Hindu Rituals and Routines: Why do we follow them?

May 14, 2008
By
Hindu Rituals and Routines: Why do we follow them?

சின்மயா யுவ கேந்திரம் பதிப்பித்துள்ள சிறிய, அழகிய புத்தகம் இது. இந்து மதத்தின் சம்பிரதாயங்கள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பலவற்றுக்கான பதில்களை இச்சிறு நூலில் காணலாம். A Small, beautiful booklet from Chinmaya Yuva Kendra. Answers questions like, Why do we light a lamp? Why do we wear marks (tilak, pottu and the like) on the forehead? Why do we regard trees and plants as sacred? Why do we offer a coconut? Why do we chant... [மேலும்..»]

இந்துமதம் பற்றி ஸ்ரீஅரவிந்தர்

May 12, 2008
By
இந்துமதம் பற்றி ஸ்ரீஅரவிந்தர்

"இந்து தேசம் சனாதன தர்மத்துடனேயே பிறந்தது. அதனாலேயே இயங்குகிறது, அதன் ஊடாகவே வளர்கிறது. சனாதன தர்மம் வீழுமானால், ஆதியும் அந்தமும் அற்ற சனாதன தர்மத்திற்கும் அழிவு என்பது சாத்தியம் என்றால், இந்த தேசமும் அதனுடனே அழியும். ஆகவே, சனாதன தர்மம், அதுவே நம் தேசியம்." [மேலும்..»]

தமிழ் தேவாரப் பண் பாராயணம் – பிரச்சினைகள் நீங்க

தமிழ் தேவாரப் பண் பாராயணம் – பிரச்சினைகள் நீங்க

எண்ணிலா அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கும் இந்த அருட்பதிகங்களின் தொகுப்பு பலருக்கும் பயனுள்ளதாகயிருக்கும். இத்தொகுப்பில் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க பாராயணம் செய்ய வேண்டிய பதிகங்கள் பற்றிய குறிப்புகள் அடங்கியுள்ளன. திருச்சிற்றம்பலம். [மேலும்..»]

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

May 7, 2008
By
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Gandhiji“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்." [மேலும்..»]

அலைஸ் கால்ட்ரோன் – உலக அமைதிக்காக உழைத்த இந்து

அலைஸ் கால்ட்ரோன் – உலக அமைதிக்காக உழைத்த இந்து

அமெரிக்க இசை கலைஞரும் சனாதன தருமத்தின் ஆன்மிக இசை பாரம்பரியத்தின் மூலமும் நாடு, இன மத பேதமின்றி உலக அமைதிக்காக உழைத்தவருமான இந்த பெண் கலைஞரினை உலக நன்மைக்கு உழைத்த இந்துக்கள் வரிசையில் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் தமிழ்இந்து.காம் பெருமை அடைகிறது. [மேலும்..»]

இந்துமதம் என்றால் என்ன?: பாரதியார் கவிதை

May 6, 2008
By

"பெருமை மிக்க ஹிந்துமதத்தைப் பின்பற்றி அதன்படி நடக்காதிருப்போர் கவலை என்னும் நரகில் வீழ்கிறார் என்கிறார் (பொய்க் கற்பிதமான நரகத் தீயைக் கூறவில்லை). மேலும் தன்னைச் சாரும் அன்பர்கள் அனைவருக்கும் பெருமைமிகு வாழ்வை அளிக்கும் நல்ல துணை இந்துமதம் என்று பறைசாற்றி, "சேர வாரும் ஜெகத்தீரே" என்றும் அழைக்கிறார். [மேலும்..»]

பெரிய திருவடி

அனுமனைச் சிறிய திருவடி என்று அழைப்பது தமிழ் மரபு என்று பார்த்தோம். அப்படியானால் பெரிய திருவடி என்றொருவர் இருக்க வேண்டும். ஆமாம். வைணவ சம்பிரதாயங்களை அறிந்தவர்கள் கருடனுக்கே பெரிய திருவடி என்ற பெயர் வழங்கப்படுகிறது என்றறிவார்கள். 'இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்' என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது அதன் மீது திருவடி படுகின்ற தன்மையால் திருவடி என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. 'தாவடி ஓட்டும் மயிலிலும்' என்று அருணகிரி நாதர் முருகன் திருவடி... [மேலும்..»]

இந்து தருமமும் சுற்றுப்புற சூழலும்

இந்து தருமமும் சுற்றுப்புற சூழலும்

இன்று சுற்றுப்புற சூழல் மாசுபட்டு அதுவே மனிதகுலத்துக்கு பெரிய சாபக்கேடாக விளங்குகிறது. மானுடகுலமே அழிந்துவிடுமோ என்கிற அளவில் இயற்கை வளங்கள் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பலவித இயற்கை பேரழிவுகளும் இடர்பாடுகளும் நோய்களும் உருவாகியுள்ளன. இந்த சூழலில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க இந்து தருமம் பல நல்லவழிகளை நவீன மனிதனுக்கு அளிக்கிறது. அடுத்த தலைமுறைகளும் நன்றாக வாழும்படியான வளங்குன்றா வளமை காண இந்து தருமம் கூறும் வழிகளைக் குறித்த ஒரு சிறியபார்வையே கீழே உள்ளது. இந்து தருமத்தில் மலைகளும் நதிகளும் செடி கொடிகளும் விலங்குகளும் இறைத்தன்மை கொண்டவையாக மதிக்கப்படுகின்றன. ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்’ எனும் உபநிடத வரி அனைத்து... [மேலும்..»]

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர்

April 28, 2008
By
ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர்

ஒரு தலைமுறை முந்தைய பொதுவுடைமையாளர்கள் சுவாமி விவேகானந்தரை 'வீரத்துறவி' என்று புகழ்ந்து பேசுவர், எழுதுவர். "சூறாவளித் துறவி" (The cyclonic saint) என அமெரிக்கத் தாளிகைகள் அவனை வர்ணித்து மகிழ்ந்தன. அடிமைப்பட்டுத் தன்னம்பிக்கை இழந்து கிடந்த பாரதத்தின் முதுகெலும்பில் மின்னற் சாரமேற்றி நிமிர்ந்து நிற்கவைத்த தீரன் அவன். அவனுடைய வாழ்க்கை அவனுடைய தோற்றத்தைப் போலவே வசீகரமானது. அவனுடைய சொற்கள் அவனுடைய கண்களைப் போன்றே ஒளிவீசுவன. அவனுடைய அறிவு அவனுடைய தோள்களைப் போல விசாலமானது. அவனுடைய சிந்தனை அவனுடைய பார்வையைப் போன்றே ஆழமானது. [மேலும்..»]

வேண்டியதை அருளும் விநாயகன்

வேண்டியதை அருளும் விநாயகன்

இரண்டு மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். “என்னப்பா… பரீட்சை எல்லாம் எப்படி எழுதியிருக்கே…”, அதற்கு அடுத்தவன் அலுத்துக்கொண்டான்… “என்னவோ போ… கணக்கு பரிட்சைய நினைச்ச பயம்மா இருக்கு. பிள்ளையாருக்கு தேங்கா உடைக்கறதா தோப்புக் காரணம் போட்டுப் பிரார்த்தனை எல்லாம் செய்துகொண்டு இருக்கேன்..”. அதற்கு அடுத்தவன் “அது சரி. அதான் பிள்ளையார்க்கிட்ட வேண்டிக்கிட்ட இல்ல.. அவரே எழுதி கொடுத்துடுவார்”. இவன் “ஆமா.. முதல்ல அவரே கணக்குல வீக்கா இருந்தா என்ன செய்யறது?” என்று சிரித்துக் கலைந்தார்கள். எங்கே பிரார்த்தனை செய்கிறோமோ இல்லையோ, பரீட்சை வந்தால் பிள்ளைகளெல்லாம் பிள்ளையாரிடம் ஒரு ஆப்ளிகேஷன் போட்டுவிடுவது வழக்கமாக இருக்கிறது. பிள்ளையார் அவ்வளவு சுலபமான தெய்வமாக... [மேலும்..»]

சண்டாளரை வணங்கிய சங்கரர்

ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒரு திரைப் படத்தில் சங்கராச்சாரியார் அந்தக் காலகட்டத்தில் சண்டாளர் எனக் கருதப்பட்ட ஒருவரிடமும் கடவுளைக் கண்டு அவருடயை பாதங்களைத் தொட்டு வணங்கினார் என்பதைக் காண்பிக்கிறார்கள். அதன் மின் வடிவை இங்கே காணலாம். [மேலும்..»]

சிறிய திருவடி

சிறிய திருவடி

பாதங்கள் இவை என்னில்… இறைவனுடைய திருவடியைப் பாடுவதென்றால் ஒரு தனி மகிழ்ச்சி பிய்த்துக் கொண்டு போகும் கவிஞர்களுக்கு. ‘மொத்தம் மூணு இடங்களில் அவனுடைய திருவடி பட்டது’ என்று சொல்கிறார் அருணகிரி நாதர். ‘தாவடி ஓட்டும் மயிலிலும்’ அவன் பயணப்படுவதற்காக ஏறி உட்கார்கிறான் பார், மயில், அது மேல அவன் அடியிணை பட்டது. அங்கே மட்டுமா பட்டது? இல்லை; தேவர்களின் பகையை அழித்தவன்; இந்திரனுக்கு அவன் உயிரையும், இந்திராணிக்கு அவள் மாங்கல்யத்தையும் மீட்டுத் தந்தவன் ஆகையினாலே தேவர்கள் எல்லோரும் அவன் பாதத்தில் விழுந்து வணங்குகிறார்கள். அந்தக் காரணத்தினாலே அவர்கள் தலையிலும் பட்டது. ‘தாவடி ஓட்டும் மயிலிலும், தேவர்கள் தலையிலும்’.... [மேலும்..»]

கலை, இலக்கியம்: மரபு மீறலும் மரபு சிதைத்தலும

திண்ணை (டிசம்பர்-27, 2007) இதழில் முதுபெரும் எழுத்தாளர் மலர்மன்னன் அவர்கள் எழுதிய அருமையான கட்டுரையை இங்கே மீள்பதிப்பிக்கிறேன். மரபு மீறல் என்பது எப்படி செய்யப்பட வேண்டும், எப்படிச் செய்யப் படக்கூடாது என்பதை தனது ஆழ்ந்த கலை, இலக்கிய அனுபவங்களின் அடிப்படையில் மிக அழகாகக் கூறியிருக்கிறார். இலக்கிய விசாரம் : மரபு மீறலும் மரபு சிதைத்தலும் மலர் மன்னன் மிகச் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது சொன்னேன்: மரபை மீறலாம்; மரபைச் சிதைக்கத்தான் கூடாது. இதை அங்கு லேசாகக் கோடிட்டுத்தான் கூற முடிந்தது. என்னதான் இருப்பினும் இடம் பொருள் ஏவல் என்றெல்லாம் பார்க்க வேண்டும் என்கிற சம்பிரதாயம் ஒன்று... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey