ஆன்மிகம், சைவம்

மதுரைக் கலம்பகம் — 1

மதுரைக் கலம்பகம் — 1

ஐயன், மற்ற இடங்களில் தூக்கிய இடது திருவடியை வெள்ளியம்பலமாகிய மதுரையில் ஊன்றி கால்மாறி ஆடுகிறார். வீடுகள்தோறும் பிச்சைவாங்கப் பிச்சனைப்போல் செல்கிறார். அவருடைய கடைக்கண் பார்வையில் மன்மதன் எரிந்து சாம்பலானான். அவர் சிரிப்போ முப்புரங்களையும் எரித்தது. காபாலி என்று பெயர் கொண்ட அவர் கையில் சூலம் ஏந்தியிருக்கிறார். பிச்சியாரும் சிவவேடங் கொண்டு வீடுதோறும் பிச்சையெடுக்கிறார். இவரும் கால்மாற்றி ஆடுகிறார். இவருடைய கண்பார்வையும், புன்சிரிப்பும் மற்றவர்களைக் கொல்லாமல் கொல்கிறது. பிச்சியாரும் கையில் சூலம்தாங்கிச் செல்கிறார் .இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது கண்கூடு. சிவபெருமானுக்குப் பிச்சன் என்று பெயர் இருப்பதால் இவருக்குப் பிச்சியார் என்று பெயர் வழங்குவது பொருத்தமே [மேலும்..»]

இலக்கியம்

பி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்

பி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்

பி.ஆர்.ராஜமய்யர் வெறும் 26 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்திருந்தார் என்ற மாபெரும் வரலாற்றுத் துயரம் இந்தப் புத்தகத்துடன் என்றென்றைக்கும் இணைந்து இதற்கு மேலும் ஒரு காவியத்தன்மையை அளித்து விடுகிறது. காதல் மனங்களின் துள்ளல், குயுக்தியும் சிறுமையும் கொண்ட பாத்திரங்களின் நடத்தைகள், வலிந்து புகுத்தப்பட்ட செயற்கைக் கதைப்போக்கு சம்பவங்கள், இறுதியில் வேதாந்தத்தை நோக்கிய திருப்பம் அனைத்தின் பின்னும் அந்த வாழ்க்கையின் துயரத்தின் சுமை படிந்துள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை... அவ்வளவு சிறுவயதில் ஷெல்லி, பைரன், கீட்ஸ், கம்பர், தாயுமானவர் என்று உலகப் பெருங்கவிஞர்களின் கவிதையில் ஆழ்ந்து தோய்ந்த ஒரு மனம். தன் கலைத் திறனால் சிகாகோவையும் லண்டனையும்... [மேலும்..»]

வரலாறு

தாரா ஷிகோ: முகலாய வரலாற்றில் ஒரு துயர அத்தியாயம்

தாரா ஷிகோ: முகலாய வரலாற்றில் ஒரு துயர அத்தியாயம்

ஷாஜஹானுக்குப் பிறகு தானே ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகப் போவது உறுதியானது என்பதில் தாரா ஷிகோவுக்கு எந்த சந்தேகமும் இருந்திருக்கவில்லை. ஷாஜஹான் அவரிடம் அரசுப் பொறுப்புகளை ஒப்படைத்த காலத்தில் தாரா ஷிகோ ஏறக்குறைய இஸ்லாமை விட்டு வெளியேறியிருந்தார். வெள்ளைக்கார கிறிஸ்தவ பாதிரிகள் என்னேரமும் அவரைச் சூழ்ந்திருந்தார்கள்... ரோஷனாரா பேகம் மிகக் கோபத்துடன் தாரா ஷிகோவைக் கொல்ல வேண்டும் என்று வாதிடுகிறாள். அவளுக்கு ஆதரவாக அரசவை முல்லாக்களும் சேர்ந்து கொண்டு காஃபிரான தாரா ஷிகோவைக் கொல்வதுதான் சரியானது என்று யோசனை சொல்ல, அவ்ரங்க்ஸிப் அவரைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார். அதன்படியே தாரா ஷிகோவைக் கொல்ல அவரது அடிமைகளில் ஒருவனை அனுப்புகிறார்....... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், சமூகம், வழிகாட்டிகள்

ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்

ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்

ஒருமுறை அரசவையிலிருந்த ஆச்சாரவாதிகள் ஞானேஷ்வரரையும் அவருடைய சோதரரையும் பிரஷ்டர்கள் என இகழ்ந்தனர். நிவர்த்திநாதர் ‘பூசுரரே வேதங்களை அளித்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் இவர்களெல்லாம் பிறப்பால் உயர்ந்தவர்களா? தம் வாழ்க்கையால் உயர்ந்தவர்களா?” என வினவினார். அப்போது தண்ணீரை சுமந்த படி ஒரு எருமை அங்கே வந்தது. ஞானேஸ்வரர் அந்த எருமையைக் காட்டி “உங்களுக்கெல்லாம் இந்த எருமைக்கு இருக்கும் ஞானத்தில் ஒரு சிறு பகுதி இருக்குமென்றாலும் நீங்கள் மதிக்கப்படத் தக்கவர்கள்” என்றார். இதைக் கேட்ட ஆச்சாரவாதிகள் “நீ சொன்னதை இப்போது நிரூபிக்காவிட்டால் உன்னை வெட்டிப் போடுவோம்” என்றனர்.... [மேலும்..»]

அரசியல், ஊடகங்கள், சமூகம்

கரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி?

கரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி?

" கலைஞர் கை விரல் நகங்களைப் பரிசோதித்த காவேரி மருத்துவமனை டாக்டர்கள் அசந்து போனார்களாம். எத்தனை பிரதமர்களை அடையாளம் காட்டிய விரல்களின் நகங்கள்" என்று தலைமை மருத்துவர் சொன்னதும் ஸ்டாலினும் அழகிரியும் கண்ணீரால் ஆஸ்பத்திரி வராண்டாவையே கழுவினார்களாம்”... நீங்கள் மோதியை எதிர்த்து எழுதுவதாக மவுண்ட் ரோட் மன்றோ சிலை மேல் சத்தியம் செய்தால் பல விசேஷ , சுவிசேஷ கருத்துக்களால் தூண்டப்பட்ட தன்னார்வ, சுயநிதி, அரசு சாரா அமைப்புகள் நிதி உதவி செய்யும். உங்கள் பெற்றோர், மனைவி, நாடு, மனசாட்சி மற்றும் குழந்தைகளை பிணையாகக் கொடுக்க நேரிடும். அதனாலென்ன? குழுமம் முக்கியமல்லவா?.... [மேலும்..»]

இலக்கியம், சமூகம்

தமிழன்னையின் அணிகலன்கள்

தமிழன்னையின் அணிகலன்கள்

தமிழன்னையின் காதினில் குண்டலங்களாக, குண்டலகேசி ஒளிர்கின்றது. கைகளில் அணிந்த வளைகளாக வளையாபதி திகழ்கின்றது. கருணை பொருந்திய அத்தமிழன்னையின் மார்பில் (சீவக)சிந்தாமணி எனும் ஆரம் ஒளிவீசுகின்றது. அன்னையின் மெல்லிய இடையில் (மணி)மேகலை அணியப்பட்டுள்ளது. அவளுடைய திருவடிகள் சிலம்பார் இன்பப் போதொளிர்பவை- அதாவது சிலம்புகளை (சிலப்பதிகாரம்) அணிந்த திருப்பாதங்கள். நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குகிறாள் இவள். அத்தகைய தமிழ் நீடுவாழ்க!’ என உளங்கனிந்து பெருமிதத்தில் விம்மி வாழ்த்தும் புலவர் யார்?.... [மேலும்..»]

அரசியல்

அதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா

அதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரம் மீண்டும் முருங்கை மரம் ஏறி அங்கு தொற்றியிருந்த வேதாவைப் பற்றிக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கினான். உடனே வேதா நகைத்தது. வழக்கம் போல ஒரு கதை சொல்வதாகவும், அதற்கு உரிய பதில் கூறாவிட்டால் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் என்றும் கூறிவிட்டு, கதையைத் தொடங்கிவிட்டது. விக்ரமால் அந்தக் கதையை நிறுத்த முடியவில்லை. இந்த முறையும் வேதா தப்பிவிடும் என்று அவனுக்கு புரிந்துபோனது. ஆனால், இருவரிடையிலான ஒப்பந்தப்படி (இது அரசியல்வாதிகளிடையிலான ஒப்பந்தம் அல்லவே!) கதையைக் கேட்கத் துவங்கினான். வேதா கூறிய கதையிலிருந்து… *** தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவில் நிலவும் குடுமிப்பிடிச் சண்டைகள்... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், ராமாயணம், வழிகாட்டிகள்

அனுமன் எனும் ஆதர்சம்

அனுமன் எனும் ஆதர்சம்

நாகங்களின் தாயான சுரசை என்பளை விட்டு அனுமரை விழுங்கச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். அனுமர், அநாவசியமாக சண்டை போடாமல், புத்தியை மட்டும் பயன்படுத்தி அவள் வாயினுள் நுழைந்து திரும்பி சாகசம் பண்ணித் தப்பிப்பதன் மூலம், தேவையில்லாத நேரத்தில் சக்தியைச் செலவழிக்கக் கூடாது. அடுத்தது சிம்ஹிகை என்ற அரக்கியிடம் சிக்கினார். அனுமர், அங்கே பலத்தைப் பிரயோகித்தார். தேவையான இடத்தில் பலப்பிரயோகம் பண்ணிடணும்... சீதையிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் விதம், “தங்கள் கணவரால், தாங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்று கண்டு வரப் பணிக்கப்பட்ட நபர்” என்ற வாசகத்தில் துளியும் மிகையன்றி, துளியும் குறையன்றி சொல்லும் நேர்மையைப் போதிக்கிறார்.... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், சைவம்

அந்த ஆறு முகங்கள்

அந்த ஆறு முகங்கள்

இந்த ஆறுமுகக் காதல் சாதாரண காதலா என்ன? நக்கீரர் ஆரம்பித்து அருணகிரிநாதர், குமரகுருபர சுவாமிகள் என தொடர்ந்து பாடியிருக்கிறார்கள். அதில் இருக்கும் தொடர்ச்சி அற்புதமானது.. ஞான சூரியனாக இருள் அகற்றி தண்ணொளி திங்களாக அனுபவத்தை அளிக்கும் அருளாகவும் இருக்கிறது அவன் முகம்... போர்க் களத்தை விரும்பும் முகம். எவருடன் போர்? செறுநர் உடன். கொட்புற்றெழு நட்பற்ற அவுணரை வெட்டிப்பலியிட களத்தை விரும்பி செல்லும் முகம்.. கர்த்தரும் விண்ணவரும் அவன் பாதத்தை தங்கள் சிரங்களில் சூடுகின்றனர். அவனோ ஜீவாத்மாவான வள்ளியின் பதசேகரனாக இருக்கிறான். எப்படிப்பட்ட காதல் அவனுக்கு!.. பாரதத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மற்றொரு ஆன்மிக இணைப்பாக... [மேலும்..»]

இலக்கியம், கவிதை, மகளிர்

“நும்வாய்ப் பொய்யு முளவோ?”

“நும்வாய்ப் பொய்யு முளவோ?”

அசோகமரம் மகளிர் பாதம் பட்டால் மலர்வளம் மிக்கதாகும் என்பது வடமொழி இலக்கியக் கவி மரபு. சங்ககாலத்திலேயே இது தமிழ்மரபுடன் கலந்து விட்டது... புலி புலி என மகளிர் கூவினால் வேங்கை மரக் கிளைகள் மலர் கொய்ய ஏதுவாகத் தாழும். மகளிர் நகைக்க முல்லை மலரும். ஏழிலைம்பாலை என்னும் மலர் மகளிர் நட்புச் செய்வதால் மலர்வது. செண்பகம் மகளிரின் நிழல்பட மலர்வது. மா மகளிரின் பார்வை படத் தழைப்பது. மகிழமரம் கொம்பை மகளிர் பல்லினாற் கவ்வ மலரும். மாதவி- குருக்கத்தி. இது மகளிர் பாட மலர்வது, புன்னை மகளிர் ஆடலுக்குப் பூப்பது. மகளிர் தழுவ மலர்வது குரவம்.... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், மகளிர், ராமாயணம், வைணவம்

ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2

ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2

பாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமானுக்கோ அல்லது அடியாருக்கோ அல்லது ஆசார்யனுக்கோ வசப்பட்டிருத்தல் ஆகும். நமது உடலில், மனஸ் அல்லது அந்தகரணம் என்று ஒரு உள்-புலனுண்டு. அதற்கு சிந்தித்தல் (சித்தம்) , தேர்வு செய்தல் (புத்தி) மற்றும் “தன்னை இன்னது என்று அடையாளம் செய்வது” (அபிமாநம்) என்னும் 3 பணிகளுண்டு. அந்த மூன்று பணிகளையும், பரமனின் திருவுள்ள உகப்பிற்காக அர்பணிப்பது பாரதந்த்ர்யம் ஆகும்... பிறப்பே இல்லாத பகவான் ,தன் பக்தர்களிடம் தானும் பாரதந்த்ர்யமாய் (அடிமையாய்) நடந்து, விளையாட வேண்டி, தன் இச்சைக்கு ஏற்றபடி உடலெடுத்துப் பிறக்கிறான் என்கிறது வேதம். அதைத்தான் “மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து,... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சூழலியல்

ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்

ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்

விநாயகப் பெருமானின் வழிபாடு அதன் முன்னோடி வடிவில் சங்க காலத்திலேயே தமிழகத்தில் இருந்திருப்பதையும் அதன் உட்பொருளும் சடங்கியல் நோக்கமும் மாறாமல் அது இன்றும் நம் பிள்ளையார் வழிபாட்டில் தொடர்வதையும் நம்மால் காண முடிகிறது... உலகில் எனக்கு தெரிந்து வேறெந்த பண்பாடும் யானையை போல ஒரு பிரம்மாண்ட விலங்கை தன்னகப்படுத்தியதில்லை. அதை செய்த ஒரே பண்பாடு நம்முடையதுதான். யானைக்கு வர்மப்புள்ளிகளைக் கூட கணித்த பண்பாடு கோவில் யானைகளை பராமரிக்க சரிவான தீர்வை அளிக்காதா? அதை செய்யாமல் நம் பண்பாட்டின் உயர் உச்சமொன்றை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில் ஏன் இவ்வளவு முனைப்பு? யானைகளை கோவில்களில்... [மேலும்..»]

ஆன்மிகம், இலங்கைத் தமிழர், சைவம், நிகழ்வுகள், வரலாறு

திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்

திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்

தென்னகத்தின் செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர். சேதுப்பாலம் மற்றும் இராமேஸ்வரம் கோவிலின் அறங்காவலரான இராமநாதபுரம் சேதுபதியின் வலிமையான பாதுகாப்பே அங்கு அவர்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம். “பொது ஆண்டுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரையிலிறங்கிய இளவரசன் விஜயன், பல்லாண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்த திருக்கேதீஸ்வரம் கோவிலைக் கட்ட ஏற்பாடுசெய்தான்.” [மேலும்..»]