Posts Tagged ‘ அபுனைவு ’

இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து

எனக்கு இந்தியா பெரும் மனக்காயம் அளித்தது. இந்தியா ஒரு போற்றிப் புகழப்பட்ட நாயகமான நாடு. அதே நாட்டின் பெரும் வறுமையிலிருந்துதான் என் முன்னோர்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் தப்பித்து வெளியே ஓட வேண்டியிருந்தது. இந்த இரண்டு இந்தியாக்களும் வெவ்வேறாக இருந்தன.. என் சிறுவயதில் சரியான வார்த்தை தெரியாவிட்டாலும் இந்தியாவின் ‘பூரணத்துவம்’ (wholeness) என்ற விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஸ்பானியப் படையெடுப்பாளர்கள் முன்னால் மெக்ஸிக, பெரு கலாச்சாரங்கள் எப்படி ஒன்றுமே இல்லாமல் போனதோ அதுபோல் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் முன்னால், இந்தியாவிலிருந்து வெகு தொலைவிலிருந்த எங்கள் காலனியில் பழமையானதும், சிதைந்து போகாததென்றும் நினைத்து நாங்கள் பல்வேறு விதமாக... [மேலும்..»]