தில்லி சம்பவம்: போராட்டங்களும் அடக்குமுறைகளும்

அந்தப் போலீஸ்காரர் தன்னுடைய தாயையோ, சகோதரியையோ, மனைவியையோ அப்படி அடிப்பாரா, அல்லது வீசி எறிவாரா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். காரணங்களைக் குறித்து அலசுவதை விட, நடந்துவிட்ட காரியங்களிலுள்ள நியாய அநியாயத்தைக் குறித்துத்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்… இந்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்திய போலீசார் ஒன்றுமறியாத அப்பாவி மாணவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துத் துவைக்க என்ன வெறி காரணம். இவர்களை இந்த வேலைக்கு எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்?… குற்றவாளிகள் செய்த கொடூர பாதகச் செயலுக்குத் தக்க தண்டனையை உடனடியாக அவசரகால நீதிமன்றத்தில் தினந்தினம் விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்களுக்கு டில்லியில் மட்டுமல்ல, நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்….

View More தில்லி சம்பவம்: போராட்டங்களும் அடக்குமுறைகளும்

’பப்’ கலாசாரம் பெண்களுக்கு அவசியமா?

ராம்சேனெ அமைப்பு தாங்களே சட்டத்தைக் கையில் எடுத்தது தவறுதான். அதற்கு அவர்களைக் கைது செய்யவேண்டியதும் முறையே. ஆனால் பெண்கள் இத்தகைய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது தவறு என எந்த அரசியல்வாதியும் சொல்லவில்லை. நம் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியான காங்கிரஸின் பிரமுகர் ரேணுகா செளதிரி ஒரு படி மேலே போய், அனைத்துப் பெண்களையும் “பப் பரோ” (மதுக்கடையை நிரப்பு என்று பொருள்!) என்று அறைகூவல் விடுத்துப் போராட்டம் நடத்தினார். இது எத்தகைய அநியாயம் என்பதை அவர் உணரவில்லை.

View More ’பப்’ கலாசாரம் பெண்களுக்கு அவசியமா?