Posts Tagged ‘ அமெரிக்கா ’

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4

ஹெச்.எஃப்-24 விமானத்தின் வடிவமைப்பு சிறந்து விளங்கியபோதிலும், பிரிஸ்டல் சிட்டலி ஆர்பியஸ் தயாரித்து வழங்கிய அதன் இரட்டை எஞ்சின்கள் வலிமையற்றவையாக இருந்ததால், எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. இப்பொழுது அந்த விமானங்கள் பாரதத்தின் பல விமானதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை ஒரு வெட்கக்கேடு என்று உணர்வதால், விமானப்படைத் தலைமையகமும், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனமும் பாராமுகமாகவே இருக்கின்றன [மேலும்..»]

பிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதை

பிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதை

வெற்றி பெற்றவர்களால் கட்டமைக்கப்படும் மாய பிம்பங்களை நம்பி அவர்களை நாயகர்களாகப் போற்றுவதும் வரலாற்றுப் பீடத்தில் ஏற்றுவதும் உலகில் காலம் காலமாக நடந்து வருகிறது. இந்தியாவில் இதற்கு மிகச் சரியான உதாரணம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்றால், உலக அளவில் மிகப் பொருத்தமான உதாரணம் கியூப முன்னாள் சர்வாதிகாரி பிடல் காஸ்ட்ரோ. தனது 90-வது வயதில் கடந்த 2016, நவ. 25-இல் முதுமை காரணமாக காஸ்ட்ரோ மரணமடைந்தார். உலகின் நீண்டநாள் ஆட்சியாளரும், கம்யூனிஸ்ட்களின் உலகத் தலைவரும், அமெரிக்காவின் நெடிய பகையை வென்ற மகத்தான வீரருமான காஸ்ட்ரோ மறைந்ததாக உலக ஊடகங்கள் கண்ணீர் சிந்தின. அதில் இந்திய ஊடகங்களும்... [மேலும்..»]

மோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு

தனது அமெரிக்கப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் தேசிய நலனே பிரதானமாகக் கொண்டு மோடி இயங்கினார். அதுமட்டுமல்ல, அமெரிக்க அதிபர் முதல் சாமானிய அமெரிக்க இந்தியர் அவரை பலரையும் சந்திக்க மோடி காட்டிய ஆர்வமும், ஓய்வின்றி உழைத்த அவரது வேகமும், மோடியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து சளைக்காமல் நிகழ்ச்சிகளைக் கையாண்ட இந்திய வெளியுறவுத் துறையும், இந்தியா மாறிவிட்டது என்பதைப் பிரகடனப்படுத்தின. ’மோடி நல்ல வர்த்தகர்’ என்று அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டின. மோடியின் தலைமை நிகழ்த்தும் மாயாஜாலம் விந்தையானது என்றும் அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்தன. வேறெந்த உலக நாட்டின் தலைவருக்கும் அமெரிக்காவில் கிட்டாத வரவேற்பு, அங்கு வாழும் இந்தியர்களால் மோடிக்குக் கிடைத்ததை... [மேலும்..»]

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4

October 8, 2015
By

பிற நாடுகள் பல முறை முயன்ற பின்னரே செவ்வாயை சென்றடைந்துள்ளார்கள். என்னைப் போலவே இந்தியா முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது (மோடி மோடி மோடி என்ற பெரும் ஆமோதிப்பு குரலோசை அலையலையாய் எழும்புகின்றது) .... ஆகவே நீங்கள் கணக்குப் போட்டுப் பார்த்தால் பழைய எரிபொருள் விலையில் 19000 கோடி ரூபாய்கள் திருடப் பட்டு வந்தது புரிய வரும். இப்பொழுது இந்தப் பணம் அரசின் கஜானாவில் மிச்சப் படுகின்றது. இனிமேல் அந்த உதவித் தொகையைப் பெற இடைத்தரகர்கள் தேவையில்லை, திருடர்கள் கிடையாது. எனது ஜாம் மூலமாக ஊழலை ஒழிக்கத் துவங்கியுள்ளோமா இல்லையா? திருட்டை தவிர்த்திருக்கிறோமா இல்லையா? நிதியை சேமித்துள்ளோமா... [மேலும்..»]

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3

October 7, 2015
By

காலை முதலே சான் ஓசே நகரின் நடுவே அமைந்திருக்கும் எஸ் ஏ பி விளையாட்டு உள்ளரங்கு நோக்கி மக்கள் கூட ஆரம்பித்து விட்டனர். 18000 பேர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.. நீண்ட வரிசைகளில் மக்கள் கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். வரிசையில் கூடியிருந்தவர்களும் பாரத் மாதா க்கீ ஜெய் வந்தே மாதரம் மோடிக்கு ஸ்வாகதம் என்று தொடர் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்... "வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களை இந்தியாவின் அறிவு இழப்பாக நான் கருதவில்லை மாறாக அவர்களை அறிவு சேமிப்பாக லாபமாகக் கருதுகின்றேன். வெளிநாடு சென்ற இந்தியர்களின் அறிவும் அனுபவங்களும் இந்தியாவுக்குத் தேவைப் படும் பொழுது இந்தியாவின் நலன்களுக்காக... [மேலும்..»]

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2

October 6, 2015
By

ஒரு ஃபிஜி தீவுக்காரரான உங்களுக்கு மோடி மீது ஏன் இவ்வளவு ஆர்வம் என்றேன். இந்தியர்களுக்குத்தான் அவரது அருமை பெருமைகள் தெரிவதில்லை. உலக இந்துக்களின் தலைவராக நாங்கள் மோடியைக் காண்கிறோம். இத்தனை நாட்களாக இப்படி ஒரு அரிய தலைவனை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்? இவரை பிரதமராக்காமல் என்ன செய்தார்கள் இந்தியர்கள் என்றார் அந்த டாக்ஸி டிரைவர்... டிஜிடல் இண்டியாவுக்காக மோடி எடுத்து வரும் முயற்சிகளைப் போலவே முக்கியத்துவம் உள்ளது மோடியின் டெஸ்லா விஜயமும் மஸ்க்குடனான அவரது சந்திப்பும். சரியான ஒப்பந்தங்கள் உருவானால் இந்தியாவின் எரிசக்தி தேவை பெரும் அளவு குறையும். இந்தியாவின் வாகனஙக்ள் வெகுவாக பேட்டரி வாகனங்களாக... [மேலும்..»]

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 1

October 5, 2015
By

முன்னேற்பாடு கூட்டத்தின் பொழுது அந்த ஹோட்டல் அரங்கமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது ஒரு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு கூட்டத்திற்கே பெரும் அளவில் மக்கள் வந்தது நான் எதிர்பாராதது... எதற்காக இத்தனை நூறு பேர்கள் தங்கள் குடும்பம் வேலை எல்லாம் விட்டு விட்டு இரவு பகல் பாராமல் உழைத்தார்கள்? எதை எதிர்பார்த்து? அவர்களுக்குத் தங்கள் பிறந்த தேசத்தின் மீது இருந்த பற்றும் அதன் தன்னலமற்ற தலைவன் மீதான பாசமும் மட்டுமே அவர்களை அயராமல் இயக்கியது.... மோடியை ஒரு முறை இரவில் மதுரையில் மேலமாசி வீதி தெற்குமாசி வீதி சந்திப்பில் பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவர் ஒரு ஆர் எஸ் எஸ்... [மேலும்..»]

உலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய நிலைப்பாடு

உலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய  நிலைப்பாடு

உலக அளவிலான பன்னாட்டு அமைப்புகளில், வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளின் கருத்துகளுக்கு எதிர்மறையான நிலைப்பாடுகளை வழக்கமாக இந்தியா எடுப்பதில்லை. நேரு தொடங்கிவைத்த அந்த வகையான அணுகு முறை நமது தேசத்தின் நலன்கள் பாதிக்கப்படும் போதும்கூட ஏறத்தாழ அப்படியே தொடர்ந்து வந்திருக்கிறது.  அதுவும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட  விசயங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அந்த வகையில் இந்திய அரசு உலக வர்த்தக அமைப்பில் தற்போது முதல் முறையாக பணக்கார  நாடுகளின் விருப்பத்துக்கு மாறாக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தொடர்ந்த முயற்சிகள் மற்றும்   வற்புறுத்தல்கள் போன்ற   உத்திகளை எல்லாம் மீறி  அரசு செயல்பட்டுள்ளது. மோடி அரசு... [மேலும்..»]

பிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்!

இதற்குமுன் படிக்க வேண்டிய, தொடர்புடைய இடுகைகள்: பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!   உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை   வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி உண்டு. அதற்கு உலக அரசியலில் மிகப் பொருத்தமான உதாரணம் அமெரிக்காவின் எதேச்சதிகாரம். யு.எஸ்.ஏ. என்று குறிப்பாகவும் அமெரிக்கா என்று பொதுவாகவும் அழைக்கப்படும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உலகின் அறிவிக்கப்படாத காவல்காரனாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு சர்வதேச அரசியலில் முதன்மைப்படுத்திக்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக  கம்யூனிஸ நாடுகள் மேற்கொண்ட உலகளாவிய முயற்சி வெற்றி பெறவில்லை. தவிர, 1990களில் நிகழ்ந்த கம்யூனிஸத்தின் தோல்வி முதலாளித்துவத்தை அடைப்படையாகக் கொண்ட அமெரிக்காவின்... [மேலும்..»]

உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவம், வளங்களின் கலவையைக் கொண்டுள்ளோம். நாம் நான்கு கண்டங்களைப் பிரதிபலிக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒப்பீட்டு அளவிலான நன்மைகளையும் நிறைவான பலத்தையும் பெற்றுள்ளோம்... உலகின் எதிர்காலத்தை வரையறுக்கும் வாய்ப்பு நமக்குள்ளது. ‘வசுதைவ குடும்பகம்’ அதாவது "உலகம் முழுவதுமே ஒரே குடும்பம்" என்ற கருத்து, எங்கள் நாட்டின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்தகைய மண்ணில் இருந்து வரும் நான் இதனை மாபெரும் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன். வளரும் உலகத்தின் நம்பிக்கைகள். விருப்பங்களை வலுப்படுத்தும் வகையில் நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey