வீடியோ

வீடியோ: நூறு கோடி இந்தியர்கள் இப்படி புலம்ப வேண்டுமா? : சுவாமி அக்ஷரானந்தா

புலம்பெயர்ந்த இந்து வம்சாவளியைச் சேர்ந்த சுவாமி அக்ஷரானந்தா, நூறு கோடி இந்தியர்கள் இருந்தும் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா புலம்புவதை கேள்வி கேட்கிறார், எல்லா மதங்களும் ஒன்று என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதை கேள்வி கேட்கிறார். இந்துக்கள் அனைவரும் அவசியம் கேட்க வேண்டிய உரை. [மேலும்..»]

சமூகம்

சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்

சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்

"தமிழ்நாட்டில் அன்னிய மத ஏகாதிபத்தியத்துக்கு வேலை செய்யும் கைக்கூலிகள் சொந்த மண்ணின் பண்பாட்டை காப்பாற்ற ஒற்றை மனிதனாக வீரத்துடன் போராடிய அத்திருமகனாரை 'சைத்தானின் பிள்ளை' என வர்ணித்த அந்த கொடுஞ்செயல் 'தமிழர் சமய மாநாடு' எனும் போர்வையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அரங்கேறியது..." - தமிழரின் அழியாப் பாரம்பரியமான இந்து சமயத்தின்மேல் கிறிஸ்துவ சாயம் பூசி நம்மையும், நம் மூதாதையர்களையும் சுய சிந்தனையற்றவர்களாக சித்தரிக்க அண்மையில் சென்னையில் ஒரு மாநாடு மூலம் சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, அந்த மாநாட்டின் இறுதி நாளிலேயே பலத்த அடி விழுந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் நமது தளத்தைத்... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், இலக்கியம்

அக அழகும், முக அழகும் – 2

அக அழகும், முக அழகும் – 2

போலி அழகோடு வரும் சூர்ப்பனகையின் வருகையைப் போலி எழுத்துகளால் சித்தரிக்கும் விதம் கம்பனுக்கே உரியது.... சிற்பி சிலை வடிக்கும் பொழுது வேண்டாத பகுதிகளை வெட்டி எடுக்க எடுக்க அழகிய சிற்பம் உருவாவதைப் போல மனதில் உள்ள கோபம், பொறாமை, அகங்காரம், ஆணவம், ஈகோ போன்ற வேண்டாத பகுதிகளை நீக்கினாலே உள்ளம் அழகு பெறும். உள்ளம் அழகானால் முகம் தானே அழகு பெறும்? [மேலும்..»]

ஆன்மிகம்

அச்சுதனும், அம்பிகையும்

அச்சுதனும், அம்பிகையும்

அடர்ந்த வனங்களில் முனிவர்கள்தம் குடில்களில் அவதரிக்கவும் இவர்கள் தயங்கியதில்லை. அறத்தை நிலைநாட்ட யுகம்தோறும் அவதரிப்பவன் அண்ணன்; அறம் வளர்த்த நாயகியாக ஐயாற்றில் விளங்குபவள் தங்கை. [மேலும்..»]

மகளிர்

பெரிது பெரிது பெண்மையின் சக்தி!

பெரிது பெரிது பெண்மையின் சக்தி!

பெண் என்பவள் ஆதாரசக்தி, வாழ்வின் ஆதாரம். பெண் இல்லை எனில் சிருஷ்டியே இல்லை. அவளை முன்னிறுத்தியே சிருஷ்டி நடந்து வருகின்றது... குடும்பத்தைத் தாங்கும் ஒரு பெண், தன் தனி ஒரு குடும்பத்தை மட்டுமின்றி இந்த சமூகத்துக்கேப் பெரிய உதவி புரிகின்றாள். நல்மக்களை வளர்ப்பதன் மூலம் நாட்டையே உயர்த்துகின்றாள். [மேலும்..»]

வீடியோ

Video: ARYAN invasion theory, proven false – INDIA (part 2 of 3)

ஆரியப் படையெடுப்பு என்ற புரளியைப் பயன்படுத்தி எவ்வாறு பாரத மக்களுக்குள் பெரும் பிளவு உண்டாக்கப்பட்டது? மதம் பரப்ப வந்தவர்கள் எவ்வாறு இந்தியாவை மனம் துவளச் செய்வதற்காகச் சரித்திரப் புரட்டுச் செய்தனர்? உண்மை என்ன? இவற்றைப் பற்றியெல்லாம் சான்றுகளோடு அறிய ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ. இவ்வரிசையில் இரண்டாவது பகுதி இது. [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தரவிறக்கம்

பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு

பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு

தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில் மஹாகவி பாரதியின் மொழிபெயர்ப்பு மிகப் பரவலாக அறியப்பட்டதும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும். இந்த மொழிபெயர்ப்புக்கு பாரதி எழுதிய முன்னுரை மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பாரதியின் இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் எவருக்கும், கிருஷ்ண-அர்ஜுன உரையாடல்களில் காணப்படும் நெருக்கமான பாவத்தையும், கேள்விகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதிகப்படி உரிமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனிக்கும்போது, பகவத்கீதை ஒரு பிற்கால இடைச்செருகல் என்ற வாதத்தில் பொருளில்லாமல் போவது இயல்பாகவே விளங்கும். [மேலும்..»]

தேசிய விழாக்கள்

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!

'எனது நூல் மட்டுமே மெய்ஞான நூல்', 'நான் கடவுளுக்கு என் மொழியில் இட்டு அழைக்கும் பெயர் மட்டுமே மெய்யானது', 'இவ்விரண்டையும் நம்பி ஏற்றுக்கொள்ளாதவர்கள் நரகத்துக்குப் போவார்கள்; அவர்களைக் கொன்றாலும் நான் சொர்க்கத்துக்குப் போவேன்' என்றெல்லாம் கண்மூடித்தனமாக நம்புகிறவர்களை நாம் சமத்துவ, சகோதரத்துவ வாதிகள் என்று நம்புகிறோம்! [மேலும்..»]

கவிதை

விழித்தெழும் பாரதத்தை நோக்கி: விவேகானந்தர் கவிதை

விழித்தெழும் பாரதத்தை நோக்கி: விவேகானந்தர் கவிதை

மீண்டும் எழுவாய் இது உறக்கம்தான் மரணமல்ல புது வாழ்வில் விழித்தெழும் துணிவுறும் பார்வைகள் வேண்டித் துடித்தெழும் உன் கமலமலர் விழிகளின் சிறு அயரல் ஓ சத்தியமே! உன்னை வேண்டி நிற்கும் உலகம் உனக்கென்றும் அழிவில்லை [மேலும்..»]

வரலாறு

தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தோமையர்

தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தோமையர்

தாமஸ் இந்தியாவிற்கு வந்தார் என்று சொன்னால் என்ன ஆகிவிடும். ஏன் நாம் இதனை எதிர்க்க வேண்டும்? என சிலர் கேட்கலாம். இந்த தலைமுறையின் தலை சிறந்த தமிழ் எழுத்தாளரான ஜெயமோகன் இந்த முயற்சிகளின் பின்னால் இருக்கும் வலைப்பின்னல்களை வெளிக்கொணர்கிறார். ஜெயமோகனின் தெளிவான கட்டுரையை அவருடைய வலைப்பதிவில் வாசிக்கலாம். [மேலும்..»]

மகளிர்

பெண்மைக்குப் பெருமை சேர்த்த தமிழ் மகளிர்

பெண்மைக்குப் பெருமை சேர்த்த தமிழ் மகளிர்

பாண்டிய நாட்டின் அரசியாக ஆட்சி புரிந்த தேவி மீனாட்சி முதல் மதுரையை ஆண்ட பெண்ணரசிகள் பலர் இருந்திருக்கின்றனர். இந்துமதத்தில், கலாசாரத்தில் பெண்கள் ஒருநாளும் சிறுமை அடைந்திருக்கவில்லை. பெருமையாகவே இருந்திருக்கின்றார்கள்... [மேலும்..»]

ஆன்மிகம், சமூகம்

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்

1970 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்துக்கள் ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர்; அவர்கள் தாம் குடியமர்ந்த இடங்களில் வழிபாட்டுத்தலங்களையும் அமைத்துள்ளனர். இந்து சமயம் காட்டும் நெறியில் இந்துக்களாகவே வாழ்வதற்கு அவர்கள் உறுதியான அத்திவாரத்தை இட்டுள்ளனர். 15 இந்து கோவில்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன... [மேலும்..»]

வீடியோ

Aryan invasion theory, proven false — India (part 1 of 3)

உலகின் எல்லாக் கலாசாரங்களுக்கும் முன்னோடியான இந்துக் கலாசாரத்தைக் குறித்து இந்துக்களே வெட்கப்பட வைப்பதற்காக எவ்வாறு மாக்ஸ் முல்லர் தொடங்கிக் கிறிஸ்தவ மிஷினரிகள் ஆரியர் வந்தேறியதாகப் பொய்க்கதை கட்டிப் பரப்பினர், அதை எப்படித் தமது பாரம்பரியத்தையே அறியாத சில 'அறிஞர்கள்' முழு உண்மையாக ஏற்றுக்கொண்டனர் போன்றவற்றை ஆதாரங்களுடன் விளக்கும் வீடியோ... [மேலும்..»]