Posts Tagged ‘ அஜய் மக்கான் ’

யமுனைக் கரையிலும் மலர்கிறது தாமரை!

எப்படியாவது தில்லி தேர்தலில் பாஜக தோற்றுவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கின்றனர் சில ஊடகக் கைக்கூலிகள். அவர்கள் அளவுக்கு அதிகமாகவே கேஜ்ரிவாலை கொம்பு சீவி விடுகின்றனர். இந்நிலையில் தலைநகரின் அரசியல் நிலவரம் குறித்து ஹிந்து விரோத மனப்பான்மையின்றி ஓர் அலசல் தேவையாகிறது. அந்தத் தேவையை நிறைவேற்றுகிறது இக்கட்டுரை…. மீண்டும் தில்லி மாநில சட்டசபைத் தேர்தல் தேசிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிப். 7-இல் நடைபெறும் தேர்தலை தனது இறுதிப் போராட்டமாகக் கருதிப்  போராடுகிறார் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால். ஆனால், காலம் அவரை கருணையின்றி நிராகரித்துவிடும் என்பதற்கான சான்றுகள் இப்போதே தென்படத்... [மேலும்..»]