Posts Tagged ‘ அப்துல் நாசர் மதானி ’

வன்முறையே வரலாறாய்… – 8

February 11, 2014
By

பாபா சாகேப் அம்பேத்கர் எழுதுகிறார் - "மாப்ளாக்களின் கையில் சிக்கிய இந்துக்கள் கொடூரமான முடிவைச் சந்தித்தார்கள். படுகொலைகள், கட்டாய மதமாற்றங்கள், இந்துக் கோவில்களின் மீதான தாக்குதல்கள், பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருவினைச் சிதைத்தல், கொள்ளை, தீ வைத்தல், பொது இடங்களை இடித்துத் தகர்த்தல்.... என வன் செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். சுருங்கச் சொன்னால் மனிதர்கள் அறிந்த எல்லாவிதமான காட்டுமிராண்டித்தனமான செயல்களும் இந்துக்களுக்கு முஸ்லிம் மாப்ளாக்களால் செய்யப்பட்டது. இன்றுவரை அங்கு எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை... [மேலும்..»]

ஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…

இன்னும் எத்தனை உயிர் வேண்டும் இந்து சமூகமே… ரத்தமும், சதையுமாக அன்போடும், அரவணைப்போடும் மக்களை ஒன்றுபடுத்திக்கொண்டிருந்த ஒரு மனிதர் ஆடிட்டர் ரமேஷ். அவர் சிந்திய ரத்தம் காயவில்லை. இன்னொரு இந்து உயிரை நாம் இழந்து விட்டோம். ஆடிட்டர் ரமேஷோ, அவருடைய படுகொலைக்கு நியாயமான விசாரணை வேண்டும், நீதி வேண்டும் என்று கேட்டு தீக்குளித்த அந்த தாய் ராஜ ராஜேஸ்வரியோ செய்த தவறு தான் என்ன? இந்து சமூகத்தில் பிறந்தது அவர்கள் குற்றமா? . மற்றவர்கள் போல அல்லாமல் நம் சமூகத்தின் இழிவை போக்கவும், மேன்மைப்படுத்தவும் தங்களுடைய தனிப்பட்ட இன்ப, துன்பங்களை விலக்கி வைத்த்து குற்றமா? தங்கள் உழைப்பை... [மேலும்..»]