ராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே!

காலம் கடந்த நடவடிக்கையே என்றாலும், மத்திய அரசின் முகமூடியைத் தோலுரிக்கவும், நாட்டு மக்களுக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அவசியத்தை உணர்த்தவும் ராசா கைது உதவி இருக்கிறது… ராசா தனக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் சி.பி.ஐ.-யிடம் சொல்லி பலிகடா ஆகாமல் தப்பிக்க வேண்டும்… கிடைத்த லாபப்பணம் தி.மு.க. தலைமைக் குடும்பத்தின் நகராச் சொத்துகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், மத்தியில் உள்ள சோனியாவை எதிர்ப்பது ஆபத்து என்பது எம்.ஜி.ஆரையே ஏமாற்றிய கருணாநிதிக்குத் தெரியாதா?… எனவே தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தின்படி, ‘ராசா (மட்டும்) குற்றவாளி இல்லை’ என்று நாமும் ஏற்போம்…

View More ராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே!

இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி!

திருமாவளவனைத்தான் காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வுகாண்பதற்கான எம்.பி. க்கள் குழுவில் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு இடம் பெறச்செய்தது. அவரும் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்ற ஒரு தேசிய தலைவரைப் போல் அவர்களுடன் காஷ்மீருக்குச் சென்று திரும்பினார். திரும்பிய பிறகு அவர் கூறியது, ‘காஷ்மீருக்கு இந்தியா சுதந்திரம் அளிக்க வேண்டும்’ என்பதுதான்.

View More இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி!

ரமணரின் கீதாசாரம் – 2

தேகம் வேறு, ஆன்மா வேறு என்று பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு. அது அனைத்து சீவராசிகளையும் ஒன்றாகவே பார்க்க வைப்பதால், அது ஒரு புண்ணியச் செயல். அப்படியில்லாது இவர் வேறு, அவர் வேறு என்ற ரீதியில் நான்-நீ என்று பகுத்துக் காட்டும் அறிவு பகுத்தறிவு ஆகாது. அப்படி பேதங்களைப் புகுத்தும் எதுவும் பாவச் செயல்களே.

View More ரமணரின் கீதாசாரம் – 2

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 6

ஆரம்பம் தொட்டு நேற்று வரை நாம் காணும் சோஷலிஸ யதார்த்த வகை எழுத்தாளர்களும் திராவிடக் கழகங்கள் சார்ந்த எழுத்தாளர்களும் கட்சிக் கொள்கைகள் சார்ந்து எழுதுபவர்களாகவும், தலித் எழுத்தாளர்கள் எதிர்ப்படும் வாழ்க்கை சார்ந்து எழுதுபவர்களாகவும் வேறுபடுகிறார்கள்… ஆனால் தலித் வாழ்க்கை அனுபவம் என்னவென்பதை எவ்வளவு நெருக்கமாக உணர முடியுமோ, எவ்வளவுக்கு ஒரு தலித் எழுதுதல் சாத்தியமோ அவ்வளவு நெருக்கத்தை பெருமாள் முருகன் தன் எழுத்தில் சாதித்து விடுகிறார்… தம் உயர்ஜாதி அந்தஸ்தை விட்டுவிட மனமில்லது ஜாதி பேதங்களை வந்த இடத்திலும் பேணுவதில் தீவிரமாக இருப்பதையும் அதற்கு சர்ச்சும் உதவியாக இருப்பதையும் கண்டு அதற்கு எதிரான தன் போராட்டங்களையும் அதில், தான் எதிர்கொண்ட கஷ்டங்களையும் பற்றிய வரலாற்றை ஒரு கற்பனைப் புனைவாக ‘யாத்திரை’ என்ற தலைப்பில் எழுதி உள்ளார்…

View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 6

விசா மோசடி: மூடப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனம், முடக்கப்பட்ட இந்திய மாணவர்கள்

அமெரிக்காவின் சான்ப்ரான்சிஸ்கோவில் ட்ரை-வேலி என்ற கிறிஸ்தவ பல்கலைக் கழகம் ஒன்று பல மில்லியன் டாலர்கள் பெற்றுக் கொண்டு, பலருக்கு மாணவர்கள் என்ற அங்கீகாரம் கொடுத்து விசா பெற வழி செய்து மோசடி செய்திருக்கிறது [..] இன்றைய இணைய யுகத்தில் ஒரு கல்வி நிறுவனத்தைப் பற்றி, அதன் தரத்தைப் பற்றி எல்லாம் வெகு எளிதாக அறிந்து கொள்ள முடியும், இதெல்லாம் தெரியாமலா அந்த மாணவர்கள் லட்ச லட்சமாக பணத்தைக் கொட்டினார்கள்?

View More விசா மோசடி: மூடப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனம், முடக்கப்பட்ட இந்திய மாணவர்கள்

அமைதியின் ஓசை

வாயிலில் நிழல்பரப்பி நிற்கும் வயதான வேப்ப மரம்- பல ஆண்டுகளாக அந்த ஆஸ்ரமத்திற்கு வந்தவர்களை வரவேற்றது போலவே- நம்மையும் பார்த்து மெல்ல தன் இலைகளை அசைக்கிறது… அண்ணாமலையில் வாழும் சித்தர்கள் என ரமணரால் அடையாளம் கண்டுகொள்ளபட்டதால் இந்த கெளரவம் பெற்றிருப்பதை அறிகிறோம்… திட்டமிட்ட அட்டவணைப்படி நிகழ்சிகள் நடைபெறும் இந்த ஆஸ்ரமத்தின் விதிகள் எவருக்காகவும் தளர்த்தப்படுவதில்லை…

View More அமைதியின் ஓசை

கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2

பெரும்பாலான தமிழக பத்திரிகையாளர்கள் தி.மு.க. தலைவரை கருணாநிதி என்று குறிப்பிடுவதில்லை; ‘கலைஞர்’ என்றே குறிப்பிடுவர். பத்திரிகையில் பட்டப் பெயர்களுக்கு இடமில்லை என்றபோதிலும், தமிழக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து இந்தத் தவறைச் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் அவர்களது கலைஞர் மீதான உளச்சார்பு. இத்தகைய உளச்சார்பு இருப்பவரால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவான அலையை ஆமோதிக்க முடியுமா?

View More கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2

Breaking India புத்தக வெளியீட்டு விழா

சென்னை, பிப்ரவரி-3. சுவாமி தயானந்த சரஸ்வதி புத்தகத்தை வெளியிடுகிறார்…அமெரிக்க, ஐரோப்பிய கிறிஸ்தவ நிறுவனங்களின் பணபலத்துடன் இந்தியாவுக்குள் திராவிட, தலித் பிரிவினைவாதத்தை வளர்க்கக் களமிறக்கப் படும் மனித உரிமை அமைப்புகள், கல்வியாளர்கள், சிந்தனை வட்டங்கள், மத அமைப்புகள் ஆகியவை நிழலிருவில் செயல்படும் விதம் குறித்து விரிவான ஆய்வுகளை இந்த நூல் அளிக்கிறது…

View More Breaking India புத்தக வெளியீட்டு விழா

கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1

கட்சிகளின் கொள்கைகள் மீதான அபிமானம், அரசுகளின் செயல்முறை மீதான நாட்டம், நன்றியுணர்வுடன் கூடிய ஆசை போன்றவற்றால் கருத்துக் கணிப்புகள் மக்களை குறிப்பிட்ட அளவில் முட்டாளாக்கி, தவறாக வழிநடத்துகின்றன [..] தேர்தல் சமயத்தில் இந்த கணிப்புகள் ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்களையும் நெருக்கடிகளையும் சிந்தித்தால், ஊடகங்களின் அதர்மம் புரியும்!

View More கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1

ரமணரின் கீதாசாரம் – புதிய தொடர்

கடல் போன்ற உபநிடதங்களைக் கடைந்து, கண்ணன் வழங்கிய ஆரமுதான கீதையின் சாரமாக, நமக்காக பகவான் ரமணர் தந்த, சுருக்கமான பொருட்செறிவு மிகுந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய புதிய தொடர்!

View More ரமணரின் கீதாசாரம் – புதிய தொடர்