ரமணரின் கீதாசாரம் – 14

ரமணரைத் தரிசிக்க வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவர், ரமணரது வாழ்க்கைச் சரிதையை எழுதியிருப்பதாகவும் அதை ரமணரே திருத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரமணரும் ஒத்துக்கொண்டு, அதை முடித்து அந்தக் கைப்பிரதியை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். அதில் ரமணருக்குப் பல மனைவிகள் உண்டு என்றும், அவருக்குக் குழந்தைகள் உண்டு என்பன போன்ற உண்மைக்குப் புறம்பான விவரங்கள் இருந்தன [..]

View More ரமணரின் கீதாசாரம் – 14

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 1

இந்த அறிவிப்பு நிச்சயமாக பார்ப்பனர் மற்றும் உயர்த்தப்பட்ட சாதி இந்துக்களின் மனங்களை உலுக்கும் என்று அம்பேத்கர் எதிர்பார்த்தார். ஆனால், அம்பேத்கரின் இந்த அறிவிப்பால் உயர்த்தப்பட்ட சாதி இந்துக்கள் மனம் மாறவில்லை. மாறாக பார்ப்பனர் பலர் மகிழ்ச்சியடையவே செய்தனர். சீர்த்திருத்த எண்ணம் கொண்ட சில இந்துக்கள் மட்டுமே கவலைப்பட்டனர்.

View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 1

ரமணரின் கீதாசாரம் – 13

எல்லா ஆசைகளையும் விட்டொழிப்பது என்பது சாமான்ய காரியமல்ல என்றாலும், இந்த வகையான சிறிய ஆசைகள் கூட இல்லாது இருப்பவனுக்கே மனம் ஒரு ஸ்திரநிலைக்கு வந்து அவனை மேலும் உள்நோக்கிச் செல்ல வைக்கும். அவனுக்கே தத்துவ தரிசனமும் கிட்டும். […]

View More ரமணரின் கீதாசாரம் – 13

ரமணரின் கீதாசாரம் – 12

சிறு வயதில் ரமணர் திருவண்ணாமலையை அடைந்ததுமே தன் கையில் இருந்த சில்லறைக் காசுகளை குளத்தில் தூக்கி எறிந்துவிட்டார். அதன் பின் அருணாச்சலக் கோவிலைச் சுற்றி வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்தார். தொடக்க காலத்தில் ஊரில் உள்ள வீடுகளின் வாயில் முன் நின்று ஏதும் கேட்காது, அவர்களாகவே அளிக்கும் உணவை தன் இரண்டு கைகள் கொள்ளும் அளவு மட்டும் வாங்கி சாப்பிட்டுப் போய் விடுவார். பின் அதுவும் இல்லாது பாதாள லிங்கத்தின் அருகே பல நாட்கள் கண்களை மூடி அமர்ந்திருந்த நேரத்தில் [..]

View More ரமணரின் கீதாசாரம் – 12

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3

பெருமானே! முந்தைய மகா பிரளயத்தின்போது, பிரபஞ்சம் என்பது நாம ரூபங்களோடு இல்லாமல் இருந்தது. அப்பொழுது மாயை என்னும் மூலப் பிரக்ருதி உன்னிடமிருந்து பிரியாவண்ணம், புலன்களைக்கொண்டு நேராகவோ, அனுமானத்தாலோ அறியப்படாத ஒன்றாய் விளங்கிற்று. பிறப்பிறப்பு நிலைகளும் இல்லை; பகல் இரவு எதுவும் இல்லை. பரமானந்த சோதியாக நீ ஒருவனே பொலிந்து நின்றாய் [..]

View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-05

கேரளம் கேவலமான கதை

[…] சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கேரளத்திற்கும் பாக்கிஸ்தானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாக்கிஸ்தான் எனும் தனி நாடு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக முகமது அலி ஜின்னா பிரச்சாரம் செய்த தென்னகப் பகுதி கேரளவில் உள்ள மலபார். […] அப்போதிருந்து முகமதியத் தீவிரவாதம் நாளொரு கொலையும், பொழுதொரு ஆக்கிரமிப்புமாய் பாக்கிஸ்தான் உதவியுடன் இங்கு பிரம்மாண்டமாகப் பரவி விட்டது.

View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-05

ரமணரின் கீதாசாரம் – 11

ரமணர் காலத்தில் அவரது ஆஸ்ரமத்திற்கு அருகே குடி கொண்டிருந்த பலவித மிருகங்களும் அவரிடம் அன்யோன்யமாகப் பழகி இருக்கின்றன. குரங்குகள், அணில், காக்கை, பாம்பு, மயில், பசு, மான் மற்றும் ஒரு சிறுத்தை கூட அவர் முன்னிலையில் சகஜமாக இருந்திருக்கின்றன என்றால் அந்த சீவ ராசிகளுக்குக் கூட நாம் இப்போது சொன்ன சமநோக்கு இருந்திருக்கின்றன என்றுதானே பொருள்?[..]

View More ரமணரின் கீதாசாரம் – 11

ரமணரின் கீதாசாரம் – 10

ஒன்று கிடைக்க வேண்டும் அல்லது சேர வேண்டும் என்று நினைப்பதும் ஆசையே; ஒன்று கிடைக்க வேண்டாம் என்பதும் ஆசையே. அப்படி அது இருதரப்பட்டது போலவே, சேரவேண்டியது சேராவிட்டாலும், சேர வேண்டாதது சேர்ந்து விட்டாலும் வருவது கோபமே.[..] சலனமற்ற மனமாகிய நீர்பரப்பில் தோன்றும் குமிழிகள் போல இருப்பதால், அவை எழாத இடத்தில் மனமும் அடங்கியே இருக்கும். சாதகனைப் பொறுத்தவரை அவனது ஒவ்வொரு எண்ணமும் அடங்க அடங்க அவனுக்கும் மன அமைதி கிடைக்கும் [..]

View More ரமணரின் கீதாசாரம் – 10

ரமணரின் கீதாசாரம் – 9

சாதாரணமாக அருச்சுனன் போன்ற வீரர்கள் போர்க்களத்தில் புகுந்தால் பகைவர்களை வென்று வெற்றியைக் குவிப்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆனால் இங்கோ அருச்சுனனுக்கு ஏற்பட்ட நிலை அவனது மன சஞ்சலத்தினால் ஏற்பட்டுள்ளது. முன்னால் நிற்பவர்களைப் பகைவர்களாகப் பார்க்காது தன் சுற்றத்தினர்களாகப் பார்த்ததால் வந்த விளைவு [..]

View More ரமணரின் கீதாசாரம் – 9

ரமணரின் கீதாசாரம் – 8

ஒரு முறை ரமணர் இருக்கும் பக்கம் அவருக்கு வெகு அருகில் ஒரு பாம்பு வந்ததாம். அவர் பாம்பைப் பார்த்துக்கொண்டு நிற்க, பாம்பும் அவரைப் பார்த்து படமெடுத்துக் கொண்டு நின்றதாம். வெகு நேரம் சென்ற பின் பாம்பு தன் வழியே போக, அவரும் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த அரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்பர் ஒருவர் ரமணருக்கு அந்த சமயத்தில் என்ன மாதிரி உணர்வு இருந்தது என்று அவரிடம் கேட்டிருக்கிறார் [..]

View More ரமணரின் கீதாசாரம் – 8