ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும் - பாகிஸ்தானிலிருந்து திரும்பி வரும் ஹிந்துக்கள் - மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்...: தினமணி கட்டுரை

Articles in the வைணவம் Category

பக்தி ஓர் எளிய அறிமுகம் - 4
By சுஜாதா தேசிகன்
Posted in இந்து மத விளக்கங்கள், வைணவம் on 17 February 2010
Stats: பார்வை: 651 and 6 Comments

பெருமாளை “நீ அப்பேர் பட்டவன், இப்பேர் பட்டவன்” என்று சும்மா புகழ்ந்து அன்பு செலுத்துவது கடினம்; செயற்கைத்தனமும் பொய்மையும் கலந்துவிடும். அதே பெருமாளை தன் குழந்தையாக, தன் காதலியாக பாவித்தால் சுலபமாக அன்பு செலுத்த முடியும். அதனால்தான் ஆழ்வார்கள்…

ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்
By ஜெயஸ்ரீ சாரநாதன்
Posted in இலக்கியம், வைணவம் on 28 December 2009
Stats: பார்வை: 770 and 10 Comments

புறநானூறில் 12 விதமான பறைகள் சொல்லப்படுகின்றன. இவற்றுள் ஆண்டாள் எந்தப் பறையைக்கொட்டியிருப்பாள்? .. அப்படியான ஒரு ரகசியத்தை, எல்லார் முன்னிலையிலும், எல்லோரும் அறியும் வண்ணம் போட்டு உடைத்து விட்டான் கண்ணன். அறை பறை என அறிவித்துவிட்டான்… தூங்கிக் கொண்டிருப்பவனை ஆண்டாள் எழுப்பியது போல, நாமும் அவனை எழுப்பிக் கேட்பதில், பாவைச் சிறுமியர் போல நமக்கும் ஒரு கிளுகிளுப்பு!

தமிழர் கண்ட நீளா தேவி
By ஜெயஸ்ரீ சாரநாதன்
Posted in இலக்கியம், வைணவம் on 12 December 2009
Stats: பார்வை: 883 and 5 Comments

தமிழ் மரபில் மட்டும்தான் இவளைப் பற்றி செய்திகள் உள்ளன என்பது, தமிழர்கள் வேதக் கருத்துகளில் எந்த அளவு ஆழ்ந்திருந்தனர் என்று காட்டுகிறது … மஞ்சள் துண்டு மகிமையைக் கண்டவருக்கு, போகம் காட்டி அவன் பாதையில் திரும்ப வேண்டி மோகம் கொள்ளச் செய்ய வேண்டும். தோஷங்களை அவன் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நிழல் போன்ற நீளா தேவியின் கருணை - கருணைக்கே கருணை காட்டும் நீர்மை- தேவைப்படுகிறது.

யார் நப்பின்னை ?
By ஜெயஸ்ரீ சாரநாதன்
Posted in இலக்கியம், வைணவம் on 2 December 2009
Stats: பார்வை: 1,166 and 21 Comments

தமிழ் பக்தி உலகிலும் , இலக்கிய உலகிலும் , தனியிடத்தைப் பெற்ற மர்மப் பெண் நப்பின்னை … கடல் கொண்ட பின், தமிழுலகம் இழந்து விட்ட பல இலக்கியங்களுடன், இந்தத் திருமணம் பற்றிய குறிப்புகளும் மறைந்திருக்க வேண்டும். ஆனால் தப்பிப்பிழைத்த அந்த ஆயர் குடி மக்களால், அந்த பின்னை பெற்ற பேறு மறவாமல் பேசப்பட்டு வந்திருக்கிறது.. மாயோன் என்னும் கரும் தெய்வம் முலைகள் போன்ற இவ்விரு துருவங்களுக்கு இடையேயும் உலகை அணைத்துக் கொண்டு, ‘காஸ்மிக் ரே’ எனப்படும் கதிகளில் இருந்தும், பிற வகையான தீய கதிர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார்.

காற்றினிலே வரும் கீதம்
By எஸ்.ஜயலக்ஷ்மி
Posted in ஆன்மீகம், இசை, வைணவம் on 13 August 2009
Stats: பார்வை: 338 and 2 Comments

சிவந்து மலர்ந்த தாமரைப் பூவை வண்டுகள் சூழ்ந்து கொண்டது போல முகத் தாமரையை சுருண்ட தலைமயிர் அழகு செய் கிறது. இந்த முகத் தாமரை யிலிருந்து தேனினும் இனிய கீதம் பெருகி வருகிறது. இந்த அமுத கீதத்தைப் பருகிய மான்கள் எப்படி அனுபவிக்கின்றன? …ண்ணனின் கானா மிர்தம் கிளம்பியதுமே அங்குள்ள மரங்கள் எல்லாம் மகரந்தத் தாரைகளைப் பெருக்கு கின்றன. சில மரங்கள் இந்த வேணு கானத்தைக் கேட்பதற்காகக் கிளை களைத் தாழ்த்திக் கொண்டு நிழலைத் தரு கின்றன …

தீராத விளையாட்டுப் பிள்ளை
By எஸ்.ஜயலக்ஷ்மி
Posted in இலக்கியம், சிறுவர், மகளிர், வைணவம் on 28 July 2009
Stats: பார்வை: 396 and 5 Comments

… யசோதை கண்ணனைத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். கண்ணன் தொட்டில் கிழிந்து விடும்படி உதைக்கிறான். [பின்னால் சகடாசுரனை உதைப் பதற்கு ஒத்திகை பார்த்திருப்பானோ?]ஐயோ இப்படி உதைத்து, உதைத்துக் குழந்தைக்குக் காலெல்லாம் வலிக்கப் போகிறதே யென்று ஆதங்கத்தோடு தூக்கி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால் இடுப்பையே முறித்து விடுகி றானாம் ….

பெரியாழ்வாரின் பட்டினம்
By எஸ்.ஜயலக்ஷ்மி
Posted in வைணவம் on 4 March 2009
Stats: பார்வை: 492 and 6 Comments

எம்பெருமான் தன் உள்ளத்தில் குடிபுகுந்து விட்டதால் விஷ்ணுசித்தருக்கு இப்பொழுது தைரியமும் தன்னம்பிக்கையும் வந்து விட்டது. இதற்குமுன் தன் ஐம்புலன்களையும், நோய்களையும். மரணத்தையும், யமதூதர்களையும் கண்டு அஞ்சிய விஷ்ணுசித்தர் இப்பொழுது அதே ஐம்புலன்களையும், நோய்களையும், யமதூதர்களையும் தாமே வலிய அழைத்து, தன் அச்சமின்மையையும் தான் பாதுகாப்பாக இருப்பதையும் கர்வத்தோடு எடுத்துச் சொல்கிறார்…

திருப்பாணாழ்வார்
By எஸ்.ஜயலக்ஷ்மி
Posted in வழிகாட்டிகள், வைணவம் on 11 September 2008
Stats: பார்வை: 627 and 2 Comments

ஒருநாள் பாணர் கண்களை மூடிக் கருத்தினில் அரங்கனை நினந்து கவனந்தனை மறந்து அரங்கனையே தியானித்துக் கொண்டிருந்தார். பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்ய நீர் கொண்டு செல்வதற்காக அங்குவந்த லோகசாரங்க முனிவர், இவரை தூர விலகும்படிச் சொன்னார். ஆனால் அரங்கனையே நினைத்துக் கொண்டிருந்த பாணர் காதில் இது விழவில்லை. அவர் கவனம்தான் பெருமாளிடம் சென்று விட்டதே! அதனால் கோபம் கொண்ட லோகசாரங்கர் ஒரு கல்லைத் தூக்கிப் பாணர்மேல் எறிய பாணர் முகத்தில் இரத்தம் வழிந்தது. பாணர் கண்களைத் திறந்து பார்த்தார். ‘ஐயோ, அரங்கனுக்குத் திருமஞ்சனம் கொண்டு செல்லும் இம்முனிவரின் கைங்கர்யத்துக்குத் தடங்கலாக இருந்து விட்டோமே’ என்று வருந்தி விலகிச் சென்றார்…

வேட்டையாடி விளையாடும் அரங்கன்
By ஸ்ரீநிவாசன் ராஜகோபாலன்
Posted in ஆன்மீகம், வைணவம் on 27 August 2008
Stats: பார்வை: 845 and 3 Comments

வையாளி: இது ஸ்ரீரங்கத்தில் திருவரங்கனின் கோவிலில் மட்டுமே காணக்கிடைக்கும்
ஒரு வைபவம். ஆன்ம அனுபவம். நம்பெருமாளின் ராப்பத்து திருவிழாவின் 8-ம் நாள்
இந்த இன்ப அனுபவம் கிட்டும். இறை நம்பிக்கை உள்ளவர் இல்லாதவர் என்ற பாகுபாடு இன்றி, உணர்வுள்ள அனைவர் உள்ளங்களிலும் உயரனுபவம் ஏற்படுத்தும் உன்னத நிகழ்வு இது. பக்தரோடு, பத்தரும் பரவசமடையும் தருணம் இது.

எதனால் இந்த பரவசம் ஏற்படுகிறது? ஒத்திசையும் சக்திகள் ஒருங்கே வெளிப்படுவதால்
இந்த பரவச அனுபவம் நிகழ்கிறது. இங்கே வேகமும், வலிமையும், விவேகமும், நளினமும் ஒன்றாய் கலந்து வெளிப்படுகிறது. கடவுளின் காந்தி காந்தமாய் தீண்டுகையில் உடம்பு அதிருகிறது. மனது பரவசம் பரவசம் என்கிறது.

ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 3
By ஸ்ரீகாந்த்!
Posted in ராமாயணம், வைணவம் on 6 August 2008
Stats: பார்வை: 735 and 3 Comments

ராமன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத துணிவுடைய பெரும் வீரன். துணிவு என்பது மனச்சோர்வு ஏற்படும் காலத்திலும் அதற்கு இடம் கொடுக்காது சிறிதளவும் பின்வாங்காது இருத்தலே ஆகும்.

அழகிய மணவாள தாசரின் அகரவரிசைப் பாடல்
By தேவ்
Posted in இலக்கியம், வைணவம் on 4 August 2008
Stats: பார்வை: 439 and No Comments

அழகிய மணவாள தாசர் என்ற ஓர் அடியவர்; ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்’ என்றும் அழைப்பர். இவர் எழுதியது ‘அஷ்டபிரபந்தம்’ என்னும் நூல். எட்டு நூல்களின் தொகுப்பான இந்த நூலில் ‘திருவரங்கக் கலம்பகம்’ என்னும் நூலும் அடங்கும். திருவரங்கக் கலம்பகத்தின் ஒரு பாடல் உயிர் எழுத்துகளின் வரிசையில் அமைந்துள்ளது. இப்பாடல் பெருமானுடைய ஐந்து நிலைகளையும் விளக்குவதாகவும் திகழ்கிறது. எளிய மொழி அமைப்பும், பொருட்செறிவும் மனதைக் கவர்வதாக உள்ளது…

பாலராமாயணம் - 2
By லலிதா சேதுராமன்
Posted in இலக்கியம், சிறுவர், ராமாயணம், வைணவம் on 1 July 2008
Stats: பார்வை: 498 and 3 Comments

சிறுவர்களுக்காக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட ராமாயணம்.

அந்த வேள்வித் தீயிலிருந்து சிவந்த கண்களும் நெருப்புப் போன்ற தலைமயிரும் கொண்ட பூதம் ஒன்று தன் கையில் அமுத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டது. அதை வாங்கிப் பட்ட மகிஷிகளுக்குக் கொடுக்கும்படி தசரத சக்ரவர்த்தியை வசிஷ்டர் வேண்டிக்கொண்டார்….

ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 2
By ஸ்ரீகாந்த்!
Posted in ஆன்மீகம், வைணவம் on 18 June 2008
Stats: பார்வை: 679 and 3 Comments

வனப்பு மிகுந்த இந்த ஸ்ரீராம தரிசன காட்சியை கண்ணுற்ற தேசிகரின் உள்ளம் கசிந்து உருகுகிறது. தேசிகரும் இளைய பெருமாளைப் போலத்தான். உலக விவகாரங்கள் பற்றிய அறிவு ஏற்படும் முன்னரே அவருக்கு பக்தி, பரம்பொருள் மீது ஈடுபாடு ஏற்பட்டது. “த்வமேவமாதாச பிதாத்வமேவ” என்ற கீதா வாக்யத்தை அடியொற்றி பரம்பொருளான நாராயணனையே தாயாகவும் தந்தையாகவும் உளமாற நினைத்து உருகி பல பாசுரங்கள் இயற்றியிருக்கிறார்.

ஸ்ரீ மகாவீர வைபவம்
By ஸ்ரீகாந்த்!
Posted in வைணவம் on 8 June 2008
Stats: பார்வை: 1,004 and 4 Comments

தெய்வமாக பார்த்தால் தெய்வம். மனிதனாகப் பார்த்தால் மனிதன். காவிய நாயகனாகப் பார்த்தால் அப்படியே சொல்லப்பட்டிருக்கிறது.. ராமன் என்கிற அவதாரம், மனிதர்களாகிய நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே பார்க்கிறவர்களுக்கு தகுந்த வகையில் ஒரு உயர்வுத் தன்மையை எடுத்து வைக்கிறது. ராமாயணத்தில் ராமன் மட்டும் அல்ல. அங்கே ஒவ்வொரு கதை மாந்தரும் ஒரு தர்மத்தை எடுத்து நடத்திக் காட்டுகிறார்கள். வாழ்க்கையின் உன்னதத்தை தெய்வமே இறங்கி வந்து வாழ்ந்து நமக்கு காட்டியதுதான் ராமாயணம். நல்லவனாக இருப்பது மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டியது ராமாயணம்.

பெரிய திருவடி
By ஹரி கிருஷ்ணன்
Posted in வைணவம் on 1 May 2008
Stats: பார்வை: 592 and 1 Comment

அனுமனைச் சிறிய திருவடி என்று அழைப்பது தமிழ் மரபு என்று பார்த்தோம். அப்படியானால் பெரிய திருவடி என்றொருவர் இருக்க வேண்டும். ஆமாம். வைணவ சம்பிரதாயங்களை அறிந்தவர்கள் கருடனுக்கே பெரிய திருவடி என்ற பெயர் வழங்கப்படுகிறது என்றறிவார்கள். ‘இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது அதன் மீது திருவடி படுகின்ற தன்மையால் திருவடி என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. ‘தாவடி ஓட்டும் மயிலிலும்’ என்று அருணகிரி நாதர் முருகன் திருவடி பட்ட இடங்களில் முதன்மை இடமாக வாகனத்தைக் குறிப்பிடுகிறார்.

சிறிய திருவடி
By ஹரி கிருஷ்ணன்
Posted in வைணவம் on 25 April 2008
Stats: பார்வை: 692 and 3 Comments

பாதங்கள் இவை என்னில்…
இறைவனுடைய திருவடியைப் பாடுவதென்றால் ஒரு தனி மகிழ்ச்சி பிய்த்துக் கொண்டு போகும் கவிஞர்களுக்கு. ‘மொத்தம் மூணு இடங்களில் அவனுடைய திருவடி பட்டது’ என்று சொல்கிறார் அருணகிரி நாதர். ‘தாவடி ஓட்டும் மயிலிலும்’ அவன் பயணப்படுவதற்காக ஏறி உட்கார்கிறான் பார், மயில், அது மேல அவன் அடியிணை பட்டது. அங்கே மட்டுமா பட்டது? இல்லை; தேவர்களின் பகையை அழித்தவன்; இந்திரனுக்கு அவன் உயிரையும், இந்திராணிக்கு அவள் மாங்கல்யத்தையும் மீட்டுத் தந்தவன் [...]



"));