
இந்திரன் என்ற சொல்லில் இருந்து வந்ததுதான் இந்திரியங்கள் என்ற சொல்லாடலும். நமது பஞ்ச இந்திரியங்கள் வெளிமுகமாக நோக்கினால், நாம் உலகியலில் ஈடுபடுவோம். அவ்வாறான வெளிப்புற நோக்கை அடக்கி, அதை உண்முக நோக்கிற்கு அதனைப் பழக்கப் பழக்க, உலகைப் பற்றிய உண்மைகளும் தெரியவரும். மனத்தின் உண்மை சொரூபமும் தெரியவரும். .. நம் உலகியல் சிந்தனைகளும், அதையொட்டி நடக்கும் செயல்களும் மனத்தின் கண் குவிந்துள்ள வாசனைகளால் உந்தப்பட்டு நடைபெறுவதால், அவை அனைத்துமே நம் உண்மை சொரூபம் பற்றிய அறியாமையால் விளைந்தவை ஆகும். அந்த அறியாமையைப் போக்க இந்திர சக்தியால் வளரும் ஆன்ம அறிவு ஒன்றால் மட்டுமே முடியும். ..