வீடியோ

தில்லையம்பல நடராஜா…

[மேலும்..»]

பயங்கரவாதம்

இப்போது தில்லி : தொடரும் குண்டு வெடிப்புகள்

இப்போது தில்லி : தொடரும் குண்டு வெடிப்புகள்

சற்றுமுன் கிடைத்துள்ள தகவல்களின் படி தற்போது தில்லியில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. குண்டு வெடிப்புகளுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு இந்தியன் முஜாஹித்தீன் அமைப்பு(?) வழக்கம் போல ஈமெயில் அனுப்பியுள்ளது. நமது ‘பாவங்களுக்காக’ இப்படி பொதுமக்கள் கூடுமிடங்களில் குண்டுவைத்து கொல்கிறார்களாம், இந்த அல்லாஹ்வின் போராளிகள்(முஜாஹித் – இஸ்லாமிய போராளி). இந்த குண்டு வெடிப்பில் கவனிக்கத் தகுந்த அம்சம் ஒன்று உள்ளது. இது ரம்ஜான் மாதம். இந்தியாவெங்கும் இஸ்லாமியர்கள் 6-6:30 மணிக்கு தங்களது ரம்ஜான் நோன்பை முடிக்கிறார்கள். இந்த குண்டுகள் அந்த நேரத்தில் சரியாக வெடித்துள்ளன. அதாவது எதிர்பாராதவிதமாகக் கூட எந்தவொரு முஸ்லீமும் உயிரிழந்துவிடக்கூடாது என்பதால், சரியாக அவர்கள் அனைவரும்... [மேலும்..»]

கலைகள்

நினைவஞ்சலி: குன்னக்குடி வைத்தியநாதன்

நினைவஞ்சலி: குன்னக்குடி வைத்தியநாதன்

வயலின் மேதை குன்னக்குடி திரு. வைத்தியநாதன் இசையமைத்த 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்' என்ற தேனினும் இனிய பக்திரசம் சொட்டும் பாடல்களைக் கேட்டு உருகாத தமிழ் நெஞ்சங்கள் இருந்திருக்க முடியாது. பக்தியை இசைமூலம் வெளியிடும் முயற்சியில் பெரும் வெற்றிகண்டவர் வைத்தியநாதன். இந்துக் கடவுள்களின் மேன்மையையும், புராண பாத்திரங்களையும், தம் திரைப்படங்கள் மூலமாக மக்களிடம் கொண்டுசென்று பெரும்புகழ் பெற்ற திரு. ஏ.பி. நாகராஜன். தன் படங்களுக்கு குன்னக்குடி அவர்களின் இசைத் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவுசெய்து அதில் பெரும் வெற்றியும் பெற்றார். தனது வெற்றிப் படமான 'வா ராஜா வா'வில் குன்னக்குடி வைத்தியநாதனை... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், கவிதை, வழிகாட்டிகள்

இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!

இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!

தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைக் கொழுந்துவிட்டெரியச் செய்த மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள் இது.

அரசியல், ஆன்மீகம், காவியம், தத்துவம், சமூகம், முற்போக்குச் சிந்தனை, நகைச்சுவை என்று அவன் தொடாததில்லை. தொட்டுத் துலங்காததில்லை. ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு என்று பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். அந்த ஞானத்தால் தமிழை வளப்படுத்தினான். [மேலும்..»]

வழிகாட்டிகள், வைணவம்

திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார்

ஒருநாள் பாணர் கண்களை மூடிக் கருத்தினில் அரங்கனை நினந்து கவனந்தனை மறந்து அரங்கனையே தியானித்துக் கொண்டிருந்தார். பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்ய நீர் கொண்டு செல்வதற்காக அங்குவந்த லோகசாரங்க முனிவர், இவரை தூர விலகும்படிச் சொன்னார். ஆனால் அரங்கனையே நினைத்துக் கொண்டிருந்த பாணர் காதில் இது விழவில்லை. அவர் கவனம்தான் பெருமாளிடம் சென்று விட்டதே! அதனால் கோபம் கொண்ட லோகசாரங்கர் ஒரு கல்லைத் தூக்கிப் பாணர்மேல் எறிய பாணர் முகத்தில் இரத்தம் வழிந்தது. பாணர் கண்களைத் திறந்து பார்த்தார். 'ஐயோ, அரங்கனுக்குத் திருமஞ்சனம் கொண்டு செல்லும் இம்முனிவரின் கைங்கர்யத்துக்குத் தடங்கலாக இருந்து விட்டோமே' என்று வருந்தி விலகிச் சென்றார்... [மேலும்..»]

வீடியோ

வீடியோ: SPB குரலில் வள்ளலார் பாடல்

அருட்பிரகாச வள்ளலாரின் “தன்னையறிந்தின்பமுற வெண்ணிலாவே” என்ற அற்புதமான பாடல் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தேன் குரலில்… [மேலும்..»]

சமூகம்

நாம் மட்டும் ஏன் இப்படி?

நாம் மட்டும் ஏன் இப்படி?

“உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக. திரைக்கு வந்து சில மாதங்களே ஆன…” அது வினாயக சதுர்த்தி ஆனாலும் சரி, தீபாவளி, பொங்கல் ஆனாலும் சரி அலறத் தொடங்கிவிடும் நம் தமிழ் தொலைக்காட்சிகள். நடிகர், நடிகைகளின் சிறப்பு பேட்டிகள், படம் உருவான கதை, அன்று வெளியாகவுள்ள படங்களின் பாடல்கள் என்று ‘களை’ கட்டிவிடும். ஒரு வாரம் முன்பிருந்தே தொடங்கிவிடும் இந்த ‘அன்புத் தொல்லைகள்’. நம்மவர்களும், எந்த டி.வி.யில் எத்தனை மணிக்கு என்ன பார்க்கலாம் என்று திட்டமே தயாரிக்க அரம்பித்து விடுவார்கள். இன்று என்ன பண்டிகை, அதன் முக்கியத்துவம் என்ன என்றெல்லாம் பற்றி நமக்கென்ன கவலை? அதையெல்லாம் பற்றிக் கவலைப்படத்தான்... [மேலும்..»]

சமூகம், மகளிர்

பெண்கள், குடும்பம் – 1

பெண்கள், குடும்பம் – 1

நம் கடவுளர்கள் கூட மனைவியரோடு தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் நாம் கல்யாணம், குடும்பம் என்றெல்லாம் கூறி மகிழ்கின்றோம். ஈசன் உடலில் சரிபாதியை அன்னைக்குக் கொடுத்திருக்கின்றான். காக்கும் கடவுளான விஷ்ணுவோ தன் நெஞ்சிலேயே அவளைச் சுமக்கின்றார். படைப்பவரான பிரம்மாவோ தன் நாக்கிலேயே மனைவியை வைத்திருப்பதாகக் கூறுவார்கள். கல்விக்கு அதிபதியாக நாம் கூறுவது சரஸ்வதி என்னும் பெண் தெய்வமே. அதே போல் வீரத்துக்கு மலைமகளையும், செல்வத்துக்கு அலைமகளையும் அதிபதியாகக் கூறுகின்றோம்... [மேலும்..»]

கலைகள்

சொர்க்கமே என்றாலும்…

மிக எளிதான, அழகான கிராமிய மெட்டுகளைக் கொண்ட, கர்நாடக இசையின் ராகத்திலமைந்த பல பாடல்களைத் தந்திருக்கிறார் இளையராஜா. கர்நாடக ராகத்திலமைந்த பாடல் என்றவுடனேயே கர்நாடகக் கீர்த்தனையை அப்படியே எடுத்துக் கொண்டு, வரிகளை மாற்றியமைத்த பாடல் என்று நினைக்க வேண்டாம். (அப்படிப்பட்ட பாடல்களும் பிற இசையமைப்பாளர்கள் தயவில் தமிழில் வந்திருக்கின்றன). அந்த ராகத்தின் ஸ்வரபாவங்களையும், அதன் தனித்துவத்தையும் கைக்கொண்டு ஆனால் முற்றிலும் நாட்டுப்புறப்பாடலாகவோ, ஒரு எளிய திரைப் பாடலாகவோ அவரால் தர முடிந்தது. [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள்

யோகம் – ஒரு எளிய அறிமுகம்

யோகம் – ஒரு எளிய அறிமுகம்

ஆன்மீகத்தில் யோகம் என்ற சொல்லை, மனிதன் தன் முயற்சிகளின் உச்சமாக அடையும் இன்ப துன்பங்கள் அற்ற விடுதலையே யோகம் என்றும், இன்னொரு விதத்தில் அந்த விடுதலை அடைவதற்கு உரிய வழியே யோகம் என்றும் இருவிதமான பொருளிலும் பயன்படுத்துவர். ஞானியர் வகுத்த பல்வேறு ஆன்மீக மார்க்கங்களில் யோகம் என்பது உடலை வருத்தி செய்யக்கூடிய பயிற்சி முறையாகவும், மனதை அடக்கி செய்யக் கூடிய பயிற்சி முறையாகவும் முக்கியமாக இரு பகுதிகளை கொண்டு விளங்குகிறது. தற்காலத்தில் பரவலாக யோகா என்பது உடல் வளக் கலையாகவும், மனவளக் கலையாகவும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இவை யோகத்தினால் அடையும் முதல் படி... [மேலும்..»]

சமூகசேவை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆர்.எஸ்.எஸ். உதவி

பிகாரில் திசை திரும்பி கட்டுக்கடங்காமல் ஓடிய கோசி நதி, பல உயிர்களையும் உடைமைகளையும் மூழ்கடித்து அனைவரையும் வருத்தமடையச் செய்த அதே வேளையில் மத வேற்றுமைகளையும் மூழ்கடித்தது சற்று ஆறுதலான விஷயம். வெள்ள நிவாரண முகாம்களில் மத வேறுபாடு இன்றி எல்லா மதத்தினரும் ஒருவருக்கொருவர் உதவுவது மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. சேவா பாரதி அமைப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாமில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒரு வாரமாக தங்கி உள்ளனர். "எங்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்கின்றனர். நிவாரண முகாமில் இதைவிட வாழ்க்கை சிறப்பாக இருக்க முடியாது" என்று முகமது சலாலுதீன் கூறினார்... [மேலும்..»]

வீடியோ

Video: ARYAN invasion theory, proven false — INDIA (part 3 of 3)

பித்தகோரஸ் சரஸ்வதி நதிக்கரைக்கு வந்து ஜியோமிதியைக் கற்றுக்கொண்டார். “இந்தியப் பிரபஞ்சவியலின் கால அளவீடு நவீன விஞ்ஞானம் கூறும் கால அளவுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது” என்று கார்ல் சாகன் சொல்கிறார். கிறிஸ்து சகாப்தத்துக்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே இந்திய உலோகவியல் மிக முன்னேறியதாக இருந்தது — இவையெல்லாம் யாரோ ஒரு பழம்பஞ்சாங்கத்தின் பேச்சுக்களல்ல. இந்த வீடியோ ஆதாரங்களுடன் பேசுகிறது. கண்ணிருப்பவர் பார்க்கக் கடவர். காதிருப்பவர் கேட்கக் கடவர். மூளையிருப்பவர்… [மேலும்..»]

ஆன்மிகம்

வலம்புரி நாயகன்

வலம்புரி நாயகன்

வயிருபெ ருத்தவ லம்புரி நாயகன்
வேண்டுவ ரந்தருவான்
கயிறுபி டித்தக ரங்களி னாற்பகை
கடிந்துவி ரட்டிடுவான்.

ஆரணப் போருளனுக் கன்புடன் மோதகம்
ஆக்கிப் படைப்பவர்க்குப்
பூரண வாழ்வினைப் பூமியில் தந்திடும்
பூரண னவனாவான்.

[மேலும்..»]