Tag: அண்ணா ஹஸாரே

யமுனைக் கரையிலும் மலர்கிறது தாமரை!

எப்படியாவது தில்லி தேர்தலில் பாஜக தோற்றுவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கின்றனர் சில ஊடகக் கைக்கூலிகள். அவர்கள் அளவுக்கு அதிகமாகவே கேஜ்ரிவாலை கொம்பு சீவி விடுகின்றனர். இந்நிலையில் தலைநகரின் அரசியல் நிலவரம் குறித்து ஹிந்து விரோத மனப்பான்மையின்றி ஓர் அலசல் தேவையாகிறது. அந்தத் தேவையை நிறைவேற்றுகிறது இக்கட்டுரை…. மீண்டும் தில்லி மாநில சட்டசபைத்…

லோக்பால்: கனவு நிறைவேறுமா? -2

ஊழல் இல்லாத இடமே இந்தியாவில் இல்லை என்றாகிவிட்டது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், புதிய ரேஷன் அட்டை, இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், தொழில் உரிமம்,  வாகன ஓட்டுனர் உரிமம், பத்திரப் பதிவு,… என எதைப் பெற வேண்டுமாயினும், லஞ்சம் கொடுக்காமல் காரியம் ஆகாது. இடையிடையே, ‘லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது’ என்று பத்திரிகைகளில் செய்தி வரும். முகத்தை மூடிக்கொண்டு புகைப்படத்தை தவிர்க்க தலையைக் குனிந்துகொண்டு போலீஸ் வேனில் ஏறும் ‘குற்றவாளிகள்’ அடுத்த சில மாதங்களில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிந்தும், எந்த அச்சமும் இன்றி கையூட்டு வாங்கும் அதிகாரிகள் பெருகிவிட்டார்கள். சொல்லப்போனால், லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே கள்ள ஆடுகள் பெருகிவிட்டன. இதற்கெல்லாம் மாற்று என்ன? லோக்பால் சட்டம் வந்துவிட்டது. இதனால் என்ன லாபம்? லஞ்ச ஒழிப்பு சட்டம் இப்போதும் நாட்டில் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், லஞ்சம் ஒழியவில்லையே! எனவே, முதலில் லோக்பால் குறித்து மக்களிடையே முழுமையாக விளக்கி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட வேண்டும்.

லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1

லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேறிவிட்டது. ஊழலுக்கு எதிரான போரில் நாடு இனி தயங்கி நிற்காது என்பது மக்களின் எதிர்பார்ப்பு. எந்தச் சட்டமும் அதை நிறைவேற்றுவோரின் உறுதிப்பாட்டில் தான் மதிப்பு பெறுகிறது. இந்த சட்டம் கொண்டுவரவே 50 ஆண்டுகளாகி இருப்பது, நமது உறுதிப்பாட்டின் லட்சணத்தை வெளிப்படுத்தக் கூடியது. இப்போது லோக்பால்…

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்

ஜனலோக்பால் இயக்கத்திற்காக திரட்டப்பட்ட நிதியை முறைகேடாக கேஜ்ரிவால் பயன்படுத்துவதாகவும் கூட அண்ணா குற்றம் சாட்டினார். அதெல்லாம் பழைய கதை. இப்போது கேஜ்ரிவால் பெற்றுள்ள வெற்றி அண்ணாவையும் சற்று யோசிக்க வைத்திருக்கிறது. ‘நான் தில்லியில் பிரசாரம் செய்திருந்தால் அரவிந்த் முதல்வராகி இருப்பார்’ என்று இப்போது கூறுகிறார் அண்ணா. வெற்றி, மனிதர்களை எப்படி மாற்றி விடுகிறது…, பாஜகவின் வழக்கமான ஆதரவாளர்கள் கூட உள்கட்சிப் பூசல்களால் வெறுத்துப் போயிருந்தனர். இந்த சமயத்தில் டாக்டர் ஹர்ஷவர்த்தனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மோடி சூறாவளிப் பிரசாரம் செய்ததால் தான், பாஜக மயிரிழையில் முன்னணி பெற்று மரியாதையைக் காத்துக் கொண்டுள்ளது… தில்லியில் மறுதேர்தல் நடத்தப்பட்டால், பாஜக மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கான புள்ளிவிவரங்கள் இவை. இந்தியா டுடே- சி.வோட்டர் அமைப்பு நடத்திய ஆய்விலும் இதுவே தெளிவாகி உள்ளது. இதை ஏற்க மனமின்றி பல ஊடகங்களும் பாஜகவை குறைவாக மதிப்பிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றன….