உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2

வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து நிதி வாங்கிக் கொண்டு இந்தியாவைத் துண்டாடுகிறார்கள் என்று ஜெயமோகன் கடுமையான குற்றசாட்டுக்களை வைக்கும் அருந்ததி ராயும், எம்.டி.எம், அ.முத்துக்கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களும் இந்த உதயகுமாரை விட எளிமையாக நடிப்பார்களே? ஏன் அவர்களைக் கொஞ்சிக் குலாவுவது கிடையாது? ஏன் இவருக்கு மட்டும் சிறப்பு சலுகை?… அணு உலை மீது குற்றம், சந்தேகம் இருந்தால் அந்தத் துறையின் விற்பன்னர்களிடம் அல்லவா முதலில் கேட்க வேண்டும்? அப்படி சந்தேகம் ஏற்படும் அளவுக்கு விக்ரம் சாராபாயும், அப்துல் கலாமும், டாக்டர் சிதம்பரமும், ராஜா ராமண்ணாவும் பொய்யர்களா அயோக்கியர்களா என்ன? இந்தியா வெற்றிகரமாக ராக்கெட்டுகளையும் சாட்டிலைட்டுகளையும் ஏவவில்லையா? அவர்கள் மீது ஏற்படாத ஒரு நம்பிக்கை இந்தியாவை உடைப்பேன் என்று சொல்பவனின் மீது வந்தால் எது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?….

View More உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2

அணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்

ஆணவப் போக்குடன் மத்திய அரசு நடந்துகொண்டது. அதன் விளைவாக உதயகுமார் கும்பலுக்கு ஆதரவு பெருகியது.. கத்தோலிக்கர்களின் இந்திய தலைமை குருமார்களுடன் மத்திய அமைச்சர்கள் சிலர் பேச்சு நடத்தினர். அதனால் பயன் பெரிய அளவில் விளையவில்லை. மதத்தை விட, இந்தப் போராட்டத்துக்கு நிதி உதவி அளிக்கும் நாடுகளின் சர்வதேச அரசியல் வலுவானது… தூத்துக்குடியில் இயங்கும் TDA அமைப்பு சென்ற நிதியாண்டில் பெற்ற மொத்த நிதி ரூ. 2.38 கோடி! இந்த நிதி மதமாற்ற நடவடிக்கைகளிலும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு உதவும் செயல்பாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது..

View More அணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்