காசி – இலங்கைத் தமிழ் கலாசார பிணைப்புகள்

பாரதப்பிரதமர் தொடங்கி வைத்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்தும் காசிக்கு காலகாலமாக அறிஞர்களும் பக்தர்களும் பயணித்திருக்கிறார்கள்… இலங்கையின் பல பாகங்களிலும் காசி விஸ்வநாதருக்கு பேராலயங்கள் உள்ளன. புனித யமுனை நதி நீரை எடுத்து வந்து நல்லூரில் யமுனா ஏரியில் அந்த தீர்த்தத்தை சேர்த்ததாகவும் ஐதீகம்… காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகளோடு கூட, காசிக்கும் இலங்கை சைவ தமிழர்களுக்கும் உள்ள தொடர்பும் கூட இவ்வேளையில் சிந்திக்கப்பட வேண்டும்…

View More காசி – இலங்கைத் தமிழ் கலாசார பிணைப்புகள்

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் அண்ணாமலை: ஒரு பார்வை

கடந்த 10 வருடங்களில் இலங்கைத் தமிழர் பிரசினை குறித்து இவ்வளவு தீர்க்கமான, விசாலமான, ஆழமான அரசியல், வரலாற்றுப் புரிதல்களை கொண்டதாக, இந்திய தேசிய நலனையும் ஈழத்தமிழர் மீது உண்மையான, பாசாங்கற்ற பரிவையும் ஒருங்கே உள்ளடக்கியதாக இப்படி ஓரு நேர்மையான பேச்சு தமிழ் மண்ணில் பேசப்பட்டிருக்கிறதா?..

View More முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் அண்ணாமலை: ஒரு பார்வை

சிங்கக்கொடி நாட்டில் சிங்கம்: இலங்கையில் தலைவர் அண்ணாமலை

அண்ணாமலையின் பயணம் அரசுமுறைப் பயணம் அல்ல. இக்கட்டான நிலையில் இருக்கும் இலங்கையில் என்ன நடக்கிறது என்று நேரில் அறிந்து வரவும், ஆறுதல் சொல்லவும், அபயக்கரம் நீட்டவும். அதன் பின்னான அரசியல் ஆக்கங்களைச் செய்யவும் ஓர் அருமையான வாய்ப்பாக இந்தப் பயணம் அவருக்கு அமைந்திருக்கிறது. இப்படி ஒரு அழைப்பை திமுக ஏற்படுத்திக் கொள்ள முடியாதா? உள்மனது சொல்லுகிறது, முடியாது. அங்கே அவர்களுக்கு வரவேற்பு கிடைக்குமா அல்லது வேறு ஏதும் கிடைக்குமா என்பது எனக்கு ஐயமாக இருக்கிறது..

View More சிங்கக்கொடி நாட்டில் சிங்கம்: இலங்கையில் தலைவர் அண்ணாமலை

இலங்கையின் பொருளாதார நெருக்கடி: ஒரு பார்வை

இந்த நெருக்கடி திடீரென்று உருவானதல்ல. ஆட்சிபீடத்தில் அமர்ந்த ராஜபக்சே சகோதர்களின் அரசு அந்த நாட்டின் பொருளாதாரத்தையும், நல்வாழ்வையும் நாசமாக்குவதற்கு என்னவெல்லாம் குளறுபடிகள் சாத்தியமோ எல்லாவற்றையும் “ரூம் போட்டு யோசித்து” செய்வது போல ஒவ்வொன்றாக செய்தது. இந்தியாவுடனான நெருக்கமான உறவிலிருந்து விலகி விலகி, பகாசுர சீனாவின் ராட்சச டிராகன் கரங்களில் தனது நாட்டின் துறைமுகம், கட்டமைப்புகள், வளங்கள் என ஏறக்குறைய எல்லாவற்றையும் அடகுவைத்து விட்டு இப்போது இலங்கை முழி பிதுங்கி நிற்கிறது.. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியர்களான நமக்கு இதிலிருந்து கிடைக்கும் பாடங்கள் முக்கியமானவை…

View More இலங்கையின் பொருளாதார நெருக்கடி: ஒரு பார்வை

காஷ்மீர் முதல் ஈழம் வரை – புத்தக அறிமுகம்

காஷ்மீர் முதல் யுத்தம், சரஸ்வதி நதி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்பான பாரம்பரியக் கல்வி மற்றும் தொழில்நுட்பம், கீழவெண்மணி படுகொலை, மரிச்சபி படுகொலை, சிலைத்திருட்டு, தலித் அரசியல் என இந்திய அரசியல், வரலாற்றுக் களத்தின் முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பற்றி எழுதப்பட்ட முக்கியமான நூல்களின் சாராம்சமானது இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது…

View More காஷ்மீர் முதல் ஈழம் வரை – புத்தக அறிமுகம்

தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்

‘உண்மை வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் பொய் ஊரைச் சுற்றி வந்து விடும்’ என்ற பழமொழி உண்டு. அது முற்றிலும் உண்மை என்பதைத்தான், தற்போது நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளும் வன்முறையாளர்களும் இணைந்து நடத்தும் கலவரங்கள் காட்டுகின்றன. தேசம் முழுவதும் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens-NRC), குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amndment Act- CAA) ஆகியவை பற்றிய முழுமையான விவரங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்காக, கேள்வி- பதில் வடிவில் தெளிவான விளக்கங்கள் இங்கே…

View More தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்

குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு

பாஜகவை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் மோசமான நிலையில் வாழும் இந்துக்களின் எந்த ஒரு அவலநிலையையும், கிறிஸ்துவர்களின் அவலநிலையையும் பேசக்கூடாது என்று இங்கே ஒரு அறிவுஜீவி வர்க்கம் நினைக்கிறது. இந்துக்கள் பாஸிஸ்டுகள், இந்து மதமே கேவலமானது, இந்துக்கள் கொன்றொழிக்கப்பட்டால் அது நல்லதுதான் என்று அளவுக்கு இவர்களது மனத்தில் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான கடும் வெறுப்பு நச்சாக ஆக்கிரமித்திருக்கிறது… இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே. 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை. ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்கவில்லை… பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்தியாவை விட வறுமை, வேலைவாய்ப்பின்மை. இஸ்லாமியர்கள் தனியான தேசிய இனம், பிரிவினை வந்தாலே இஸ்லாமிய சொர்க்க பூமி உருவாகி பாலும் தேனும் பெருக்கெடுக்கும் என்று தம்பட்டம் அடித்து லட்சக்கணக்கான இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்களைக் கொன்றழித்து உருவான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவாகியுள்ளது…

View More குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு

கொலைகாரக் கிறிஸ்தவம் – 27

1621 பிப்ரவரி 2-ல் யாழ்ப்பாணத்தில் போர்ச்சுகீசிய உயரதிகாரியாகப் பதவியேற்ற கவர்னர் ஒலிவேராவின் ஆணையின்படி அன்றே நல்லூரின் புகழ்பெற்ற கந்தசுவாமி ஆலயம் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1622-ஆம் வருடம் இன்னொரு புகழ்பெற்ற பெருங்கோவிலான ஆரியச் சக்கரவர்த்தி ஆலயமும், திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயமும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 27

இலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்

நல்லூர் ஆலயத்திற்கு வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற தமிழ் தாய்மார்களை ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குள் செல்ல விடாது தடுத்துள்ளனர். இதனால், ஆலய நிர்வாகத்தினருக்கும், பெண்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது… இந்தத் தமிழ் தாய்மார்கள் சென்ற ஐநூறு நாட்களாக போரின்போது காணமல்போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு இலங்கை அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துபவர்கள். இவர்கள் எல்லோரும் இந்துக்கள். சாத்வீகமாகப் போராடுபவர்கள். எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவர்கள். பதவி ஆசை பிடித்த தமிழ் அரசியல்வாதிகளால் திரும்பியும் பார்க்கப் படாதவர்கள். தமது போராட்டத்தின்போது வைத்துக்கொண்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காக யாழ்ப்பாணம் நல்லூர் கந்தஸ்வாமி ஆலயத்திற்கு இவர்கள் வந்தபோது அதனை நிறைவேற்ற விடாமல் ஆலய நிர்வாகிகளால் தடுக்கப் பட்டார்கள். தீச் சட்டி ஏந்தவும் தேங்காய் உடைக்கவும் இவர்கள் மறுக்கப் பட்டார்கள். இதைப்போன்ற மிகவும் கேவலமான வேதனை தரும் செயலை இக்கோவில் நிர்வாகத்தவர்கள் செய்தது மிகவும் கண்டிக்கத் தக்கது….

View More இலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்

இலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்

நாள்சென்றதும், பாதிரி வீட்டுப் பூசையறையில் ஏசுவின்  படமொன்றை மாட்டச்சொன்னார்.  இதை விரும்பாவிடினும்,  பாதிரியின் வேண்டுதலுக்கிணங்க, அவ்வீராங்கனையின் கணவரும், தந்தையும் வீட்டுப் பூசையறையில் ஏசுவின் படத்தை மாட்ட இடங்கொடுத்தார்கள்.  பிறகு, பாதிரி இந்துத் தெய்வங்களின் படங்களை அங்கிருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், அக்குடும்பம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.  நாங்கள் உடனே குறுக்கிட்டோம்..
விடுதலையடைந்த இலங்கையில் இந்து இனம், கோவில்களின்மீது பவுத்தர்களின் தாக்குதல் நடப்பது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது.  அதிலும், 1972ல் இலங்கைச் சட்ட அமைப்பு அமுலுக்கு வந்து, இந்துசமயத்திற்கு மேலாகப் பவுத்தசமயத்திற்கு சிறப்பிடம் வழங்கப்பட்டவுடன் இத்தாக்குதல்கள் அதிகமாகின….

View More இலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்