Posts Tagged ‘ அனுமன் ’

இந்து மத விளக்கங்கள், ராமாயணம், வழிகாட்டிகள்

அனுமன் எனும் ஆதர்சம்

அனுமன் எனும் ஆதர்சம்

நாகங்களின் தாயான சுரசை என்பளை விட்டு அனுமரை விழுங்கச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். அனுமர், அநாவசியமாக சண்டை போடாமல், புத்தியை மட்டும் பயன்படுத்தி அவள் வாயினுள் நுழைந்து திரும்பி சாகசம் பண்ணித் தப்பிப்பதன் மூலம், தேவையில்லாத நேரத்தில் சக்தியைச் செலவழிக்கக் கூடாது. அடுத்தது சிம்ஹிகை என்ற அரக்கியிடம் சிக்கினார். அனுமர், அங்கே பலத்தைப் பிரயோகித்தார். தேவையான இடத்தில் பலப்பிரயோகம் பண்ணிடணும்... சீதையிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் விதம், “தங்கள் கணவரால், தாங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்று கண்டு வரப் பணிக்கப்பட்ட நபர்” என்ற வாசகத்தில் துளியும் மிகையன்றி, துளியும் குறையன்றி சொல்லும் நேர்மையைப் போதிக்கிறார்.... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், ராமாயணம்

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7

October 14, 2014
-
ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7

வானர சேனைகள் கடல் கடந்து இலங்கை போவதற்கு ராமர் கடல் அரசனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால் அந்த வேண்டுகோளுக்குப் பயன் ஏதும் இல்லாது போகவே, அவர் கடல் அரசனுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார். அதைக் கேட்ட அரசன் உடனே அங்கு தோன்றி கற்களால் ஆன பாலம் ஒன்றை நளன் கட்டலாம் என்று கூறி, அவரிடம் மன்னிப்பு கேட்டான். ... உத்தர காண்டம் வால்மீகி ராமாயணத்தின் பிற்சேர்க்கையாக இருக்கலாம் என்றும், ராமருடைய பட்டாபிஷேகத்துடன் முடியும் யுத்த காண்டமே ராமாயணத்தின் இறுதிப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று சில பக்தர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆறு காண்டங்களில் தொடராக நடக்கும் நிகழ்வுகளைக்... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், ராமாயணம்

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6

September 9, 2014
-
ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6

போகும் வழியில் காணப்படும் மலைக் குன்றுகளையும், நதி ஓடைகளையும் “சீதை எங்கே? எங்கே?” என்று ராமர் கேட்டுக்கொண்டே போக, அவைகளுக்கு ராவணன் மேல் இருந்த அச்சத்தால் அவை எல்லாமே மௌனம் சாதித்தன. அவ்வாறு அவர் மான்களின் கூட்டத்தைப் பார்த்துக் கேட்கவே அவை யாவும் ராமருக்கு உதவி செய்வது போல, எல்லாமே வானத்தை பலமுறை தொடர்ந்து பார்த்துக்கொண்டே, தெற்கு நோக்கிப் பாய்ந்தோடின. அதிலிருந்து சீதை வான் வழியே, தென்திசை நோக்கிக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள் என்று லக்ஷ்மணன் புரிந்துகொண்டான்... சுக்ரீவனை விட வாலி வலிமை படைத்தவன் என்று இருந்தாலும், வாலியை விடுத்து சுக்ரீவனைத் தனது கூட்டாளியாக ராமர் ஏன் தேர்ந்தெடுத்தார்?... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், ராமாயணம்

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4

August 21, 2014
-
ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4

தங்களது குறிக்கோளுக்காக மனிதர்களாக அவதரித்து இவ்வுலகில் கடும் துன்பங்களை இருவருமே அனுபவித்திருந்தாலும், அதில் ராமரைவிட சீதையின் பங்கே மிக அதிகமாக இருந்தது. அவர்கள் பட்ட கஷ்டங்களைப் படிக்கும்போது நமது கண்களில் கண்ணீர் தானே துளிர்க்கும். அப்படியென்றால் விஷ்ணுவும் அவரது பத்தினியும் அவ்வளவு துன்பப்பட்டார்களா என்று கேட்டால், “இல்லையே! தெய்வ நியதிப்படி தெய்வங்கள் எப்படி கஷ்டங்களுக்கு உள்ளாகும்?” என்பதுதான் பதிலாக இருக்கும். அப்படியானால் “அவர்கள் என்ன துன்பப்பட்டதுபோல நடித்தார்களா?” என்பதுதான் நமது அடுத்த கேள்வியாக இருக்கும். அலசிப் பார்த்தால் அப்படி நினைப்பதும் சரியில்லை.... [மேலும்..»]

இலக்கியம், இலங்கைத் தமிழர், கம்பராமாயணம்

கம்பனும் இலங்கையும்

கம்பனும் இலங்கையும்

கம்ப ராமாயணத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகவும் விரவிக் காணப் படுகின்றது. வேறெந்தப் புலவனுக்கும் கொடுக்கப் பெறாத பெருமை கம்பருக்கு வழங்கப் பெற்று வருகின்றது.”ஈழத்து வீழ்ச்சியை” பாடிய கம்பரை ஈழம் நிராகரிக்க வேண்டும் என்ற வகையிலான கருத்துக்களும் ஆங்காங்கே சிலரால் எழுப்பப்பட்டு வந்துள்ளன... அறமற்ற வகையில் உரிமையற்ற ஆட்சியாளனால் ஆளப்படும் நாடாக ஈழம் காட்டப்படுகிறது. எனினும் தன் இச்சைக்காகச் சமுதாயத்தைப் பலியிட்ட இராவணனிடமிருந்து ஈழத்தை “உம்பரில் ஒரு முழம் உயர்ந்த ஞானத்தம்பி” என்று காட்டப்பெறும் விபீடணனுக்கு வழங்கியே காவியத்தைக் கம்பர் நிறைவு செய்கிறார்... “தவம் செய்த தவமால்” என்று உயர்த்திப் பேசுவதும் ஈழத்தின் உயர்வை உறுதியாகவும்,... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், தொடர், ராமாயணம்

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27

February 20, 2013
-
இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27

தன் உடன் பிறந்தவர்களின் சாவுக்குப் பழி வாங்க வேண்டும் என்று அதிகயா துடித்துக்கொண்டு இருந்தான். அவன் தேரில் ஏறிப் போர்க்களத்துக்குப் போகும் வழியிலேயே பல வானரர்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டே போனான். லக்ஷ்மணன் அவனைத் தடுத்து நிறுத்தித் தன்னுடன் மோதுவதற்குச் சவால் விட்டான். போர் புரிய வக்கில்லாச் சிறுவன் என்று லக்ஷ்மணனை ஒதுக்கிவிட்டு அதிகயா போனான். மேலும் லக்ஷ்மணன் உடலைத் தன்னுடைய அம்புகளால் துளைத்து அவன் நிற்கும் பூமியை ரத்தக் களம் ஆக்குவேன் என்றும் அவன் சொல்லிக்கொண்டே போனான். வெறும் வார்த்தைப் பந்தல்களே   அதிகயாவை வீரனாக்கிவிடாது என்று அதற்கு லக்ஷ்மணன் பதிலடி கொடுத்தான். ஒரு சண்டையில் எதிரியை வெல்ல... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், தொடர், ராமாயணம்

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26

January 30, 2013
-
இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26

ராவணன் ஒரு மகாவீரன் மட்டும் அல்லாமல் ஒரு கைதேர்ந்த போர்த் தலைவன் ஆனதால், அரக்கர்களின் மூர்க்கமான தாக்குதலால் வானரர்கள் பக்கம் சரிவு ஏற்பட்டு பலத்த இழப்பு நேர்ந்தது. ஒரு கட்டத்தில் இராமரே வானரர் படையை முன்னின்று இயக்கி, ராவணனையும் நேருக்கு நேர் சந்திக்கலாமா என்று யோசித்தார். ஆனால் ராவணனுடன் நேரடித் தாக்கலில் தானே ஈடுபட விரும்புவதாக லக்ஷ்மணன் தெரிவித்தான். அதற்கு ஒத்துக்கொண்ட இராமர் எதிரியின் பலவீனத்தை பயன்படுத்தவும், தன் பலவீனத்தை எதிரி பயன்படுத்தாது இருக்குமாறும் போர் புரிய வேண்டும் என்று லக்ஷ்மணனுக்கு அறிவுறுத்தினார். எதிர்பாராமல் இருக்கும்போது எதிரிக்கு அடிகொடுக்கும் அதே சமயம், எதிரி எளிதில் தாக்கவோ, காயப்படுத்தவோ... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், தொடர், பொது, ராமாயணம்

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25

December 10, 2012
-
இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25

வானரர்கள் இலங்கை மாநகரைத் தாக்குவதற்குத் தயாராக முதலில் அதைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்களின் தளபதிகள் மேலிடத்தில் இருந்து வரவேண்டிய ஆணைக்குக் காத்திருக்க, போர் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிந்தன. அப்போதும் இராமர், ஒரு வேளை மனம் மாறி தனக்கும் தன் வீரர்களுக்கும் போரினால் வரக்கூடிய அழிவுகளைத் தவிர்ப்பதற்காகவே, ராவணன் திருந்துவானா என்று கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சிறிது காத்திருந்தார். அனாவசியமான போர்ச் சேதங்களையும், கொலைகளையும் தடுப்பதற்காக அந்நாளில் எதிரிகளுக்கு நிறைய கால அவகாசம் கொடுத்த பின்பே போர்கள் தொடுக்கப்படும். இங்கு அங்கதன் மூலம் இராமர் அனுப்பிய செய்தியும் அந்தப் பண்டைய வழக்கத்தை ஒட்டியதுதான்.... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், பொது, ராமாயணம்

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24

November 23, 2012
-
இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24

"எவர் என்னை அண்டி வருகிறார்களோ அவர்களுக்கு நான் அபயம் அளிப்பேன். என்னை அடைந்தபின் அவர்களுக்கு எந்த வித பயமும் வேண்டாம். இது என்னுடைய கொள்கை" - இந்த வரிகள் மூலம் இராமரின் தெய்வீக அம்சத்தை வால்மீகி எல்லோருக்கும் உணரவைக்கிறார். இது இறைவனால் அனைவருக்குமே கொடுக்கப்பட்டுள்ள உறுதி.... எப்படி ராமராஜ்யத்தில் எல்லாமே உண்மை என்பதால் பொய் என்பதே இல்லாது போகிறதோ, அதேபோல ஆனந்த நிலையில் எந்தப் பொருளும் பரம்பொருள் ஆகிவிடுவதால், வேறு என்பதே இல்லாததாகி அச்சம் என்பதும் இல்லாது போகிறது.... சான்றோரின் குணங்களான மனவடக்கம், பொறுமை, எளிமை, இனிமையான பேச்சு, இவை அனைத்தும் நற்குணம் இல்லாதவர்களிடம்... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர், ராமாயணம்

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 22

October 24, 2012
-
இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 22

யஜமானன் கொடுத்துள்ள ஒரு கடினமான வேலையை எந்த ஒரு வேலையாள் அன்புடன் ஈடுபாட்டோடு செய்வானோ, அவன் மற்றவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பவன்... தோற்றுவிடுவோமோ என்ற பயமே போர் புரிவதற்கு வேண்டிய மனோநிலையை இழக்கச் செய்கிறது... ராவணன், தான் பேச ஆரம்பித்ததுமே ஒருமித்த முடிவு ஒன்றை எடுப்பதையே தான் விரும்புவதாக எடுத்த எடுப்பிலேயே சொன்னான்... எந்தப் பிரச்சினையிலும் அதைத் தீர்க்க எடுக்கப்படும் முயற்சிகளில் வேறெதுவும் சரியாக வரவில்லை என்றால், போருக்குச் செல்வது என்ற முடிவு... [மேலும்..»]