சமூகம்

இந்து சமுதாயம், வாழ்க்கை முறை, சமூக பிரசினைகள், தீர்வுகள்…

கல்வி, சமூகம்

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 1

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள்  – 1

தங்கள் சமூகத்தில் நவீன கல்வி கல்வி பெற்றவர்களது எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று எண்ணும் அனைவரும் தமது ஜாதி அமைப்புகள் வாயிலாக கல்வி நிறுவனங்கள் தொடங்குவதை குறித்து யோசிக்க வேண்டும்... ஒரு கல்வி நிறுவனத்தின் சிறப்பு அதன் கட்டிடங்களிலோ, பேருந்துகளிலோ இல்லை. அந்நிறுவனத்தின் மனிதவளத்தில் தான் உள்ளது. உங்கள் ஜாதியை சேர்ந்த ஒருவனுக்கு வேலை கொடுத்தால் ஒரு குடும்பம் நன்றாக இருக்கும். அவ்வளவு தான். ஆனால் திறமையான ஆசிரியர் ஒருவருக்கு வேலை கொடுத்தால் ஒரு தலைமுறை மாணவர்கள் நல்வாழ்வு பெறுவார்கள். சென்ற தலைமுறையில் இந்த விஷயத்தில் மிக தெளிவாகி இருந்தார்கள். பல கிறிஸ்தவ நிறுவனங்கள் குடுமி... [மேலும்..»]

சமூகம், தொடர், நிகழ்வுகள்

கையாலாகாதவனாகிப்போனேன்! — 6

கையாலாகாதவனாகிப்போனேன்! — 6

அவர் அமெரிக்கா வருவதற்குமுன் அவரது தம்பி ஆறு வயதில் காலமாகி விட்டான் என்றும், என் மகனைப் பார்த்தால் அவன்நினைவு வருகிறது என்றும், ஆகவே என் மகனுக்கு வாங்கித் தருவது காலம்சென்ற தனது தம்பிக்கு வாங்கித் தருவதுபோல இருக்கிறது என்று மனம்விட்டு தனது உள்ளக்கிடக்கையைப் பகிர்ந்துகொண்டார். திடுமென்று ஒருநாள் முன்னறிவிப்பின்றி எங்கள் வீட்டிற்கு வந்தவர், “நான் படிப்பை விட்டுவிடப் போகிறேன்!” என்று சொன்னபோது எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. காரணம்சொல்ல மறுத்துவிட்டார். சிலமணி நேரம் எங்களுடன் பேசிவிட்டு, எங்கள் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு, எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். [மேலும்..»]

அறிவியல், சமூகம், பொருளாதாரம்

புல்லட் ரயில் எனும் பெருங்கனவு

September 14, 2017
-
புல்லட் ரயில் எனும் பெருங்கனவு

நம்மூரிலே இருக்கும் ஆகச்சிறந்த அறிவாளிகள் ராக்கெட் விட்ட போதும் இதையே தான் கேட்டார்கள். இப்போது புல்லட் ரயிலுக்கும் இதையே தான் கேட்கிறார்கள். சீனா எப்போது புல்லட் ரயிலை ஆரம்பித்தது? 2007 இல் தான். ஆமாம். பத்தே பத்து வருசம் முன்பு தான்...சென்னை மும்பை விமான வழியாக 2 மணி நேரம் ஆகும். அதுவே அதிவேக ரயில் வழியாக 4 மணி நேரம் தான் என்றால்? அதுவும் கட்டணமும் விமானக் கட்டணத்தைவிட மூன்று மடங்கு குறைவு என்றால்? இதைவிடவும், புல்லட் ரயில் புதிய அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளுக்கான கனவை தூண்டிவிடுமல்லவா? டெல்லி மெட்ரோ கட்ட 7 வருடங்கள் என்றால்... [மேலும்..»]

அனுபவம், இந்து மத விளக்கங்கள், சமூகம், சூழலியல்

வாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா !

வாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா !

‘ஹாய், ஊ’ என்று நாம் கூப்பிடுவது போலக் கண்ணன் மாடுகளைக் கூப்பிட மாட்டான். கண்ணன் எல்லாப் பசுக்களுக்கு பெயர் வைத்துத் தான் கூப்பிடுவான். கண்ணன் பெயர் சொல்லிக் கூப்பிடும் போது அவை வாலை ஆட்டிக்கொண்டு வருமாம். ”இனிது மறித்து நீர் ஊட்டி” என்கிறாள் ஆண்டாள்... போன வருடம் அக்டோபர் மாதம் பிருந்தாவன், மதுரா, துவாரகா என்று யாத்திரை சென்ற போது எல்லா இடங்களிலும் ஒன்றைக் கவனித்தேன். அது பசுக்களை தெய்வமாகவே பாவிக்கிறார்கள். சாலை ஓரங்களில் பசுக்களுக்கு கழணீர் தொட்டிகள் நிறையக் கட்டியுள்ளார்கள். பல இடங்களில் காய்ந்த புல், தழைகளைப் பெரிய மிஷின் வைத்து பொடியாக்கி பசுக்களுக்கு... [மேலும்..»]

இந்து மத மேன்மை, சமூகம், நிகழ்வுகள்

இன்றைய இந்தியாவில் ஒரு சிரவண குமாரன்

இன்றைய இந்தியாவில் ஒரு சிரவண குமாரன்

சிரவண குமாரன் கதை என்று ஒன்று இராமாயணத்தில் வரும். பெற்றோரின் சேவையை உயிரினும் மேலாக கொள்வதே மகனின் கடமை என்பதை உணர்த்த சனாதன தர்மத்தில் இந்த கதை அடிக்கடி நினைவுகூரப்படுகிறது. அதை போன்றதொரு சம்பவம் ஒரிசாவில் சமீபத்தில் உண்மையிலேயே நடந்துள்ளது...இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் கார்த்திக் சிங் தன் பெற்றோரை ஒரு காவடியில் வைத்து எடுத்துக்கொண்டு ஒரு 40 கிலோமீட்டர் கால்நடையாகவே சென்று நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார், தன் மேல் போடப்பட்ட வழக்கை மறு விசாரணை செய்து தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்காக... இந்த தேசம் பன்னெடுங்காலமாக தன் ஆன்மாவை இழக்காமல் உள்ளது. பெரும்... [மேலும்..»]

கல்வி, சமூகம், நிகழ்வுகள்

நீட் தேர்வு, மாணவி அனிதா தற்கொலை: சில எண்ணங்கள்

நீட் தேர்வு, மாணவி அனிதா தற்கொலை: சில எண்ணங்கள்

கண்டிப்பாக இது அனிதாவே முடிவு செய்திருக்க முடியாது. அவரை மூளைச் சலவை செய்திருக்கலாம். அல்லது இது 'கொலை'யாக கூட இருக்கலாம். இன்று அனிதாவிற்காக குரல் கொடுக்கும் அத்தனை தமிழக கட்சிகளும் நினைத்தால் நீட்டில் தேர்வெழுதிய அத்தனை தலித் மாணவர்களுக்கும் தங்கள் சொந்த செலவிலேயே மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுத்திருக்க முடியும். அவ்வளவு மெடிக்கல் கல்லூரிகளையும், அவ்வளவு பணபலத்தையும் இந்த அரசியல்வாதிகள்தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி செய்ய இவர்கள் என்ன தியாகிகளா? நீட் தேர்வில் பாதிக்கப்பட்டது இந்த திராவிட அரசியல்வாதிகள்தான். அதனால் திட்டம்போட்டு அனிதாவை பலிகடா ஆக்கியிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வர பாஜக தமிழ்நாட்டில் முட்டுக்கட்டையாக... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், சமூகம், வழிகாட்டிகள்

ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்

ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்

ஒருமுறை அரசவையிலிருந்த ஆச்சாரவாதிகள் ஞானேஷ்வரரையும் அவருடைய சோதரரையும் பிரஷ்டர்கள் என இகழ்ந்தனர். நிவர்த்திநாதர் ‘பூசுரரே வேதங்களை அளித்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் இவர்களெல்லாம் பிறப்பால் உயர்ந்தவர்களா? தம் வாழ்க்கையால் உயர்ந்தவர்களா?” என வினவினார். அப்போது தண்ணீரை சுமந்த படி ஒரு எருமை அங்கே வந்தது. ஞானேஸ்வரர் அந்த எருமையைக் காட்டி “உங்களுக்கெல்லாம் இந்த எருமைக்கு இருக்கும் ஞானத்தில் ஒரு சிறு பகுதி இருக்குமென்றாலும் நீங்கள் மதிக்கப்படத் தக்கவர்கள்” என்றார். இதைக் கேட்ட ஆச்சாரவாதிகள் “நீ சொன்னதை இப்போது நிரூபிக்காவிட்டால் உன்னை வெட்டிப் போடுவோம்” என்றனர்.... [மேலும்..»]

அரசியல், ஊடகங்கள், சமூகம்

கரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி?

கரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி?

" கலைஞர் கை விரல் நகங்களைப் பரிசோதித்த காவேரி மருத்துவமனை டாக்டர்கள் அசந்து போனார்களாம். எத்தனை பிரதமர்களை அடையாளம் காட்டிய விரல்களின் நகங்கள்" என்று தலைமை மருத்துவர் சொன்னதும் ஸ்டாலினும் அழகிரியும் கண்ணீரால் ஆஸ்பத்திரி வராண்டாவையே கழுவினார்களாம்”... நீங்கள் மோதியை எதிர்த்து எழுதுவதாக மவுண்ட் ரோட் மன்றோ சிலை மேல் சத்தியம் செய்தால் பல விசேஷ , சுவிசேஷ கருத்துக்களால் தூண்டப்பட்ட தன்னார்வ, சுயநிதி, அரசு சாரா அமைப்புகள் நிதி உதவி செய்யும். உங்கள் பெற்றோர், மனைவி, நாடு, மனசாட்சி மற்றும் குழந்தைகளை பிணையாகக் கொடுக்க நேரிடும். அதனாலென்ன? குழுமம் முக்கியமல்லவா?.... [மேலும்..»]

இலக்கியம், சமூகம்

தமிழன்னையின் அணிகலன்கள்

தமிழன்னையின் அணிகலன்கள்

தமிழன்னையின் காதினில் குண்டலங்களாக, குண்டலகேசி ஒளிர்கின்றது. கைகளில் அணிந்த வளைகளாக வளையாபதி திகழ்கின்றது. கருணை பொருந்திய அத்தமிழன்னையின் மார்பில் (சீவக)சிந்தாமணி எனும் ஆரம் ஒளிவீசுகின்றது. அன்னையின் மெல்லிய இடையில் (மணி)மேகலை அணியப்பட்டுள்ளது. அவளுடைய திருவடிகள் சிலம்பார் இன்பப் போதொளிர்பவை- அதாவது சிலம்புகளை (சிலப்பதிகாரம்) அணிந்த திருப்பாதங்கள். நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குகிறாள் இவள். அத்தகைய தமிழ் நீடுவாழ்க!’ என உளங்கனிந்து பெருமிதத்தில் விம்மி வாழ்த்தும் புலவர் யார்?.... [மேலும்..»]

இலக்கியம், சமூகம்

தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்

July 18, 2017
-
தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்

வந்தே மாதரம் பாடலைப் போன்றே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் அடிப்படையில் வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கிறது. முன்னதை எதிர்க்கும் சிலர் அதைவிடவும் வெளிப்படையாக இந்துமதக் கூறுகளை உள்ளடக்கிய பின்னதை மட்டும் ஏற்பார்களாம். பண்பாட்டு அறிவீனத்தில் விளைந்த குழப்பவாதம், இரட்டைவேடம், போலித்தனம்... சுந்தரம்பிள்ளை அந்த வரிகளை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தான் சம்ஸ்கிருதம் ஐரோப்பாவிலும் அதைத் தொடர்ந்து உலகெங்கும் பிரபலமாகிக் கொண்டிருந்தது. இந்திய தேசிய மறுமலர்ச்சியையும், இந்திய சுதந்திரத்தையும் தொடர்ந்து சம்ஸ்கிருதத்திற்கு ஏறுமுகம் தானே தவிர அது ‘அழிந்து ஒழிந்து சிதைய’ எல்லாம் இல்லை... [மேலும்..»]