கணித்தல்களில் ஒரு கணிதச்சமன்பாட்டின் அங்கமாக மாற்றப்பட்டன....இந்திய பாரம்பரிய் அறிவியல் சஞ்சிகையில் பஞ்சாங்கங்களின் மழைக்கணிப்பு குறித்து ஒரு ஆராய்ச்சி வெளிவந்தது.. போலி பகுத்தறிவு பேசி அரசியல் நடத்தி இன்றைக்கு பெரும் பொறுப்பில் இருக்கும் தமிழகத் தலைவர் ஒருவர் சந்திரயான் விண்கலம் குறித்து கவிதை என்கிற பெயரில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் தெரியும் இந்து எதிர்ப்பு வக்கிரம் அந்த தலைவரது பகுத்தறிவின்மைக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருப்பதுதான்... [மேலும்..»]

அறிவியல்

பச்சை பச்சையாகச் சில விஷயங்கள்

பச்சை பச்சையாகச் சில விஷயங்கள்

நமக்குப் பொதுவாக கிடைக்கும் சித்திரம் உலகெங்கும் பரவிய மேற்கத்திய நாகரிகத்தின் பிரதிநிதிகள் ஆங்காங்குள்ள செடிகொடிகள் விலங்குகளை ஆராய்ந்து அவற்றினை ஒரு அறிவியல் முறைப்படிப் பாகுபடுத்தி அந்த வகைப்படுத்தல் அறிவியலை உலகெங்கும் பரப்பினர் என்பதுதானே? ... அறிவியல் வரலாற்றாசிரியர் க்ரூவின் கணிப்புப்படி தாவரவியல் ஆராய்ச்சியாளர் லின்னயஸ் இந்தியப் பகுப்பு முறையின் அடிப்படையிலேயே ஏறக்குறைய 240 தாவரங்களை தனித்தனியான தாவர இனங்களாக பாகுபடுத்த முடிந்தது... ஒவ்வொரு தாவரத்தையும் குறித்த தகவல்கள் அவற்றின் மருத்துவப் பயன்பாடுகள் செய்யுள் வடிவத்தில் மலபார் பகுதி ஈழவர்களால் தெரிவிக்கப்பட்டன. இவற்றுள் சில செய்திகள் மிகத் தொன்மையான பழஞ்சுவடிகளிலிருந்து வந்தவையாக இருந்தன. இந்தத் தாவரத் தொகுப்பியல் ஐரோப்பாவில்... [மேலும்..»]

அறிவியல்

நிலவில் தடம் பதிக்கும் பாரதம்!

நிலவில் தடம் பதிக்கும் பாரதம்!

பாரத விண்வெளியாளர்கள் வெற்றிகரமாக “சந்திரயான்-1” என்னும் விண்கலத்தை விண்வெளியில் நிலவை நோக்கிச் செலுத்தியுள்ளார்கள். தமிழ் இந்து.காம் அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. “பாரதம் போன்ற வளரும் நாடுகளுக்கு சந்திர மண்டல ஆராய்ச்சியெல்லாம் தேவையா? தரையில் மக்கள் கஷ்டப்படும் போது இந்த விண்வெளி ஆராய்ச்சி விரயமல்லவா” எனும் கேள்விகளை சிலர் எழுப்பலாம். உண்மையில் இந்த சந்திரயான் மூலம் நமது பூமியின் பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். பனிப்போரின் போது விண்வெளி ஆராய்ச்சி ஏறக்குறைய சோவியத்துக்கும் அமெரிக்காவுக்குமான கௌரவ பிரச்சனையாகவும் தொழில்நுட்பப் போட்டியாகவும் திகழ்ந்தது. ஆனால் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி எப்படி விண்வெளி தொழில்நுட்பத்தை மண் சார்ந்த பிரச்சனைகளை... [மேலும்..»]

அறிவியல்

இந்திய மரபணுக்கள் (ஜீன்கள்) பற்றிய அறிவியல் ஆய்வுகள்

இந்திய மரபணுக்கள் (ஜீன்கள்) பற்றிய அறிவியல் ஆய்வுகள்

இந்திய மரபணு வகைகள் ஆராய்ச்சித் திட்டம் (The Indian Genome Variation Project or IGV Project) என்கிற இந்த இந்த ஆராய்ச்சியின் மூலமாக, மரபணுக்கள் எவ்வாறு நோய்களுக்குக் காரணமாக உள்ளன, எவ்வாறு நோய்த் தொற்றுக்கு மக்களை இலக்காக்குகின்றன, மருந்துகளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகின்றன என்பது பற்றிய பல முக்கியமான விவரங்கள் தெரியவந்திருப்பாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்..... இந்த அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் ஆரியப் படையெடுப்பு, திராவிடர்களின் பூர்வீகம், இந்தியாவின் பண்டைக்கால புலம் பெயர்தல்கள் ஆகியவை பற்றி பொதுவாக நிலவும் வரலாற்று ஊகங்கள் பற்றிய... [மேலும்..»]

அறிவியல்

பூஜ்யம் பாரதத்தின் கண்டுபிடிப்பா?

June 5, 2008
-
பூஜ்யம் பாரதத்தின் கண்டுபிடிப்பா?

பூஜ்யம் மற்றும் தசம எண் முறை (decimal number system) இவற்றின் தோற்றம் பற்றி, இவை பாரத நாட்டில் தான் தோன்றியிருக்க வேண்டும் என்று உலகளாவிய அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது. [மேலும்..»]

அறிவியல்

இந்து தருமமும் சுற்றுப்புற சூழலும்

இந்து தருமமும் சுற்றுப்புற சூழலும்

இன்று சுற்றுப்புற சூழல் மாசுபட்டு அதுவே மனிதகுலத்துக்கு பெரிய சாபக்கேடாக விளங்குகிறது. மானுடகுலமே அழிந்துவிடுமோ என்கிற அளவில் இயற்கை வளங்கள் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பலவித இயற்கை பேரழிவுகளும் இடர்பாடுகளும் நோய்களும் உருவாகியுள்ளன. இந்த சூழலில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க இந்து தருமம் பல நல்லவழிகளை நவீன மனிதனுக்கு அளிக்கிறது. அடுத்த தலைமுறைகளும் நன்றாக வாழும்படியான வளங்குன்றா வளமை காண இந்து தருமம் கூறும் வழிகளைக் குறித்த ஒரு சிறியபார்வையே கீழே உள்ளது. இந்து தருமத்தில் மலைகளும் நதிகளும் செடி கொடிகளும் விலங்குகளும் இறைத்தன்மை கொண்டவையாக மதிக்கப்படுகின்றன. ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்’ எனும் உபநிடத வரி அனைத்து... [மேலும்..»]