மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 4 (இறுதி பாகம்)

இன்றிருக்கும் மிதவாதிகள் ஒரு அளவிற்கு மேல் மதகுருமார்களின் எதிர்ப்பை சந்திக்க முடியவில்லை. யாரேனும் முயற்சித்தாலும் உடனடியாக அவர் “இஸ்லாத்துக்கு எதிரி” என்று முத்திரை குத்தப்பட்டு விடுகிறார். இங்குதான் மிதவாத முஸ்லீம்களுக்கு மேற்கத்திய நாடுகள் இடம் கொடுக்கும் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக அமேரிக்காவிலும் பிற மேற்குலக நாடுகளிலும் இன்று இருக்கும் முஸ்லீம் விரோத மனநிலையை மிதவாதிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு சால்ஜாப்புகள் செய்து தப்பிக்காமல் அதை நேருக்கு நேராக அணுக வேண்டும்.

View More மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 4 (இறுதி பாகம்)

மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 3

“ஜனநாயகத்தின் முதுகெலும்பு பேச்சு சுதந்திரம். ஒவ்வொரு மனிதனும் தன் மனதில் உள்ளதைக் கூற சமூகம் அனுமதிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை மட்டு படுத்தினால் நமக்கு எதிராக யார் பேசினாலும் அதை தடுக்கும் அதிகாரத்தை நாம் அடைந்து விரைவில், ஒரு ஹிந்துவும் சர்வாதிகாரியாக மாறுவார்.

View More மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 3

மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 2

ஆப்கானிஸ்தானில் புதிய அரசியல் அமைப்பு சட்டம் வடிவமைக்கப்படும் போது ஒரு சட்டம் சேர்க்கப்பட்டது. அதாவது ஒரு கணவன் தன் மனைவியை உடலுறவுக்காக மூன்று நாள் அழைத்தும் அவள் உடன்பட மறுத்தால் அவளுக்கு உணவு கொடுக்காமல் அவளை வழிக்கு கொண்டு வரக் கணவனுக்கு சட்டப்படி உரிமை உண்டு என்பது சட்ட மூலம்…

View More மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 2

உலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…

ஆண்டாண்டு தோறும் அமெரிக்க மக்கள் நியூ யார்க் நகர நிர்வாகத்தின் முன்னெடுப்போடு, இந்த தினத்தை ஒரு துக்க தினமாகக் கடைப்பிடிக்கிறார்கள்… அவர்களுடைய துயரங்களைப் புரிந்துகொள்ளும், பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், சில விதமான நிகழ்வுகளை ஆண்டாண்டு தோறும் துக்க தினமாக நினைவு கொள்வது விவேகம் அல்ல.. செப்டம்பர் 11 ஆம் தேதியை உலக சகோதரத்துவ தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் 2005 ஆம் ஆண்டு ஐ.நா. நிறுவனத்துக்கு அனுப்பினேன்…

View More உலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…

ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…?

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்பதே குற்றவியல் சட்டத்தின் மகிமை. நமது நாட்டிலோ, குற்றம் செய்தவர்களுக்கு முதல்மரியாதை. மதானியை கைது செய்ய எட்டு நாட்கள் காத்திருந்த அதே காவல்துறை தான், பிரக்யா சிங் தாகுரை கைது செய்து 13 நாட்கள் தகவல் தெரிவிக்காமல் மறைத்தது… காவல்துறையினர் வழக்கை சரியாக நிர்வகிக்காததால், சாட்சியமில்லை என்று கூறி அந்த வழக்கில் இருந்து மதானி விடுவிக்கப்பட்டார். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை…

View More ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…?

மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 1

மேலும் கி.பி.1200களில் முஸ்லீம் மன்னர்கள் தோற்கும் நிலை ஏற்பட்டவுடன் அந்த பிராந்தியத்திலிருந்த அத்தனை கிறிஸ்தவ மற்றும் யூதர்களை கொன்று குவித்து விட்டுத்தான் தோற்று ஓடினார்கள். தங்களுடைய அரசாங்கம் இருக்கும்வரை மதச்சார்பற்றவர்கள் போல் நடித்தவர்கள் தாங்கள் தோற்கும் நிலையில் மற்ற மதத்தினரை, அப்பாவிகளை கொன்று போட்டது எப்படி மதச்சார்பற்ற அரசாக வரலாற்றில் பார்க்கப்பட முடியும்?

View More மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 1

”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?

ப.சி.யின் பேச்சு நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி தற்காப்பு ஆட்டத்திற்கு தயாரானது… நக்சல் பாதிப்பு பகுதிகளில் “சிவப்பு” பயங்கரவாதத்திற்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவுவதை சிவப்பு- வெள்ளை பயங்கரவாதம் என்று கூறுவீர்களா?… உண்மைக் குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி வெளியில் சுதந்திரமாக உலா வருகின்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் முழங்கவும் துவங்கிவிட்டனர்…

View More ”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?

இராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலை

கிராமத்தில் இந்துக்கள் முஸ்லீம் ஜமாத்திற்கு வரி செலுத்திதான் தொழில் செய்ய முடியும் என்கிற நிர்பந்தம். காவல் துறையினர் உள்ளிட்ட மாவட்ட அரசு நிர்வாகங்கள் அனைத்தும் ஜமாத் மூலமாகத் தான் செயல்படுகின்றன.. கண்ணன் எனும் ஆட்டோ டிரைவர் ஜமாத்திற்கு மாதக் கட்டணம் செலுத்தமாட்டேன் என்று போராடத் துவங்கினார், இஸ்லாமிய மதத் வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். சுந்தர்ராஜ் எனும் நாட்டுப்படகு மீனவர் முஸ்லீம் மதம் சார்ந்த விசைப் படகு மீனவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

View More இராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலை

அஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை

மனித உரிமை ஆர்வலர்கள் சிலரும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கிவருகிறார்கள். இவ்வாறு சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் பங்களாதேஷிகள் என்று குறிப்பிடப்படுவதில்லை. முஸ்லிம்கள் என்றே அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். முஸ்லிம்களைப் பகைத்துக்கொண்டால் சிறுபான்மையினரின் எதிரி என்று முத்திரை குத்தப்பட்டுவிடும் என்ற பயம் அரசியல் கட்சிகளுக்கு- குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு- உள்ளது. இதனால் காங்கிரஸாரின் ஆதரவுடன் பங்களாதேஷிகள்…. இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததற்கு பல காரணங்கள் உள்ளன. வாக்குவங்கி சார்ந்த பயமும் ஓரு முக்கிய காரணமாகும்.

View More அஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை

பாகிஸ்தான் உடனான உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும்

மெழுகுவர்த்தியை முத்தமிட்டுக் கொண்டு எப்படியாவது சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும் என்று தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன் உரைத்துக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. காட்டுமிராண்டித்தனமாக, மூர்க்கத் தனமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கிக்கொண்டே இருப்பார்கள். அதற்கு பதிலடி கொடுக்காமல் சமாதானம், சமாதானம் என்று பிதற்றிக் கொண்டிருப்பது எந்தப் பயனையும் தரப்போவது இல்லை.

View More பாகிஸ்தான் உடனான உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும்