Posts Tagged ‘ அமெரிக்க அரசியல் ’

அமெரிக்க [அதிபர்] அரசியல் – 5

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வுமுறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொறு விதமான கணக்கீட்டைப் பின்பற்றுகிறது. இதனால் ஏகப்பட்ட குழப்பங்களும், தேர்தலில் ஒரு விறுவிறுப்பும் நமக்கு ஏற்படுகிறது. தமிழ் தொலைக்காட்சி சீரியல் கதைகளில் உள்ள குழப்பங்களும், வளைவுநெளிவுகளும் தோற்றுப்போகும் அளவுக்கு நெளிவுசுளிவுகள் இருக்கின்றன. அனுமதியில்லாமல் அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு எதிராக வன்மையாகக் கண்டனம் தெரிவித்து வருபவரும், மத்தியகிழக்கு முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று குரல்கொடுத்துவருபவரும், தொலைக்காட்சிமூலம் பிரபலமானவருமான டானல்ட் ட்ரம்ப் 2016 அமெரிக்க ஆளுநர் தேர்தலுக்கு, குடியரசுக் கட்சியின் வேட்பாளராகும் நிலைமையில் உள்ளார். [மேலும்..»]

அமெரிக்க அதிபர் அரசியல் – 4

அமெரிக்க அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், மாநிலங்களால் நியமிக்கப்பட்ட வாக்காளார்குழாத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதும், அதோடு பதவியில் உள்ளவர்களும், பசையுள்ளவர்களும் உட்புகுந்து, தங்களுக்கு வேண்டியவர்களை வாக்காளர்களாக நியமித்துவிடக்கூடாது என்பதிலும் அமெரிக்கத்தந்தையர் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. ஒரொரு மாநிலத்தின் வாக்காளர்குழாத்தில் எத்தனைவாக்காளர்கள் இருக்கவேண்டும் என்பதை அரசியல் அமைப்பு தீர்மானித்துவிட்டது. அந்த வாக்காளர்குழாம் அதிபராகத் தேர்தலுக்குநிற்கும் எவருக்குச் செல்லவேண்டும் என்பதை அம்மாநிலத்தின் வாக்காளர்கள் தங்கள் வாக்குகள்மூலம் தீர்மானிக்கிறார்கள். அமெரிக்க அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், மாநிலங்களால் நியமிக்கப்பட்ட வாக்காளார்குழாத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதும், அதோடு பதவியில் உள்ளவர்களும், பசையுள்ளவர்களும் உட்புகுந்து, தங்களுக்கு வேண்டியவர்களை வாக்காளர்களாக நியமித்துவிடக்கூடாது என்பதிலும் அமெரிக்கத்தந்தையர் கவனமாக இருந்திருக்கிறார்கள்... [மேலும்..»]

அமெரிக்க [அதிபர்] அரசியல் – 3

அதற்குமுன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எத்தனை தேர்தல்குழாம் வாக்குகளைப்பெறவேண்டும் என்று பார்ப்போம். அவ்வாக்குகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவது, ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகையைப் பொருத்தது; இரண்டாவது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதிகப்படியாக இரண்டு வாக்குகள் அளிக்கப்படுகின்றன. அது மக்கள் தொகையைப் பொருத்ததல்ல, நிலையானது. “இயற்கையாகப் பிறந்த குடிமகனாகவோ, இந்த அரசியல் அமைப்பு காலத்தில் குடிமகனாகவோ இல்லாதவர் அதிபர் பதவிக்கு தகுதியானவர் அல்லர்; மேலும், முப்பத்தைந்து வயதை அடையாதவரும், பதினான்காண்டுகள் ஒருங்கிணைந்த மாநிலங்களின் குடியிருப்பாளராக இல்லாதவரும் அத்தகுதி இல்லாதவரே.” [மேலும்..»]

அமெரிக்க[அதிபர்] அரசியல் — 2

ஒருவரிடமோ, அல்லது ஒரு துறையிடமோ அதிகாரம் குவிந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த அமெரிக்கத்தந்தையர், அதிகாரத்தை மூன்றாகப் பங்கிட்டனர். அத்துடன் நிற்காது, அந்த மூன்று பிரிவுகளும் தங்கள் மனம்போனபோக்கில் நடந்துகொள்ளாமலிருக்க, தடைகளையும், சமப்படுத்துதலையும் செய்யும்வண்ணம் அரசியல் அமைப்பை எழுதிவைத்தார்கள். மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மையுடன் இயற்றப்படும் எந்தச் சட்டத்தையும் அமெரிக்க அதிபரால் மறுக்கவியலாது. இந்த உரிமையின்மூலம், அதிபர் சர்வாதிகாரியாகச் செயல்படுவது மட்டுப்படுத்தப்ப்டுகிறது. [மேலும்..»]

அமெரிக்க[அதிபர்] தேர்தல்/அரசியல் — 1

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசாக இருந்தாலும், பதவிக்கு வருபவர்கள் தங்களைத் தங்கள் பதவியில் நிலைநிறுத்திக்கொள்வதற்காகப் பிற்காலத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, சமயத்தை அனுசரிப்பது, அல்லாது அனுசரிக்காமலிருப்பது இவற்றைச் சட்டமியற்றி மட்டுப்படுத்தக்கூடாது என்பதில் அமெரிக்க்த் தந்தையர் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் என்பது கண்கூடாகிறதல்லவா? அதற்குக் காரணம் தனிமனித உரிமை காக்கப்படவேண்டுமென்ற தணியாத தாகம். [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey