Posts Tagged ‘ அகிலேஷ் யாதவ் ’

தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்!

குடிமைப்பணி அதிகாரிகள் எங்கு பணி புரிந்தாலும், அவர்கள் மத்திய அரசுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள். அவர்களே மத்திய- மாநில உறவுகளையும் உறுதிப்படுத்துபவர்கள். எனவே மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும். தற்போது தென்படும் விரிசல்கள் பெரும் விலகலாகாமல் தடுப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு... ஜனநாயகத்தின் முதல் இரு தூண்களிடையே நடைபெறும் உரசல்கள் நமது ஜனநாயகத்தை பலவீனப்படுத்திவிடக் கூடாது... [மேலும்..»]

சாக்‌ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?

சாக்‌ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?

அண்மைக்காலமாக, பாஜகவில் சில தலைவர்களின் பேச்சுக்கள் சர்ச்சைக்குரியதாகி வருகின்றன. சாக்‌ஷி மஹராஜ், சாத்வி நிரஞ்சன் ஜோதி, யோகி ஆதித்யநாத் போன்ற இரண்டாம் நிலைத் தலைவர்கள் சிலரின் எக்குத்தப்பான பேச்சுக்களால், நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கான ஆட்சி என்ற பிம்பம் குலைகிறது. சாக்‌ஷி மஹராஜுக்கு பாஜக அளித்துள்ள எச்சரிக்கை நோட்டீஸ், அதன் தீவிரத்தை கட்சி உணர்ந்திருப்பதை வெளிக்காட்டுகிறது. பாரதீய ஜனதா கட்சியின் வேர்கள் ஹிந்துத்துவத்தில் தான் நிலைகொண்டுள்ளன. ஹிந்து என்பதில் பெருமிதமும், தேசிய உணர்வில் தெளிவான கண்ணோட்டமும் தான் பாஜகவின் அடிப்படை. இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஆட்சியில் இருக்கும்போது பாஜகவின் நிலைப்பாடுகள் தேசத்தின் ஒட்டுமொத்த மக்களையும்... [மேலும்..»]