
தங்களுக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத கங்கைக் கரையில் கிளை அலுவலகம் அமைத்து “மிஷநரீஸ் ஆஃப் சாரிடி” அங்கு வாழும் ஓடக்காரர்களை கிறுத்துவர்களாக மதம் மாற்றுவதைப் பற்றி விளக்கவில்லை. இந்துக்கள் தங்கள் பித்ருக்களுக்கு கங்கையின் ஐந்து கட்டங்களிலும் ஓடத்தில் சென்று தான் காரியங்கள் செய்ய வேண்டும். மேலும் கங்கைக் கரையிலும் நீரிலும் இந்துக்கள் தங்கள் காரியங்களைச் செய்வதற்கு ஓடக்காரர்களின் உதவி பெரிதும் இன்றியமையாதது. எனவே அவ்வாறு ஓடக்காரர்களை மதம் மாற்றுவதன் மூலம் இந்துக்களின் முக்கியமான ஆன்மீக கலாசார நிகழ்வுகளை அடியோடு அழிக்க நினைக்கிறார்கள் கிறுத்துவ மிஷநரிகள் என்கிற உண்மையை சன் டிவி சொல்லவில்லை.