
இந்திய ஹிந்துக்கள் ஒருபோதும் இஸ்லாமிய மதத்தின் மீது எந்தவிதமான மதிப்போ அல்லது மரியாதையோ உடையவர்களாக இருந்ததில்லை என்பதனையே காட்டுகிறது. தங்களால் இயன்ற அளவிற்கு இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேறி ஹிந்துக்களாக மாறவே அவர்கள் பெருவிருப்பம் கொண்டிருந்தனர். இடைக்கிடையே மதவெறி குறைந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வருகையில், இஸ்லாம் இந்தியாவில் தாழ்ந்தும், ஹிந்துமதம் மேலோங்கியும் இருப்பதையே வரலாற்றின் பக்கங்களில் காணலாம். இந்த உண்மை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களாலேயே கூட கசப்புடன் ஒப்புக் கொள்ளப்படுவதனையும் காணலாம். “காஷ்மீரில் நடந்த கட்டாய மதமாற்றங்கள் காரணமாக ஏறக்குறைய 95 சதவீத ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்கள் தங்களின் பழைய ஹிந்து மத பழக்க வழக்கங்களையே தொடர்ந்து பின்பற்றி நடந்து வந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் கூட, கஷ்மீரின் பெருவாரியான முஸ்லிம்கள தாங்கள் மீண்டும் ஹிந்து மதத்திற்குத் திரும்ப விருப்பமுடையவர்களாக இருப்பதாக அவர்களின் ஹிந்து அரசரிடம் கேட்டுக் கொண்டனர்” என்று எழுதுகிறார் ஜவஹர்லால் நேரு.