Posts Tagged ‘ அண்ணாதுரை ’

திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்

பா.ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை. இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்... நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை... [மேலும்..»]

மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

மொழிவாரி மாநிலங்கள்:  உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

கடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும். [மேலும்..»]

வேரை அரிக்கும் கரையான்கள்

வேரை அரிக்கும் கரையான்கள்

ஒருவழியாக 16வது லோக்சபா தேர்தலின் 6வது கட்டம் தமிழகத்தில் ஏப்ரல் 24-ல் முடிவடைந்துவிட்டது. மாநிலம் முழுவதும் 39 தொகுதிகளிலும் சராசரியாக 73 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கின்றன; புதுவை தொகுதியில் 82 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 1967-க்குப் பிறகு, அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்திருப்பதாக தேர்தல் ஆணைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆயினும் நூறு சதவிகித வாக்குப்பதிவு இன்னமும் நிறைவேறாத கனவாகவே இருக்கிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் உள்ள தொகுதிகளில் பதிவாகியுள்ள குறைந்தபட்ச வாக்குப்பதிவு ஏமாற்றம் அளிக்கிறது. பெரிய அளவிலான எந்த அசம்பாவிதமும் இன்றி தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டாலும், இத்தேர்தலில் திணிக்கப்பட்டுள்ள பணப்பட்டுவாடா கலாச்சாரம், மிகுந்த அதிர்ச்சியையும் ஆயாசத்தையும் அளிக்கிறது.... [மேலும்..»]

பூனைக்கு யார் மணி கட்டுவது?: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்

இறைவன் படைப்பில் ஓரறிவு படைத்த உயிரினங்கள் தொடங்கி ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை பல்வகை உயிரினங்கள் இருக்கக் காண்கிறோம். வாரியார் சுவாமிகள் சொல்வது போல மனிதரில் சிலருக்கு ஆறறிவு என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். சமீப காலமாக மக்கள் மத்தியில் பெரும்பாலார் போதைக்கு அடிமைகளாக ஆகி, சமூக அந்தஸ்து, கெளரவம், பெருமை அனைத்தையும் தெருவோரக் குப்பைமேட்டில் எறிந்துவிட்டு அங்கேயே விழுந்து கிடக்கக் காண்கிறோம். பேருந்தில் அவசரமாக ஏறி ஏதோவொரு இடத்தின் பெயரைச் சொல்லி பயணச்சீட்டை வாங்கிவிட்டு, அந்த இடம் வந்ததும் நடத்துனர் எத்தனை முறை சொல்லியும் இறங்காமல் தடுமாறும் இளைஞர்களைப் பார்க்கிறேன். சாலையோரம் நல்ல உடையணிந்த மனிதன் அவை... [மேலும்..»]

பாரதி: மரபும் திரிபும் – 8

மதிமாறனின் பாட்டனார்கள்- திராவிட இயக்கப் போர்வாள்கள், "...அடிமையாய்க் கிடந்த தமிழை விடுதலை செய்து, எளிமையாக்கி வீதிக்குக் கொண்டுவந்து மக்கள்மயப்படுத்தியவன் பாரதி" என்று கூறி மதிமாறனின் முகத்தில் அறைகிறார்கள்... 1924இல் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு சென்ற அத்துனை பேரும் (ஈவெரா உள்பட) பாரதியாரின் பாடலையே பாடிச் சென்றனர்... ஆனால் எல்லாச் சித்தர்களுமே சிவனை ஏற்றுக்கொண்டவர்கள், கடவுள் உண்டு என்பதை நம்புபவர்கள் என்பதை மட்டும் மதிமாறன் சொல்ல ம(றைத்து)றந்துவிட்டார்... அழுகணிச் சித்தரின் கண்ணம்மாவைதான், கடத்தி வந்து பாரதி தன் காதலியாக்கிக் கொண்டார் என்று மதிமாறன் குற்றம் சுமத்துகிறார்... வார்த்தைக்கு வார்த்தை, கம்பன், குறளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறான்... ... [மேலும்..»]

ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்

January 31, 2012
By

ஆரியம் என்றால் என்ன? ஆரிய இனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? திராவிட இனம் என்றால் என்ன? இலக்கியங்களில் வரும் பொருள் எது? அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும் பொருள் எது? கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது? என்பதை அறியும் முயற்சியே இந்தக் கட்டுரை. வேதங்களில் ’திராவிட’ என்ற சொல் இல்லை! சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை! [மேலும்..»]

புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்

அண்ணாத்துரை குறித்து பாரதிதாசன் தீட்டியிருக்கும் இந்தக் கட்டுரைகள் கண்ணியம் குறைவான,மிக மிக மட்டரகமான, வக்கிரம் பிடித்த விமர்சனங்கள் ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இதைப் படிக்கும் எவருக்கும் அது புரியும்... கொள்ளையடித்தக் குற்றத்தை நம தலையில் கட்டிவிடும் ஆற்றல் அண்ணாத்துரைக்கு உண்டு என்று குழுவினர் உறுதியாக நம்பினார்கள். இன்றுவரைக்கும் அண்ணாத்துரை வரவு செலவுக் கணக்கைக் கொடுக்கவேயில்லை! [மேலும்..»]

வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை

September 15, 2010
By

தமிழகத்தில் எத்தனையோ அறிவு ஜீவிகள் இருந்தும் அவர்களையெல்லாம் விஞ்சி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் ஆளுமை பற்றி உன் கருத்து என்ன? அண்ணா தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் ஏற்றி வைத்தார் என்று சொல்லலாமா? அண்ணாவின் அரசியலை அடியொற்றி வளரும் தமிழக அரசியல் எப்படி அமையும் என்று நீ நினைக்கிறாய்? இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் பேசாமல் இருந்தால் உன் தலை சுக்கு நூறு." என்று நிறுத்தியது வேதாளம். [மேலும்..»]

போகப் போகத் தெரியும் – 43

December 20, 2009
By

ஜின்னாவின் முஸ்ஸீம் லீக் வைத்த பாக்கிஸ்தான் கோரிக்கை எவ்வளவு அயோக்கியத்தனமாக இருந்தாலும் அதில் ஓரளவு தன்மான உணர்வாவது இருந்தது. ஆனால் ஈவெரா கேட்டது திராவிட விடுதலையை அல்ல காலாகாலாத்திற்கும் பிரிட்டிஷ்காரர்களுக்குச் சேவகம் செய்வதையே அவர் இயக்கத்தின் லட்சியமாக வைத்திருந்தார். [மேலும்..»]

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 17: ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம்!

'முஸ்லிம்களும் தமிழர்களே! திராவிடர்களே!' என்று சொல்லும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் முஸ்லிம் தமிழ் பெண்களின் அடிமைத்தனம் விலக போராட்டம் நடத்தியிருக்கவேண்டுமா? இல்லையா? கோஷாமுறையை அகற்ற மசூதிமுன் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கலாமே. ஆனால் இதுவரை போராட்டம் நடத்தவில்லை. காரணம் முஸ்லிம்களிடம் போனால் வாலை ஒட்ட நறுக்கிவிடுவார்களோ என்ற பயமோ என்னவோ? [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey