ஆன்மிகம்

ஆன்மிகம், இலக்கியம், தத்துவம், வேதம்

பாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை

பாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை

தீ வளர்த்தல் என்பது ஒரு சடங்கு மட்டுமல்ல. அன்பு, அறிவு ,அருள், இன்பம் ஆகியவை வேண்டும் கனலாகும் அக்னி தத்துவத்தில் அவனுக்கு பெருமதிப்பு இருந்ததால்தான் வழிபாட்டு அம்சங்களில் மட்டுமின்றி, கவிதைநயம் வெளிப்படும் இடங்களிலெல்லாம் தீ, நெருப்புச்சுவை, சுடர் சோதி, கனல், அக்னிக்குஞ்சு போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறான். அக்னியின் பல்வேறு வடிவங்கள் குறியீடுகளாகவும், நேர்முகக் கருத்துக்களாகவும், அமைகின்றன. அறியாமை உறக்கத்திலிருந்து ஆத்மாவை எழுப்பும் விடியலாக வைகறை வேதங்களில் காட்டப்படுகிறாள். [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், வரலாறு

ஆதிசங்கரர் படக்கதை — 8

ஆதிசங்கரர் படக்கதை — 8

நீங்கள் அத்வைதம் கற்பிக்கும் ஆச்சாரியார் இல்லையா! புலையன் என்று என்னை விலகிப்போகச் சொல்கிறீர்களே, அது என் தேகத்தையா, இல்லை, என் ஆத்மாவையா? நம் இருவரின் உடம்பும் சோற்றால் ஆனவை; இந்தச் சோற்றாலான உடம்பு, அந்தச் சோற்றாலான உடம்பைவிட்டு விலகவேண்டுமா? [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம், கோயில்கள், பண்டிகைகள்

மகாமகம்: ஓர் அனுபவம்

February 18, 2016
-
மகாமகம்: ஓர் அனுபவம்

தண்ணீரை இறைத்து விளையாடும் குழந்தைகளின் சிரிப்பலைகள், மஞ்சள் கரைந்து விழும் மங்கலப் பெண் முகங்கள், இணைந்து தீர்த்தமாடும் தம்பதிகளின் இல்லற நேசம், முதியவர்களை கவனத்துடன் அழைத்து வரும் இளையவர்களின் சிரத்தை, இறைநாமங்களைக்கூறிக் கொண்டு ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் நீர்மொண்டு ஊற்றுக் கொள்ளும் பக்தி என எல்லாம் கலந்து அந்த ஆறு ஏக்கர் மகாமகக் குளம் ஒரு தெய்வீகக் களியாட்டக் களம் போலத் தோற்றமளித்தது... மகாமகக் குளம் என்று அம்புக் குறி போட்டு அங்கங்கு வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகை கூட விடாமல் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு வைத்திருப்பது, மிகவும் அருவருப்பையும் கசப்புணர்வையும் ஏற்படுத்துகிறது... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத மேன்மை, கதைகள், தத்துவம்

ஆதிசங்கரர் படக்கதை — 6

ஆதிசங்கரர் படக்கதை — 6

நான் பூமியல்ல, ஆகாயமல்ல, நீருமில்ல, நெருப்புமல்ல. காற்றுமல்ல, மனமுமல்ல, உணர்வுமல்ல. அனைத்தையும் கடந்த சிவம்! [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், தத்துவம்

வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை

வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை

தேளின் கொடுக்கை நீக்கிவிட்டால் அது துன்பம்தர முடியாததைப்போல மனிதனின் தீயகுணத்தை அறிந்து, அதைத் தகுந்த சமயத்தில் நீக்கி விட்டால், அவனால் துன்பம் யாருக்கும் எந்தக் காலத்திலும் ஏற்படாது என்பது வேமானாவின் கருத்தாகும். ஒரு சமூக சீர்திருத்தவாதியாக கருத்துக்களை ஆழமாகவும் உறுதியாகவும் எவ்விதச் சார்பற்றும் சொல்வதால், “வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை” என்று தெலுங்கு இலக்கிய உலகம் அவரை அடைமொழியோடு போற்றுகிறது. பிறந்த சாதியைவிட மனிதனின் குணம்தான் அவனை எக்காலத்திலும் மேம்படுத்துகிறது என்பது சீர்திருத்தவாதிகளின் ஒருமித்த கருத்தாகும். மனிதனின் தீயகுணத்தை அழிக்க உதவுவதுதான் உயர்வான சிந்தனை... “இடமும் நேரமும் நம்முடையதாக... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தத்துவம், தரவிறக்கம், பொது, வீடியோ

பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்

December 21, 2015
-
பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்

பாரதியாரின் பகவத்கீதை மொழியாக்கத்தை எனது குரலில் ஒலிப்பதிவு செய்திருக்கிறேன். கூடிய வரையில் நிதானமாகவும், வாசகங்களின் பொருள் நன்கு வெளிப்படுமாறும் வாசிக்க முயன்றுள்ளேன். கீதா ஜெயந்தியும் வைகுண்ட ஏகாதசியும் ஆகிய இப்புனித நாளில் இந்த ஒலிப்பதிவை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். 18 அத்தியாயங்களும் தனித்தனி ஒலிக்கோவைகளாக உள்ளன. அவற்றைத் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.... கீதையின் வாசகங்களை பாராயணம் செய்வதும், கேட்பதும், மனதில் மீட்டிப் பார்த்து தியானிப்பதும், கீதையைக் கற்கும் மாணவர்கள், கற்று முடித்தவர்கள், யோக சாதகர்கள், ஆன்மத் தேடல் கொண்டவர்கள் எனப் பல சாராரும் எப்பொழுதுமே கைக் கொண்டு... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், கதைகள்

ஆதிசங்கரர் படக்கதை — 5

ஆதிசங்கரர் படக்கதை — 5

உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற எங்கிருந்தாலும் ஒடோடிவருவேன், அம்மா! என்னைப் பிரிவதால் உங்கள் கீர்த்தி பலமடங்கு அதிகமாகும். [மேலும்..»]

இலங்கைத் தமிழர், சைவம், வழிகாட்டிகள்

ஆறுமுகநாவலரின் தமிழ் நடை

ஆறுமுகநாவலரின் தமிழ் நடை

நாவலரும் அவர் வழி வந்த நல்லறிஞரும் திருத்தி வளர்த்த நம் தமிழ்மொழி இப்போது சிதைக்கப்பட்டு வருவது கொடுமையானது. பத்திரிகைகள் முதலிய ஊடகங்களிலேயே பல எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் மிக அதிகளவில் காணப்படுகின்றன. சிலரது எழுத்துக்களில் ஆங்கிலத்தில் வேற்றுமையுருபுகளை பெயருடன் சேர்க்காமற் பிரித்தெழுதுவது போல, தமிழில் எழுத முயல்வது தெரிகின்றது. புதிது புதிதாக பல மரபுகள் உருவாகின்றனவா? என்று ஐயமுண்டாக்குவதுபோல பலரது எழுத்துநடை உள்ளது. [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், சைவம், தத்துவம்

சிவநெறி – சமய அவிரோதம்

சிவநெறி – சமய  அவிரோதம்

அவிரோதம் என்பதற்குப் பட்சபாதமின்மை எனப் பொருள் உரைத்தனர், உரையாசிரியர். அதாவது எல்லாச் சமயங்களையும் நடுநிலையில் நின்று நோக்குதல் என்பது பொருள். ஞானியர் எம்மதத்து நூல்களிலும் கூறப்பட்டுள்ள மெய்ப்பொருளைத் தம்முடைய பொருளாகவே கொண்டு பயனடைவர். தாம் படித்துள்ள ஒருநூலின் பொருளே பெரிது எனக் காதும்பேதைமை பெரியோர்க்கில்லை. சமயங்களின் வரலாற்றில் ஒருமதத்தைச் சார்ந்தவர் மற்றொரு மதத்தினை வாதில் வென்றார் எனக் கூறுவதைக் காண்கின்றோம். தோற்றனவாகக் கூறப்படும் மதங்கள் இன்றும் நிலவக் காண்கின்றோம். வென்ற மதங்கள் ஒளிகுன்றி இருப்பதையும் காண்கின்றோம்.... [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், கோயில்கள், சைவம், பண்டிகைகள்

பார்புகழ் கார்த்திகை தீபம்

பார்புகழ் கார்த்திகை தீபம்

கார்த்திகைதீப ஒளியைக் கற்பனை நயம்படக் கூறுவது மிகவும் ரசிக்கத்தக்கதாகும். பொருளும், நயமும், கருத்தாழமும் செறிந்த பாடல்கள் இவை. கார்த்திகைதீபக் காட்சியை பல்வேறு விதங்களில் பகிர்கின்றது கார்த்திகைத்தீபவெண்பா. கற்று, கேட்டு, இறைவன் பெருமைகளை உணர்ந்து அன்புடன் வழிபடுவோருக்கு, அவனே அத்தீபம்போல உறுதுணையாய் நிற்கின்றான். சோணகிரியின் அழகிய உச்சியில் அஞ்சேல் என அபயமளித்தபடி கார்த்திகைத் தீபமாக விளங்குகிறான் ஈசன். அண்ணாமலையே ஈசன் - அவனே கார்த்திகைத் திருத்தீபம். [மேலும்..»]