மகளிர்

பெண்களுக்கான பிரத்யேக, சிறப்புப் பகுதி.

பயங்கரவாதம், பிறமதங்கள், மகளிர், வரலாறு

வன்முறையே வரலாறாய்…- 30

September 8, 2014
-
வன்முறையே வரலாறாய்…- 30

முகமது பின் காசிம் தொடங்கி அனைத்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும் கடைப் பிடித்த இந்த குரூர நடவடிக்கைகளினால் அச்சமடைந்த, பாலியல் அடிமைகளாக விரும்பாத பல இந்திய ராஜ குலத்துப் பெண்களும், பிறரும் அரண்மனைகளின் அந்தப்புரங்களில் கட்டைகளை அடுக்கித் தீ மூட்டிப் பின்னர் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். இதே நிலைமை அக்பரின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. உதாரணமாக 1568-ஆம் வருட சித்தூர் போரில் 8,000 ராஜ புத்திர வீரர்களைக் கொன்ற அக்பர் அவர்களது பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார். ஆனால் இறந்த ராஜபுத்திரர்களின் மனைவிகள் அனைவரும் தீயில் குதித்துத் தற்கொலை (ஜவுஹார்) செய்து... [மேலும்..»]

ஆன்மிகம், சைவம், மகளிர்

கைகொடுத்த காரிகையர்: திலகவதியார்

கைகொடுத்த காரிகையர்: திலகவதியார்

மருள் நீக்கியார் அவர் மடிமேல் விழுந்து அழுதார். “அன்னையும் அத்தனும் சென்ற பின்னும் நீங்கள் துணை இருப்பதால் தான் நான் உயிரோடு இருக்கிறேன். நீங்களும் என்னைத் தனியே விட்டு விட்டால் உங்களுக்கு முன் நான் உயிர் துறப்பேன். இது நிச்சயம்” என்று அரற்றினார். இதைக் கேட்ட திலகவதியார், தம்பியின் முகத்தைத் துடைத்து ஆறுதல் கூறினாள். தம்பி உயிரோடு இருக்க வேண்டுமே என்ற கருணையினால் தம் உயிரைத் தாங்கிக் கொண்டு, திருமணம் செய்து கொள்ளாமல் எவ்வுயிர்க்கும் அருள் புரிந்து தவம் மேற் கொண்டு வாழ்ந்து வந்தார்.... உன் கருணை வெள்ளத்தில் ஆழும் தகுதி எனக்குண்டோ? என்னைத் தடுத்தாட்கொள்ள... [மேலும்..»]

அரசியல், ஆன்மிகம், இந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள், உடல்நலம், சமூகம், தத்துவம், தேசிய பிரச்சினைகள், தொடர், நிகழ்வுகள், பொது, மகளிர், வரலாறு, விவாதம்

மாற்றுப் பாலின ஆன்மிகம் -1

மாற்றுப் பாலின ஆன்மிகம் -1

ஐயாயியரம் ஆண்டுகள் தொடர்ச்சியான இந்த பண்பாட்டில் மட்டும்தான் உடல்சார்ந்த பாலினம் சார்ந்த பண்பாட்டு ஆன்மிக மரபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலினச்சிறுபான்மையினருக்கு மையத்துவம் அளிக்கும் உயிர் சடங்குகள், ஆன்மிக நெறிகள், தெய்வங்கள், திருவிழாக்கள் இங்குதான் உள்ளன. மாற்றுப் பாலினங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு அரசர்களாக இருந்திருக்கின்றனர். மாற்றுப்பாலினங்களைச் சார்ந்தவர்கள் இங்கு சமய மரபுகளை உருவாக்கியவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் மதபீடங்களை நிறுவியிருக்கிறார்கள். சம்பிரதாய மத எல்லைகளை கடந்த ஆன்மிகப் பண்பாட்டை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். பூசகர்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆன்மிக வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இவற்றை காப்பாற்றுவது நம் பெரும் பொறுப்பு. [மேலும்..»]

ஆன்மிகம், சைவம், மகளிர்

கைகொடுத்த காரிகையர்: திருவெண்காட்டு நங்கை

கைகொடுத்த காரிகையர்: திருவெண்காட்டு நங்கை

சோழவள நாட்டில் திருவெண்காடு என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரில் பிறந்ததால் இவருக்கு இப்பெயர் வாய்த்ததா அல்லது இவருடைய பெயரே இதுதானா என்று தெரியவில்லை. சிலருக்கு குறிப்பிட்ட ஊரில் பிறந்ததால் அந்த ஊரின் பெயரையே வைத்து அழைப்பார்கள். உதாரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வைகுண்டம் என்று பெயரிட்டு அழைப்பார்கள். அதேபோல ஸ்ரீரங்கம் என்ற பெயரும். தென்திருப்பேரையில் பிறந்தவர்களுக்கு திருப்பேரை நாச்சியார் என்று பெயரிடுவ தும் உண்டு. அப்படியே இந்தப் பெண்மணிக்கும் இப்பெயர் வந்திருக்கலாம். எப்படியோ இப்பேரால் இவர் பெரிய புராணத்தில் இடம் பெற்று அந்த ஊருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். இவர் செய்த தியாகம் தான் கொஞ்சமா?... [மேலும்..»]

அரசியல், இந்த வாரம் இந்து உலகம், இலங்கைத் தமிழர், சமூகம், தேசிய பிரச்சினைகள், தொடர், நிகழ்வுகள், பயங்கரவாதம், பொது, மகளிர், வரலாறு

முடிவல்ல தொடக்கம்

முடிவல்ல தொடக்கம்

பொதுவாக இந்திய அரசுக்கு ஒரு ‘நல்ல பெயர்’ உண்டு. வெளிநாட்டில் இந்தியர்கள் இன்னல்கள் படும் போது அது கண்டு கொள்ளாது என்பதுதான் அது. இந்திய அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் என்பது உலக பிரசித்தி பெற்றது. ... வெளியே தெரியும் காட்சிகளுக்கு அப்பால் பல விஷயங்கள் மோதி அரசால் நிகழ்த்தப்பட்டன. இந்திய ஊடகங்களில் அதிகம் கண்ணைக்கவராத ஒரு செய்தி உண்டு. பாரசீக வளைகுடாவிலும் ஏமன் வளைகுடாவிலும் விமானங்கள் தாங்கிய இந்திய போர்கப்பல்கள், ஐ.என்.எஸ்.மைசூர், ஐ.என்.எஸ்.தர்காஷ் ஆகியவை நிறுத்தப்பட்டன. ... வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இந்திய அரசு இப்போது அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக இயங்குகிறது என்பது நம் 67 ஆண்டுகள்... [மேலும்..»]

இலக்கியம், சைவம், மகளிர்

மானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)

மானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)

தலை மயிரை இழப்பதை பெண்கள் அபசகுனமாகவே நினைப்பார்கள்.நோய்வாய்ப்பட்டு அதன் காரணமாக தலை முடியை இழக்க நேரும் போது கூட அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள் வருந்துவார்கள். கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதைத் தவிர மற்ற நேரங்களில் தங்கள் கூந்தலை இழக்க மனம் ஒப்ப மாட்டார்கள். இந்த நிலையில் ஒரு பெண் தனது அலங்காரத்தோடு கூடிய கூந்தலை இழக்க நேரிட்டால்? அது எவ்வளவு கொடுமை! அதுவும் தன் திருமண நாளன்று? அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக் கும்? இப்படி ஒரு சம்பவம் நடப்பதை எந்தத் தாயால் பொறுக்க முடியும்? என்றாலும் தந்தைக்காகத் தன் அலங்கரிக்கப் பட்ட கூந்த... [மேலும்..»]

கோயில்கள், சமூகம், மகளிர்

பொள்ளாச்சி: இஸ்லாமிய அராஜகத்தை எதிர்கொண்ட இந்துப் பெண்கள்

பொள்ளாச்சி: இஸ்லாமிய அராஜகத்தை எதிர்கொண்ட இந்துப் பெண்கள்

100 பக்தர்கள் பூவோடு ஏந்தி அலங்கரிப் பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க ஊர்வலமாக வந்தனர்.   ஊர்வலத்தில் வந்த பெண்கள்  சாமியான போடப் பட்டிருந்த வீட்டின்  உரிமையாளரிடம் பந்தலை அகற்றக் கோரினர். அவர் ஒரு முஸ்லிம்..   தொழுகையை முடித்து வெளியே வந்த  100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்  வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாகப் பேசினர்..  நள்ளிரவு 12 மணிக்கு  கோவை போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு வந்தார்.. [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், பொது, மகளிர்

கைகொடுத்த காரிகை: மங்கையர்க்கரசியார்

கைகொடுத்த காரிகை: மங்கையர்க்கரசியார்

ஒருநாடு நீர்வளமும் நில வளமும் நிரம்பப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. நாட்டில் கலவரங்கள் ஏதும் நிகழாமல் அமைதிப் பூங்காவாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக மத, இனக் கலவரங்கள் நிகழாமல் இருக்க வேண்டும். நாட்டை ஆளும் மன்னர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் மன்னனே மதம் மாறி ஒருபக்கமாகச் சாய்ந்தால், நாடு என்னவாகும்? நாட்டில் குழப்பங்கள் எழுவதைத் தடுக்க முடியாது. இதுதான் பாண் டிய நாட்டில் நிகழ்ந்தது. பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி சமணர்களோடு சேர்ந்தான். அரசன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பதற்கேற்ப,  மக்களும் மன்னனைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். ... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், மகளிர்

கை கொடுத்த காரிகை: அப்பூதி அடிகள் மனைவி

கை கொடுத்த காரிகை: அப்பூதி அடிகள் மனைவி

சோழ வளநாட்டில் காவிரியாற்றின் கரையிலுள்ள சிவத்தலங்களுள் திருப்பழனமும் ஒன்று. திருவையாற்றுக்கு சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலம் ஸப்தஸ்தானங்களுள் இரண்டாவது தலமாகும். இத் தலத்தின் அருகில் சந்திரன் வழிபட்ட தலமாகிய திங்களூர் விளங்குகிறது. சந்திரன் வழிபட்ட தலம் என்பதை விட அப்பூதியடிகளால் பெயரும் புகழும் பெற்றது அவ்வூர். திங்களூரில் வாழ்ந்து வந்த அப்பூதி அடிகள் என்பவர் திருநாவுக்கரசருக்கு அடியவராக, அன்பனாக விளங்கினார். காணாமலே காதல் என்பது போல் நாவரசரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் ஆறாத அன்பு உடையவராக இருந்தார். எந்த அளவுக்கு அன்பு கொண்டிருந்தார் என்றால் தன் புதல்வர்களுக்கு மட்டுமல்லாமல் தன் வீட்டிலிருந்த பசு, எருமை, கன்றுகள்,... [மேலும்..»]

இந்து மத மேன்மை, கலைகள், மகளிர், மஹாபாரதம்

ஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி

ஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி

அம்பை ஜாவானியப் பெண்களின் ஆதர்ச நாயகி. Wayang Kulit என்ற தோல்பாவைக் கூத்துகளில் கிராமமக்கள் மிகவிரும்பிப் பார்ப்பதும் அவளது கதையைத்தான். ஜாவாவில் குழந்தைகளுக்கு அதுவும் பெண்குழந்தைகளுக்கு மாறுவேடப்போட்டி என்றால் வில்லேந்திய ஸ்ரீகண்டி வேடம்தான் முதல் தேர்வு... ஜாவானிய மஹாபாரதத்தில் ஸ்ரீகண்டியின் முற்பிறவியான அம்பையின் கதையில் பெரிய மாற்றம் இல்லை. வியாசரின் பதிவை ஒட்டிய பாரதக்கதையே. ஆனால் அவள் கொண்ட வெஞ்சினம் மறக்காமல் துருபதன் மகளாய்ப் பிறந்து குருக்ஷேத்திரத்தில் பீஷ்மரை வதைக்கும்வரை ஜாவானிய பாரதம் புதிய பார்வையில் போகும்... விரும்பியவண்ணம் உருவெடுக்கும் ஸ்ரீகண்டியின் ஆண், பெண் வடிவுக்கேற்ப நிமிர்ந்தும், குறுகியும் மடிய வல்ல, பெரும்புகழ் வாய்ந்த அந்த வில்லின்... [மேலும்..»]