கொலைகாரக் கிறிஸ்தவம் — 21

முதலில் சாதாரண விசாரணைகள் செய்யப்படும் குற்றம் சாட்டப்பட்டவன் “கிறிஸ்துவுக்கு எதிரானவன்” எனப் பட்டம் சூட்டப்பட்டு, இன்னொரு பிரிவான “செக்யூலர்” பிரிவுக்கு (மதச் சார்பற்றவர்களை விசாரிக்கிற பிரிவு!) அனுப்பி வைத்தார்கள். அந்தப் பிரிவே மேற்கண்ட உடல் ரீதியான சித்திரவதைகளை “கிறிஸ்துவுக்கு எதிரானவனுக்கு” வழங்கும். எப்படிச் என்னென்ன காரணங்களுக்காக, எத்தனை நாட்களுக்குச் சித்திரவதைசெய்யவேண்டும் என்பதற்கான வழிகாட்டிகள் துல்லியமாக எழுதிவைக்கப்பட்டு, அதன்படியே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 21

கொலைகாரக் கிறிஸ்தவம் — 20

“ஹிந்துக்கள் தங்கள் திருமணங்களை ஹிந்துப் பண்டிகைகளுடன் சேர்த்துக் கொண்டாடுவதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். எனவே ஹிந்துத் திருமணங்கள் எவையும் திருவிழாக்காலங்களிலோ அல்லது பிறமதச் சடங்குகளுடனோ கொண்டாடுவதனை முற்றிலும் தடுத்து அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். பாதிரிகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஹிந்துக்களைக் கண்காணித்து அவர்களில் எவரேனும் பெற்றோர்களை இழந்த அனாதைகளாக, பதினான்கு வயதிற்கும் குறைந்தவர்களாக இருக்கிறார்களா என்பதினைக் கண்டறிந்து, அந்த அனாதைகளை உடனடியாகப் பிடித்துக் கொண்டுவரவேண்டும். அவ்வாறு பிடிபட்ட அனாதைகளை உடனடியாக கிறிஸ்தவனாக ஞானஸ்னானம் செய்துவைக்கவேண்டும்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 20

கொலைகாரக் கிறிஸ்தவம் — 19

சில சமயங்களில் ஹிந்துக் குழந்தைகளின் தகப்பன்மார்கள் உயிருடன் இருந்தபோதே அவர்களின் குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பிடிக்கப்பட்டு, சர்ச்சுகளின் அடைக்கப்பட்டுப் பின்னர் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். பாதிரிகளின் கொடூரங்களுக்கு அஞ்சிய பல ஹிந்துக்கள் இந்தச் சம்பவங்களை கண்ணீருடன் ஏற்றுக் கொண்டு அமைதியானார்கள். ஏனென்றால் போர்ச்சுக்கீசியக் கோர்ட்டுகளில் ஹிந்துக்களின் சொற்களுக்கு மதிப்பில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் மிக மோசமாக பழிவாங்கப்படுவார்கள் என்பதும் இன்னொருபுறம்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 19

கொலைகாரக் கிறிஸ்தவம் — 18

“இந்த உத்தரவு வெளியிடப்படும் இந்த நாளிலிருந்து, எந்தவொரு ஹிந்துவும், கோவா நகருக்குள்ளோ அல்லது அதைச் சுற்றியுள்ள தீவுகளிலோ திருமணம் செய்யத் தடைவிதிக்கப்படுகிறது. அதை உதாசீனம் செய்பவர்களுக்கு 1000 ஜெராஃபின்ஸ் பணம் அபராதம் விதிக்கப்படும். கோவா ஹிந்துக்கள் தங்களின் நெற்றியில் சந்தனப் பொட்டு வைக்கவும், அரிசிப் பொட்டு வைக்கவும் தடைவிதித்தார்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 18

கொலைகாரக் கிறிஸ்தவம் — 17

போர்ச்சுகீசியர் ஆட்சிக்குட்பட்ட இந்தியப் பகுதி எவற்றிலும் பிராமணர்கள் எவரும் குடியிருக்க அனுமதிக்கவே கூடாது எனவும், அவர்களுடன் கிறிஸ்துவமத நம்பிக்கையற்றவர்களும் விரட்டியடிக்கப்படவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. . ஹிந்துக்கள் என்கிற ஒரே காரணத்திற்க்காக பல்வேறு அவமானங்களும், கொடுமைகளும், உடல் உறுப்புகளைச் சிதைத்தலும் வெளிப்படையாகச் செய்யப்பட்டது.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 17

கொலைகாரக் கிறிஸ்தவம் – 16

கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்படுபவன் பிடிக்கப்படுகையிலும், அவன் ஆர்ச் பிஷப்பின் முன்னிலையில் வைத்தே இன்குசிஷன் விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அவ்வாறு ஆர்ச் பிஷப் இல்லாத நிலையில் அவருக்கு அடுத்த நிலையிலுள்ள கிறிஸ்தவப் பாதிரிகள் அந்த இடத்தை வகித்தார்கள். மதம்மாற்றப்பட்ட எந்தவொரு முஸ்லிமும், குரானைப் படிப்பதோ அல்லது முகமது நபியைக் குறித்துப் பேசுவதோ குற்றமாகும்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 16

கொலைகாரக் கிறிஸ்தவம் — 15

இந்துக்கள் கோவாவிலிருந்து வெளியேறியதைச் சாக்காக வைத்துக்கொண்டு 1567-ஆம் வருடம் செலாஸ்ட் பகுதியில் எஞ்சியிருந்த பிற கோவில்களை இடித்துத் தள்ளினார்கள், போர்ச்சுக்கீசியக் கிறிஸ்தவப் பாதிரிகள். ஹிந்துக்கள் எடுத்துச் செல்லாமல் விட்டுச்சென்ற கடவுளர்களின் சிலைகளும் தெருவில் தூக்கியெறியப்பட்டுத் துண்டுகளாக உடைத்துத் தள்ளப்பட்டன.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 15

கொலைகாரக் கிறிஸ்தவம் — 14

போர்ச்சுக்கீசிய அரசருக்கு மிக நெருக்கமானவரான பாதிரி மின்குல் வாஸ், போர்ச்சுக்கல்லுக்குச் சென்று திரும்பிய சிறிது காலத்திற்குள்ளாகவே ஹிந்துக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். அரசனிடமிருந்து பெற்றுவந்த அளப்பரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி கோவாவிலிருந்த ஹிந்துக் கோவில்களை இடித்தும், ஹிந்துக்களைத் துன்புறுத்தியும் வந்ததால் ஹிந்துக்களின் கோபத்தைச் சம்பாதித்திருந்த மின்குல் வாஸ் இறுதியில் ஹிந்துக்களால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 14

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4

ஹெச்.எஃப்-24 விமானத்தின் வடிவமைப்பு சிறந்து விளங்கியபோதிலும், பிரிஸ்டல் சிட்டலி ஆர்பியஸ் தயாரித்து வழங்கிய அதன் இரட்டை எஞ்சின்கள் வலிமையற்றவையாக இருந்ததால், எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. இப்பொழுது அந்த விமானங்கள் பாரதத்தின் பல விமானதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை ஒரு வெட்கக்கேடு என்று உணர்வதால், விமானப்படைத் தலைமையகமும், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனமும் பாராமுகமாகவே இருக்கின்றன

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 2

விமானத்தாக்குதல் வரலாற்றிலேயே, ஒரு நாட்டை மண்டியிடச்செய்த விமானம் மிக்-21ஆகத்தான் இருக்கும் எனலாம். பாரதம் தனது மிக்-21 விமானங்களை அப்பொழுதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பியது. 1971 டிசம்பர் 14ல் காலை 11 மணி அளவில் டாக்காவில் கவர்னர் மாளிகையச் சுற்றி வட்டமிட்ட அவ்விமானங்கள் குண்டுமாரி பொழியவே, கவர்னர் ஐக்கிய நாட்டு விமானத் தாக்குதல் பாதுகாப்பிடத்திற்கு ஓடி ஒளிந்துகொண்டார்.

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 2