Posts Tagged ‘ அசோக் கெம்கா ’

தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்!

குடிமைப்பணி அதிகாரிகள் எங்கு பணி புரிந்தாலும், அவர்கள் மத்திய அரசுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள். அவர்களே மத்திய- மாநில உறவுகளையும் உறுதிப்படுத்துபவர்கள். எனவே மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும். தற்போது தென்படும் விரிசல்கள் பெரும் விலகலாகாமல் தடுப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு... ஜனநாயகத்தின் முதல் இரு தூண்களிடையே நடைபெறும் உரசல்கள் நமது ஜனநாயகத்தை பலவீனப்படுத்திவிடக் கூடாது... [மேலும்..»]

திக்குத் தெரியாமல் தவிக்கும் ராகுல்!

கடந்த 2013 ஜனவரி மாதம் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் “பதவி அதிகாரம் என்பது விஷம் என்று நான் காங்கிரஸ் துணைத் தலைவராக பதவி ஏற்ற பின் என் தாய் என்னிடம் வருத்தப்பட்டு தெரிவித்தார்” என்று உணர்ச்சிப் பூர்வமாகப் பேசியிருந்தார் ராகுல் காந்தி.  அதை தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டு மகிழ்ந்தன 24 மணி நேர செய்தி அலைவரிசைகளும் ஆங்கில ஊடகங்களும். அதுகுறித்து  மேலும் விளக்கிய அவர்,  “பதவி அதிகாரம் என்பது விஷம் தான். பதவி அதிகாரத்தால் சூழ்ந்து கொள்ளும் ஆபத்துக்ளை கையாளத் தெரியாமல் போகும் போது அது விஷமாகிறது. மேலும், அதிகாரத்தை பொதுநலத்திற்காக பயன்படுத்தாமல் சுயநலத்துக்காகப் பயன்படுத்தினால்... [மேலும்..»]