
நன்கொடை வழங்குபவர்கள் கஷ்டப்படும் ஜீவன்களுக்கு உதவுவதற்காகத்தானே பணம் தருகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? மிகவும் பின்தங்கிய நாடுகளில் உள்ள கிளைகளுக்கு கிடைப்பதெல்லாம் வெறும் தொடக்கநிலை உதவி மட்டுமே. திரட்டப்பட்ட பெரும்பாலான நன்கொடை நிதியும் வட்டிகன் வங்கியின் கணக்கிலேயே கிடக்கும்…. 1994-இல் மதர் தெரசாவின் இல்லங்களின் அவலநிலைகளைக்குறித்து டாக்டர் ராபின் ஃபாக்ஸ் எழுதிய விமர்சனக் கட்டுரையில் முறையான அறுவைச்சிகிழ்ச்சை என்பது இந்த அமைப்பின் இந்திய கிளைகளில் காணப்படவே முடியாத ஒன்று என்று சொன்னது மருத்துவ உலகையே அன்று அதிச்சிக்குள்ளாக்கியது…
மதர் தெரசாவின் வியாபாரம் என்பது என்ன? பணத்துக்காக நல்ல மனசாட்சியை பண்டமாற்று செய்வது என்பதுதான் அது. இந்த பண்டமாற்றில் மிகப்பெரும் நன்மை அடைந்தவர்கள் நன்கொடை தந்தவர்கள். கிஞ்சித்தும் நன்மை காணாதவர்கள் ஏழைகள்… .(மொழிபெயர்ப்புக் கட்டுரை)