இந்திய குற்றவியல் சட்டங்களில் மோதி அரசு கொண்டுவரும் மாபெரும் சீர்திருத்தங்கள்

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதே மூன்று புதிய சட்டங்களின் ஆன்மாவாக இருக்கும், அவற்றின் நோக்கம் தண்டிப்பது அல்ல, நீதி வழங்குவது.. இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் பரவலான மாற்றத்தைக் கொண்டுவரும் இந்தச் சட்டத்தின்படி அதிகபட்சமாக எந்த வழக்கிலும் 3 ஆண்டுகளுக்குள் எவரும் நீதியைப் பெற முடியும்… பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் காவல்துறை தங்கள் அதிகாரங்களை தவறாக பயன்படுத்த முடியாது… நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஜீரோ எஃப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படும். வழக்கு குறிப்பேடு, குற்றப் பத்திரிகை முதல் தீர்ப்பு வரை முழு செயல்முறையையும் டிஜிட்டல் மயமாக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது…

View More இந்திய குற்றவியல் சட்டங்களில் மோதி அரசு கொண்டுவரும் மாபெரும் சீர்திருத்தங்கள்

குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு

பாஜகவை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் மோசமான நிலையில் வாழும் இந்துக்களின் எந்த ஒரு அவலநிலையையும், கிறிஸ்துவர்களின் அவலநிலையையும் பேசக்கூடாது என்று இங்கே ஒரு அறிவுஜீவி வர்க்கம் நினைக்கிறது. இந்துக்கள் பாஸிஸ்டுகள், இந்து மதமே கேவலமானது, இந்துக்கள் கொன்றொழிக்கப்பட்டால் அது நல்லதுதான் என்று அளவுக்கு இவர்களது மனத்தில் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான கடும் வெறுப்பு நச்சாக ஆக்கிரமித்திருக்கிறது… இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே. 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை. ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்கவில்லை… பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்தியாவை விட வறுமை, வேலைவாய்ப்பின்மை. இஸ்லாமியர்கள் தனியான தேசிய இனம், பிரிவினை வந்தாலே இஸ்லாமிய சொர்க்க பூமி உருவாகி பாலும் தேனும் பெருக்கெடுக்கும் என்று தம்பட்டம் அடித்து லட்சக்கணக்கான இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்களைக் கொன்றழித்து உருவான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவாகியுள்ளது…

View More குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு

யானைக்கும் அடிசறுக்கும்: 2018 மாநில தேர்தல் முடிவுகள்

தோல்வி காணாத கட்சி என்று எந்தக் கட்சியும் எக்காலத்திலும் இருந்ததில்லை. உண்மையில் இந்தத் தோல்வி பாஜகவை உள்முகமாக மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பாகவே அமைந்திருக்கிறது. ஏனெனில், இத்தோல்வி பாஜகவின் அரசியல் எதிரியான காங்கிரஸ் அடைந்தது போன்ற அவமானகரமான தோல்வி அல்ல. மிகவும் போராடி, நூலிழையில் பாஜக பறிகொடுத்த வெற்றியைத் தான் காங்கிரஸ் சொந்தம் கொண்டாடுகிறது… கள நிலவரம் மிகவும் மோசமாக இருந்தபோதும், பாஜக கடைசி வரை கடுமையாகப் போராடி தோல்வி விகிதத்தைக் குறைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரின் சூறாவளிப் பிரசாரமும், வாக்குச்சாவடி மட்டத்திலான தீவிரமான களப்பணியும், நேர்த்தியான தேர்தல் செயல்பாடுகளும் இல்லாமல் இருந்திருந்தால், பாஜக மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும்…

View More யானைக்கும் அடிசறுக்கும்: 2018 மாநில தேர்தல் முடிவுகள்

திரிபுரமும் வசமானது! காவிமயமாகிறது பாரதம்!

மோடி என்ற நிகரற்ற ஆளுமையை பிரதமராகக் கொண்ட பாஜகவுக்கு அதன் தலைவரான அமித் ஷாவின் ராஜதந்திர அணுகுமுறையும் சேர்ந்ததால்தான் அடுத்தடுத்து பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று இன்று ஏகதேச பாரதம் காவிமயமாகி இருக்கிறது. அதன் தொடர்ச்சியே, தற்போது வடகிழக்கில் பாஜக பெற்றுள்ள வெற்றி!

View More திரிபுரமும் வசமானது! காவிமயமாகிறது பாரதம்!