Posts Tagged ‘ அடியார்கள் ’

இலக்கியம், வைணவம்

இராமநுச கதி 

இராமநுச கதி 

எம்பெருமானாரைப் பற்றி இதுவரை வெளிவராத புதிய செய்தி பக்தமான்மியம் என்னும் தமிழ் மொழிபெயர்ப்புக் காப்பியத்தில் காணக் கிடைக்கின்றது. இதன் ஆசிரியர் கொங்குக் கச்சியப்பர் எனப்பெறும் சிரவை ஆதீனத்தின் இரண்டாம் அதிபர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்... பன்னிரண்டு ஆண்டுகள் இரவும் பகலும் சோர்ந்துவிடாத மெய்த் தொண்டின்வழி நின்றவர்கட்கே குருதேசிகனால் அருளப்படும் இம்மந்திரமாகிய அரிய செல்வத்தை இராமானுசன் எளிதில் நமக்குத் தந்தான், அவனுடைய பெருமையை நம்மால் உரைக்கவுவும் இயலுமோ எனப்பலரும் புகழ்ந்தேத்தும் இராமானுசருடைய வரலாற்றில் , உலகவர் பலர் அறியாத நிகழ்வொன்றை புகல்வேன்... அத்தகைய புகழ் வாய்ந்த இராமானுசர் தம் சீடர்கள் ஆயிரவர் தம்மைச் சூழ,... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம், வீடியோ

நாயன்மார்கள்: ஓர் சொற்பொழிவு

May 22, 2015
-
நாயன்மார்கள்:  ஓர் சொற்பொழிவு

நாயன்மார்களின் சரிதங்கள், நமது சமயப் பண்பாட்டு மலர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஜடாயு ஆற்றிய உரை. பெரியபுராணத்தின் பின்னணியையும், சம்பந்தர், அப்பர், சுந்தரர், சிறுத்தொண்டர், கண்ணப்பர், திருநீலகண்டர் மற்றும் சில நாயன்மார்களையும் குறித்து வரலாறு, இலக்கியம், சமயம் என்ற மூன்று தளங்களையும் தொட்டுச் செல்கிறது இந்த 50 நிமிட உரை. இங்கே கேட்கலாம்.. [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், கவிதை, சைவம், தத்துவம்

சிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்

சிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்

அறிவையும், தொழிலையும் பெரிதாகக் கருதாமல் பக்திக்கு வீர சைவர்கள் முதலிடம் தந்தனர். சாதி - பொருளாதார வேறுபாடுகளின்மை, பெண்ணுக்குச் சம மதிப்புத் தந்து போற்றிய முறைமை ஆகியவை வீர சைவத்தின் தலை சிறந்த இயல்புகளில் சிலவாகும்... வசனங்கள் ’கன்னட உபநிடதங்கள்” என்றும் போற்றப் படுகின்றன.வசனகாரர்கள் கவிஞர்கள் இல்லை : பண்டிதர்களும் இல்லை. மனிதர்கள் மனிதர்களோடு பேசுவதான, விவாதிப் பதான முறையிலேயே அவர்களின் பாடல்கள் உள்ளன... தீ எரியும் அசைய முடியாது - காற்று அசைய முடியும் எரியாது - தீ காற்றைச் சேரும் வரை - ஓரசைவும் இல்லை - தெரிவதும் செய்வதும் அதைப் போன்றது... [மேலும்..»]

ஆன்மிகம், சைவம், மகளிர்

மாங்கனி தந்த அம்மை

மாங்கனி தந்த அம்மை

“இந்த மாங்கனி நான் கொடுத்தனுப்பிய மாங்கனி அன்று. இதன் ருசி வேறாக இருக்கிறது. மூன்று உலகங்களிலும் இது போன்ற மாங்கனி கிடைப்பதரிது. இதை எங்கே வாங்கினாய்?” என்று கேட்க புனிதவதி திகைத்துப் போனாள். என்றாலும் நடந்ததை நடந்தபடி சொல்வது தன் கடமை என்று உணர்ந்து உண்மையைச் சொன்னாள்... புனிதவதி என்ன செய்தாள்? இனியும் இவனுக்காக இத்தனை நாள் சுமந்து கொண்டிருந்த இந்த அழகையும் தசைப் பிண்டமான் இந்த உடலையும் நீக்கி விட வேண்டும் என்று முடிவெடுத்தாள். ஆலங்காட்டு அப்பனிடம் அப்பனே! உன் தாள்கள் போற்றும் பேய் வடி வத்தை எனக்கு அருள வேண்டும்” என்று வேண்டினாள்.... புனிதவதியார்... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், பொது

ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு

ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு

கந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ் மக்கள்... இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும், ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும்... மேல்சாந்திமார்கள் உள்ளிட்ட அர்ச்சகர்களும் வெள்ளாடை சாற்றியிருப்பதையே காணும் போது ஏன் இவ்வாறு கறுப்பாடை அணிய வேண்டும்? [மேலும்..»]

சைவம், நிகழ்வுகள்

தஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை

தஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை

தொன்மையான சைவ மரபினைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதலும் சைவ சமயத்தை இழிவு படுத்துபவர்களுக்கு கண்டனம் தெரிவித்தலும் கழகத்தின் முக்கிய கொள்கைகள் என கூறினார்... மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - தமிழகத்தில் பூசையே நடைபெறாத சிவாலயங்களை ஆங்காங்கே சைவப் பெருமக்கள் தத்தெடுத்து நித்திய பூசைகள் சிவாகம முறைப்படி நிகழ... வேத ஆகம பாராயாணத்தைக் கண்ட அன்பர்கள் மிகுந்த பரவசமடைந்தனர். பெங்களூர் அன்பர்கள் நடத்திய ஸ்ரீசண்டேச நாயனார் மற்றும் ஸ்ரீகண்ணப்ப நாயனாரின் நாடகங்கள் காண்போர்களின் மனதை பறித்தன... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம், தத்துவம்

கடவுளின் பணித்திட்டம்

கடவுளின் பணித்திட்டம்

உயிர்களைவிட்டுக் கணநேரமும் பிரியாமை அவனது குறிப்பு என மாணிக்கவாசகர் அனுபவித்துக் கூறுகின்றார். ‘உய்ய என் (உயிர்களின்) உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா’, ‘மருவி எவ்வுயிரும் வளர்ப்போன் காண்க’ என்பன போலத் திருவாசகத்தின் பல இடங்களில் இறைவன் உயிர்களோடு கலந்து நின்று பிரியாமல் இருப்பதன் திருக்குறிப்பை அதாவது ‘கடவுளின் பணித்திட்டத்தை’ மணிவாசகர் அறிந்து கூறுகின்றார். [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம்

பணிப்பொன்

பணிப்பொன்

ஐந்து இந்திரியங்களும் கைவிட்ட நிலையில் யார் கை கொடுப்பார்கள்? ஆண்டவன் ஒருவனே கைகொடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அழைக்க முடியுமா? நல்ல நினவும் அறிவும் இருக்கும் போதே ஆண்டவன் நாமங்களைச் சொல்லிப் பழக வில்லை யென்றால் புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபம்அடைக்க நலம் நசிந்து நமன் வரும் வேளையிலா நாமம் சொல்ல முடியும்? அதனால் தான் ஆன்றோர்கள், நாம் நல்ல நிலையில் நினைவோடும் அறிவோடும் இருக்கும் போதே இறைவன் திரு நாமங்களைச் சொல்லிப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். [மேலும்..»]

சைவம், வழிகாட்டிகள், வைணவம்

வேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்

வேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்

வைகாசி மாதம் இரு பெரும் பக்தித் தமிழ் வல்லார்களின் திருநாட்கள் வருகின்ற அற்புத மாதம். ஒருவர் சைவத்திருமுறைகள் அருளிய திருஞானசம்பந்தர். மற்றையவர் சடகோபர் என்றும் தமிழ்மாறன் என்றும் பேசப்படும் நம்மாழ்வார். .. பதினாறாண்டுகள் அம்மரப்பொந்தினுள் அசையாதிருந்த அக்குழந்தை உண்ணாமலும் உறங்கமலும் ஆழ்நிலைத்தியானத்தில் ஆழ்ந்திருந்தது... “சம்” என்றால் நல்ல. “பந்தம்” என்றால் உறவு. எனவே சிவஞானத்துடன் நல்லுறவு கொண்டவர் ஞானசம்பந்தர்... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், சைவம், வழிகாட்டிகள்

பண்டைக்குலமும் தொண்டக்குலமும்

பண்டைக்குலமும் தொண்டக்குலமும்

நந்தனாரைத் தங்கள் சமயத் தலைவராக, நாயனாராக ஏற்று வழிபடும் சைவர்கள் எப்படி நோக்குகின்றார்கள்? சூழ்நிலையை எதிர்த்து வாழ்ந்தால், அந்த வாழ்க்கை போராட்டமாகத்தான் ஆகும். அத்தகைய போராட்ட வாழ்வை விரும்பி நந்தனார் மேற்கொண்டார்... சைவ மரபில் நெருப்பு சிவனுக்கு ஒரு குறியீடு. நெருப்பு சிவனுக்கு வடிவம். வேள்வியில் மூட்டும் தீக்கு சிவாக்கினி என்று பெயர்... யாழ்ப்பாணர் சிவனடியவர்களாகிய அந்தணர் கூட்டத்திலேயே இருந்தமையால் அவருக்கு சாதி குலம் பற்றிய சிந்தனைக்கு வாய்ப்பிருக்கவில்லை போலும்! [மேலும்..»]