அஞ்சலி: மலர் மன்னன்

இரண்டு நாட்கள் முன் இருக்குமா? மலர்மன்னனிடமிருந்து வந்தது தொலை பேசி அழைப்பு ஒன்று. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிக் கொண்டே தொலை பேசியை எடுத்தேன். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே, ”உங்க ரங்கநாதன் தெரு கட்டுரை நம்ம சென்னையில் வந்திருக்கு இந்த மாதம். பாருங்கோ நெட்லே கிடைக்கும். அச்சிலே வரதுக்கு நாளாகும்” என்றார். ”பாக்கறேன். ஆனால் நெட் கனெக்‌ஷன் போயிடுத்து” என்று கொஞ்சம் நிம்மதி அடைந்து அவருக்கு பதில் சொன்னேன். அவருக்கும் எனக்கும் இடையே சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக அவருடைய புத்தகம் “திராவிட இயக்கம், புனைவும் உண்மையும்” பற்றித் தான் பேச்சு. அது பெற்றுள்ள வரவேற்பு பற்றி அவருக்கு ரொம்ப சந்தோஷம். ”ராமகோபாலன் பத்து காபி வாங்கிண்டு போயிருக்கார். அவரைச் சுத்தி எல்லாருக்கும் கொடுக்கறதுக்கு” என்று. சொன்னார். புத்தகம் ஸ்டாலுக்கு வரதுக்கு முன்னாலேயே நெட்லேயே எல்லாம் வித்துப் போச்சாம் என்று ஒரு செய்தி. ”இனிமே மறுபடியும் அச்சடிச்சு எனக்கு எப்போ காபி கொடுக்கப் போறாளோ தெரியலை,” என்று ஒரு நாள். “வைரமுத்து, கருணாநிதிக்குக் கூட இவ்வளவு வரவேற்பு இருந்ததா கேள்விப்படலையே ஸ்வாமி, எதுக்கும் ஜாக்கிரதையா இருங்கள். அரவிந்தன் புத்தகத்துக்கு நடந்தாப்போலே, பெரியார் திடல்லே கூட்டம் போடுவாங்க உங்களைத் திட்டறதுக்கு. இல்லாட்டா, ராமமூர்த்தி புத்தகத்து பதில் கொடுத்தாப்போல, உங்களுக்கு ஒரு 400 பக்கத்துக்கு பதிலடி கொடுக்க வீரமணி தயார் பண்ணிக் கணும்” என்று இப்படி ஏதோ பேசிக்கொள்வோம். பத்ரி இந்த புத்தகத்தை எழுதச்சொல்லி இவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த தொலை பேசி சம்பாஷணை தொடர்ந்தது. புத்தகம் கைக்கு வந்ததும் எனக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்திருந்தார். அதிலிருந்து நான் அதைப் படித்தேனா என்று கேள்விகளுக்கும், படித்து விட்டேன் என்றதும் எப்படி இருக்கிறது புத்தகம்? என்றும் தொடர்ந்து கேள்விகள், பின்னர் எழுதத் தொடங்கியாயிற்றா?” என்று கேள்விகள் கேட்டு தொலை பேசி மணி அடித்தவாறு இருக்கும்.
ஒவ்வொரு தடவையும் திண்ணையில் அவர் எழுதும் கட்டுரைகள் மாத்திரம் அல்ல, பின்னூட்டங்கள் பற்றியும் கேட்பார். எனக்கு அவர் சளைக்காமல் காவ்யா, சுவனப்ரியன் (இப்படி அனேகர்), இவர்களின் விதண்டா விவாதங்களுக் கெல்லாம் பதில் அளித்துக்கொண்டிருப்பது அவர் தன் நேரத்தை வீணடிப்பதாக எனக்குப் படும். நான் சொல்வேன். ஆனால் அவர் கேட்கமாட்டார். ”எழுதி வைப்போம். இன்னம் படிக்கிறவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு இது போய்ச் சேராதா,” என்பார். இந்த தீவிர முனைப்பும் சளைக்காத உழைப்பும், விசாலமான அனுபவம், வாசிப்பு, உற்சாகம் மிகுந்த துடிப்பு எல்லாம் அவரிடம் பார்த்து நான் பொறாமைப் பட்டதுண்டு. மேலும் மிகவும் மென்மையான சுபாவம். யாரையும் கடிந்து கொள்ள மாட்டார். சீற்றம் என்கிற சமாசாரம் அவரிடம் இருந்ததில்லை. தார்மீக காரணத்துக்கானாலும் சரிதான்….

View More அஞ்சலி: மலர் மன்னன்

மலர்மன்னன் இறைவனடி சேர்ந்தார்

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று…

View More மலர்மன்னன் இறைவனடி சேர்ந்தார்

அஞ்சலி: திருவாவடுதுறை ஆதீனம்

நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதினம் 23வது பட்டம் குருமகாசந்நிதானம்…

View More அஞ்சலி: திருவாவடுதுறை ஆதீனம்

பால் தாக்கரே – அஞ்சலி

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே 17-நவம்பர் அன்று மரணமடைந்தார் காஷ்மீரம் முதல்…

View More பால் தாக்கரே – அஞ்சலி

17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு

நெல்லைச் சீமை ஈன்றை வீரத் திருமகனின், தியாகச் சுடரின் புனித நினைவுக்கு எமது இதய அஞ்சலி.

நண்பர்களுக்கு: இன்றோ அல்லது இந்த வாரமோ நீங்கள் ஏதாவது கூட்டமோ பொது நிகழ்ச்சியோ நடத்துவதாக இருந்தால், இந்த தகவலை அங்கு வந்திருக்கும் தமிழர்களுக்கு மறக்காமல் குறிப்பிடவும். விரும்பினால் 1 நிமிட மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கலாம்…

வந்தே மாதரம்!

View More 17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு

அஞ்சலி: சுவாமி நித்யானந்தர் (தபோவனம்)

சுவாமி: இங்கு எதற்கு வந்தாய்? சிறுவன்: நான் துறவியாக விரும்புகிறேன்; சுவாமி: அப்படியா! நீ சிறு பிள்ளையாக இருக்கிறாய். ஊருக்குச் சென்று எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்துவிட்டு சர்டிஃபிகேட் எடுத்துக்கொண்டு வா, சேர்த்துக் கொள்கிறேன்… தான் கொண்டு வந்த மதிய உணவை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். அந்தப் பாட்டி தினந்தோறும் இவர் வருகைக்காக காத்திருக்கிறார்… மாணவர்களுக்கு வார்டனாக இருந்ததால் அனைவரும் ‘வார்டன் சுவாமிஜி’ என்றே அழைத்து வந்தனர். தலைமை ஸ்தானத்தை அவர் தேடிச் செல்லவில்லை. அது தானே தேடி வந்தது…

View More அஞ்சலி: சுவாமி நித்யானந்தர் (தபோவனம்)

கோவை: கண்ணீருக்குமா தடை?

கோவை நகரின் வரலாற்றில் இருள் கவிந்த இந்த கருப்பு தினத்தை, அமைதி வேண்டி மலர் தூவி, விளக்கேற்றி தங்கள் நினைவில் கடந்து செல்ல விரும்பினர் நகரக் குடிமக்கள் சிலர்… எல்லை தாண்டி செத்துப் போன தமிழர்களுக்கெல்லாம் இரங்கல் கடிதம் எழுதி மூக்கு சிந்தி அழுபவர்கள் சொந்த மாநிலத்தில் சிதறிப் போன தமிழர்களை நினைவில் கூட வைக்காமல் போவதேன்?… இந்த நினைவுச் சின்னம், பயங்கரவாதத்தின் கோர முகத்தையும், அதனுடன் போராடி அதை வேரோடு களையும் மன உறுதியையும் என்றென்றும் தமிழக மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும்..

View More கோவை: கண்ணீருக்குமா தடை?

அஞ்சலி: நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத் தாய்

தமிழகத்தின் முதல் பெண் நாதஸ்வரக் கலைஞர் எம்.எஸ். பொன்னுத்தாய் (வயது 87) செவ்வாய்க்கிழமை…

View More அஞ்சலி: நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத் தாய்

அஞ்சலி: சுகுமாரன் நம்பியார்

சுமார் 10 ஆண்டுகள் அமெரிக்காவில் படித்தாலும் இந்துப் பண்பாடு, கலாசாரம் மீது தீராத காதலும் பற்றும் அவருக்கு உண்டு… கட்சியின் மூலம் இந்து சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்றே அவர் விரும்பினார்… தொடர்ந்து சமுதாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த அவர், தற்காப்புக் கலைகளிலும் நிபுணர். இந்திய ராணுவம், கறுப்புப் பூனைப் படை, தமிழக அதிவிரைவுப் படையினருக்கு பயிற்சி அளித்துள்ளார்…சுகுமாரன் நம்பியாரின் மரணம் பாஜகவுக்கு மட்டுல்ல, ஒட்டுமொத்த இந்து சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு…

View More அஞ்சலி: சுகுமாரன் நம்பியார்

அஞ்சலி: பாபா உனக்கேது மரணம்?

Help Ever Hurt Never… Love All Serve All” என்ற வாசகங்கள் மட்டுமே என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்பால் ஈர்த்தது… பசியோடிருப்பவனுக்கு ஆன்மிகம் எதற்கு? அவனுக்கு உணவைத் தா… கடவுளுக்கு ஏது தீட்டும் சடங்கும்? கடவுளுக்கு ஏது மதமும் சாதியும்?… பாபா உனக்கேது மரணம்?…

View More அஞ்சலி: பாபா உனக்கேது மரணம்?