Posts Tagged ‘ அதிமுக ’

நாடும் நமதே! நாற்பதும் நமதே!

தமிழக தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமான நிலை நிலவுகிறது. வெல்ல வேண்டிய அணியும், வெல்ல வாய்ப்பு அதிகமுள்ள அணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகவே இருப்பது மகிழ்ச்சியே. எனினும், வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை பெருமளவில் மாற்றிக் காட்டுவதே, கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சிக்கு தமிழகம் அளிக்கும் நன்றிக்கடனாக இருக்கும். [மேலும்..»]

தமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்

February 4, 2019
By

தலைமைத்துவம் தமிழ் மரபில் நான்கு குணங்களைக் கொண்டது - அஞ்சாமை, ஈகை, விவேகம், செயலூக்கம். திராவிட இயக்க அரசியல் இந்த நான்கையும் எப்படி சித்தரிக்கிறது என பார்க்கலாம்... யார் ஒன்றுமே செய்ய மாட்டார்களோ அவர்களுக்கு நேராக செய்வது நல்லது என்ற நோக்கில் திராவிடம் மத்திய அரசை நோக்கி புஜம் மடிப்பது மோஸ்தரானது. பொதுவாக திருப்பி்அடிக்கும் தரப்புகளிடம் குனிந்தும், ஒன்றும் செய்யாதென உறுதி படுத்தப்பட்ட தரப்பிடம் கொந்தளிப்பதும் திராவிட மரபு... [மேலும்..»]

அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் அதிமுக அரசு இந்நேரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். இப்போதே, ‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதையடுத்து தமிழகத்தில் செயல்படாத அதிமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்’ என்று திமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே, அதிமுகவுக்கு ராஜதந்திரத்துடன் யோசிக்க வேண்டிய தருணம் இது. [மேலும்..»]

பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்

1999-இல் அதிமுகவாலும், 2004-இல் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளாலும் வஞ்சிக்கப்பட்டவர் வாஜ்பாய். அதனை மறக்க முடியவில்லை. அதனால்தானோ, இன்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அதீத வலிமையுடன் கூட்டணிக் கட்சிகளைச் சாராமல் செயல்படும் வகையில் மக்கள் வாக்களித்திருக்கின்றனர்... இன்று பாஜகவுடன் நெருக்கம் காட்ட அனைத்துக் கட்சிகளும் திரைமறைவு பேரம் நடத்துகின்றன. மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் கதிகலங்கியுள்ள பல கட்சிகள் பாஜகவுடன் தோழமை பூண்டு தப்பிக்க விழைகின்றன. இந்த நேரத்தில்தான் பாஜக சாதுரியமாகவும், தெளிவாகவும் முடிவெடுக்க வேண்டும். தனது முதுகில் குத்திய கட்சிகளை பாஜக மன்னிப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். அடல் பிகாரி... [மேலும்..»]

அதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா

அதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரம் மீண்டும் முருங்கை மரம் ஏறி அங்கு தொற்றியிருந்த வேதாவைப் பற்றிக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கினான். உடனே வேதா நகைத்தது. வழக்கம் போல ஒரு கதை சொல்வதாகவும், அதற்கு உரிய பதில் கூறாவிட்டால் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் என்றும் கூறிவிட்டு, கதையைத் தொடங்கிவிட்டது. விக்ரமால் அந்தக் கதையை நிறுத்த முடியவில்லை. இந்த முறையும் வேதா தப்பிவிடும் என்று அவனுக்கு புரிந்துபோனது. ஆனால், இருவரிடையிலான ஒப்பந்தப்படி (இது அரசியல்வாதிகளிடையிலான ஒப்பந்தம் அல்லவே!) கதையைக் கேட்கத் துவங்கினான். வேதா கூறிய கதையிலிருந்து… *** தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவில் நிலவும் குடுமிப்பிடிச் சண்டைகள்... [மேலும்..»]

சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…

December 27, 2016
By

அதிமுகவின் தலைமைப் பொறுப்பு இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. சசிகலா பொதுசெயலாளர் ஆவாரா? முதல்வர் பதவியையும் கைப்பற்றுவாரா? நிர்பந்தங்களால் அரசியலிலிருந்தே ஒதுங்குவாரா? எல்லாம் காலத்தின் கரங்களில் இருக்கிறது. எது நடந்தாலும், அது தமிழகத்தின் அரசியலில் அழிக்க முடியாத கறையாகவே இருக்கும். காமராஜரும், ராஜாஜியும், சத்தியமூர்த்தியும், முத்துராமலிங்கத் தேவரும், திரு.வி.க.வும், பாரதியும், வ.உ.சி.யும், தன்னலமின்றி அரசியல் நடத்திய மண்ணில், சுயநலத்துக்காக அதிமுகவினர் எந்த அரசியல் பின்புலமும் அற்ற ஒருவரிடம் கையேந்துவதே நமது தர வீழ்ச்சியின் அடையாளம். [மேலும்..»]

ஜெயிக்கப் பிறந்தவர்!

December 11, 2016
By

ஜெயலலிதா ஒரு பெண்; வெளிப்பார்வைக்கு இறுகிய தலைவியாகக் காணப்பட்டாலும், இளகிய மனம் கொண்ட பெண். எனவே பணிந்தவர்களை அவர் மன்னித்தார். ஆண்களின் கொடுமையை உணர்ந்த பெண் என்பதால், அவர்களின் சரணாகதியை தனது அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக்கினார். அது ஒரு வகையில் ஆண்களிடம் வெறுப்புணர்வையும் பெண்களிடத்தில் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது. ஜெ.யின் வெற்றிக்கு பெண்களின் அமோக ஆதரவு அடிப்படையானதாக இருந்ததை இந்தக் கண்ணோட்டத்தில்தான் காண வேண்டும். அந்தக் காலகட்டத்தில்தான் அவர் அன்பு சகோதரி என்ற நிலையிலிருந்து அம்மாவாக உயர்ந்தார்; உயர்த்தப்பட்டார். மழலைப் பருவத்தில் அன்புக்கு ஏங்கிய சிறுமியாகவும், குமரிப் பருவத்தில் ஆணாதிக்கத் திரையுலகில் அலைக்கழிந்த நடிகையாகவும், அரசியலின் நாற்றங்கால் பருவத்தில்... [மேலும்..»]

அஞ்சலி: தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஜெ.ஜெயலலிதா

கடுமையான விமர்சனங்களை அவர் மீது கொண்டிருந்தாலும் கூட அவரது மறைவை ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும் கூட சொல்ல முடியாத ஒரு வேதனை ஏற்படுகிறது... 20-21ம் நூற்றாண்டுகளின் யுகசந்தியில் தமிழ்நாட்டை சுயலாப மக்கள் விரோத சுரண்டல்வாதிகளும், துவேஷம் வளர்க்கும் இனவாத அரசியல் கயவர்களும் சீரழித்து விடாமல் காத்த தேவதை ஜெயலலிதா... கறாரான அரசியல்வாதி, பாதரசம் போன்று நிலையின்றி அலைபாயும் ஆளுமை (mercurial personality), இரும்பை ஒத்த உறுதி, மிகவும் சிக்கலான நிர்வாகத்தையும் கையாளும் செயல்திறன் - இத்தகைய பிரமிப்பூட்டும் பண்புகளின் கலவையாக ஜெயலலிதா விளங்கினார்.... [மேலும்..»]

மீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அம்மாவுக்கு மீண்டும் அரியணையைத் தந்துவிட்டன. ஆளுங்கட்சி மீதான அதிருப்தி அலையை மீறி, மீண்டும் வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராகி இருக்கிறார். அதேசமயம், மாற்று அரசியலுக்கான வாய்ப்பு என்ற கருதுகோள் இந்த முடிவுகளில் மிகக் கடுமையாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசியல் களம் திமுக- அதிமுக என்ற இரு திராவிட அரசியல் கழகங்களிடையிலான வேட்டை மைதானமாக மாறி இருக்கிறது. இதை மாற்ற இம்முறை அருமையான வாய்ப்பு உருவாகி இருந்தது. ஆனால், மூன்றாவது அணி என்ற பெயரில் உருவான கோமாளிக் கூட்டணியால் அந்த வாய்ப்பு தகர்க்கப்பட்டுள்ளது. தன்னை அதீதமாக முன்னிறுத்திய... [மேலும்..»]

தமிழக தேர்தலில் யார் ஜெயிக்கக் கூடாது?

இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள் நான்கிற்கு 12 தொகுதிகள் இரு திராவிடக் கட்சிகளால் அளிக்கப்பட்டுள்ளன. எந்தக் கட்டுப்பாடும் இல்லாத மதவெறி மிகுந்த அடிப்படைவாத இஸ்லாமியக் கட்சிகள் வெல்வதென்பது, தமிழகத்தில் உள்ள முஸ்லிம் மக்களை மேலும் தேசிய நீரோட்டத்திலிருந்து பிரித்து, பொதுமக்களிடமிருந்து அந்நியப்படுத்திவிடும். எனவே இந்தக் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். இக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் வாக்காளர்கள், எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது என்பதை விட, இவர்கள் வெல்லக் கூடாது என்பதில் தீர்மானமாக இருப்பது அவசியம். ஊதுகிற சங்கை ஊதிவிட்டோம். விழித்துக் கொள்வது மக்களின் பொறுப்பு.... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey