இந்து மத மேன்மை

நல்வாழ்வு வேண்டுவோம்!

நல்வாழ்வு வேண்டுவோம்!

தேவர்களே! காதுகளால் நாங்கள் நல்லனவற்றைக் கேட்க வேண்டும். பூஜைக்குரியவர்களே! கண்களால் நாங்கள் நல்லனவற்றைக் காணவேண்டும். உறுதியான அங்கங்களுடன் கூடிய நல் உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்கவேண்டும். உலகிற்கு நன்மை செய்தவண்ணம் வாழவேண்டும். [மேலும்..»]

கம்பராமாயணம், ராமாயணம்

கம்பராமாயணம் – 5 (Kamba Ramayanam – 5)

கம்பராமாயணம் – 5 (Kamba Ramayanam – 5)

கம்பராமாயணம், பால காண்டம், நாட்டுப் படலம், பாடல்கள் 6 - 10. இதில் கோசல நாட்டின் வளம் பேசப்படுகிறது. ஆலைகளில் பிழியப்படும் கருப்பஞ் சாறும், தென்னை முதலிய மரங்களில் பாளையை அரிந்து வடிக்கப்படும் சாறும், சோலைகளில் கனிந்து உதிரும் பழங்களின் சாறும், தேன்கூட்டிலிருந்து தொடர்ந்து ஒழுகிக்கொண்டிருக்கும் தேனும், மாலைகளில் இருந்து விழும் தேனும் ஒன்றாகி... [மேலும்..»]

இலக்கியம், கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 4

கம்பராமாயணம் – 4

கம்பராமாயணம், பாலகாண்டம், நாட்டுப்படலம், பாடல்கள் 1-5. வயல் வரப்புகளில் எல்லாம் முத்துக்கள் மண்டியிருக்கும். நீர் ஓடும் மடைகளில் எல்லாம் சங்குகள். நிரம்பிய வெள்ளம் ஓடும் கால்வாய்களின் கரையெல்லாம் செம்பொன்னால் ஆனவை; எருமைகள் படுத்ததனால் ஏற்பட்ட குழிகளில் தேங்கிய நீரில் செங்கழுநீர் மலர்கள் பெருங்கூட்டமாகப் பூத்துள்ளன; சமப்படுத்திய வயல்களிலோ பவளமணிகள் பரவியுள்ளன. சாலி என்னும் உயர்வகை நெல் நிரம்பிய வயல்களில் அன்னப் பறவைகள் உலவுகின்றன; அருகிலுள்ள கரும்பு வயல்களில் கருப்பங்கழிகளுக்கு இடையிலிருக்கும் கூடுகளிலிருந்து செந்தேன் பொழிகின்றது... [மேலும்..»]

இலக்கியம், கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 3

கம்பராமாயணம் – 3

கம்பராமாயணம், பாலகாண்டம், ஆற்றுப்படலத்தின் 3 ஆம் மற்றும் இறுதிப் பகுதி. இந்தப் பாடலில் நதி, யானையாகச் சித்திரிக்கப்படுகிறது. மதகின் கதவுகளை நதி முட்டுகிறது; யானையோ கோட்டைகளின் கதவுகளை முட்டிப் பெயர்க்கக் கூடியது. நதி ஓடிவரும் வேகத்தைக் கண்டு உழவர்கள் கைகளை உயரத் தூக்கியபடி கதறுகிறார்கள்; யானை ஓடிவரும்போதும் அப்படித்தான் மக்கள் கதறுவார்கள். நீர்த்தேக்கங்களின் முன்புறம் உள்ள ஓடைகள் நிரம்பிப் பொங்கி வழியுமாறு ஆற்றின் வெள்ளம் பெருகுகிறது; யானைக்கோ மத்தகத்தின் மீது அணிவிக்கப்பட்ட அணிகலனின் ஒளி வெள்ளம் பொங்கிக் கொண்டு இருக்கும். நதியிலும் வண்டுகள் மொய்க்கின்றன; யானையின் மதநீரின் மேலும் வண்டுகள் மொய்க்கும். நெருக்கமாகக் கட்டப்பட்டுள்ள மணிகள்... [மேலும்..»]

வீடியோ

இணுவில் (ஈழம்) சிவகாமி அம்மன் கோவில்

[மேலும்..»]

இலக்கியம், சிறுவர், ராமாயணம், வைணவம்

பாலராமாயணம் – 2

பாலராமாயணம் – 2

சிறுவர்களுக்காக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட ராமாயணம். அந்த வேள்வித் தீயிலிருந்து சிவந்த கண்களும் நெருப்புப் போன்ற தலைமயிரும் கொண்ட பூதம் ஒன்று தன் கையில் அமுத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டது. அதை வாங்கிப் பட்ட மகிஷிகளுக்குக் கொடுக்கும்படி தசரத சக்ரவர்த்தியை வசிஷ்டர் வேண்டிக்கொண்டார்.... [மேலும்..»]

கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 2 (Kamba Ramayanam Canto 2, Part 2)

கம்பராமாயணம் – 2 (Kamba Ramayanam Canto 2, Part 2)

கம்பராமாயணம், பாலகாண்டம், ஆற்றுப்படலத்தின் இரண்டாம் பகுதி; பாடல்கள் 11-15. பருத்த முகங்களையும், (நீரில் புரள்வதால்) களிப்பையும் உடைய (அல்லது, நீரில் சிந்திக் கிடக்கும் கள்ளைபங {தேனை} பருகிய) யானைகள், குதிரைகள், பலவிதமான மிருகங்கள் என்று இவற்றையெல்லாம் அடித்து உருட்டிக் கொண்டு செல்கிறது வெள்ளம். இவற்றினோடு அழகான கொடிகளும் வந்து சேர்ந்து தங்குவதால் (அல்லது விலை மதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட கொடிகள் பறக்கின்ற தேர்களும் வந்து சேர்வதால்) அந்த ஆறு, கடல்மேல் போர் தொடுப்தற்காகப் படையைத் திரட்டிக்கொண்டு போவதைப் போல இருந்தது. [மேலும்..»]

வீடியோ

முத்து மாரியம்மன் கோவில், மலேஷியா – வீடியோ

[மேலும்..»]

கேள்வி-பதில், மகளிர்

கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்

கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்

ஸ்ரீ கிருஷ்ணர் "பெண்களும் பரகதி பெறுவர்" (கீதை 9.32) என கீதையில் கூறுகிற போது அவர் கூறுவது 'பெண் தாழ்ந்தவள்' எனும் மனநிலை படைத்த ஆணினை நோக்கி என்றே கருத வேண்டும். "அவளுக்கு ஞானமும் வீடுபேறும் கிடைக்கும்" என கீதை சொல்வது மிக உன்னத நிலையை இந்த பிறவியிலேயே அவள் அடைந்திட முடியும் என்னும் எக்காலத்துக்குமான உண்மையையும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்....சீதை எந்த இடத்திலும் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கும் ஒரு பெண்ணடிமைப் பாத்திரமாக சித்தரிக்கப் படவில்லை. மாறாக வலுவான பெண்ணியப் பார்வை கொண்ட, அதே நேரத்தில் சமுதாயத்துக்கு ஒரு தன்னிறைவு... [மேலும்..»]

கவிதை

அனுமன் வேதம் – கவிதை

அனுமன் வேதம் – கவிதை

தளர்வு தகர்க்கும் சோம்பல் துடைக்கும் மயக்கம் அறுத்து மனம் தெளிவிக்கும் மாண்பு பெருக்கும் மாருதி மந்திரம் அச்சம் தவிர் அச்சம் தவிர் என அறைந்து முழங்கும் அனுமன் வேதம் [மேலும்..»]

வீடியோ

மன்மத காருணீஸ்வரர் ஆலயம், சிங்கப்பூர் – வீடியோ

[மேலும்..»]

நிகழ்வுகள்

எல்லா மதங்களும் ஒரே நோக்கத்தை கொண்டிருக்கின்றனவா?

எல்லா மதங்களும் ஒரே நோக்கத்தை கொண்டிருக்கின்றனவா?

எல்லா மதங்களும் ஒன்று, ஒரே நோக்கத்தைக் கொண்டவை. எல்லாம் ஒன்றுதான் என்பதுபோன்ற வசனங்களை மீண்டும் மீண்டும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால், இது உண்மையா? நமது இந்து மதத்தைப் போன்றவைதானா மற்ற மதங்களும்? நமது நோக்கத்தைப் போன்றதுதானா மற்ற மதங்களின் குறிக்கோள்களும்? - இத்தகைய கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் உரைநிகழ்த்தவுள்ளார் தொழுதகு தயானந்த சரஸ்வதி சுவாமிகள். தினம்: ஜூலை 20, 2008 (ஞாயிறு) மாலை 6:30 லிருந்து 8:30 வரை. [மேலும்..»]

வீடியோ

Living wonders of India – Temples of Tamilnadu

[மேலும்..»]