கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8

பொதுநலனைக் கொண்ட சமூகம் இயற்கையிலேயே உறுதி அற்றது. சுயநல உறுப்பினர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படும் வாய்ப்பு அதில் உள்ளது…. தன் தேவைக்கேற்ற பூக்களை தானாகவே உற்பத்தி செய்து கொண்டிருந்த மரங்கள், இன்று இலைகள் இல்லாத கிளைகளைக் கொண்டதால், பூமழை பெய்யுமா என்று வானை நோக்கி பிச்சை கேட்கின்றன… “நான் அப்படி ஆசைப்பட வில்லை. நான் எதிர்பார்க்கும் இந்தியாவில், இளவரசர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் இடங்கள் இருக்கவே செய்கின்றன” என்றார் காந்திஜி… ஏழைகளுக்கு உதவாமல் போனாலும் கூட, அறிவியல் ஆராய்ச்சியில் பின் தங்கமுடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூற நம்மில் தலைவர்கள் இல்லை….

View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8

புனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா?

 குடியரசு இதழில் இப்படி ஒரு செய்தி வந்தது. ‘அப்பொழுதே – புனா ஒப்பந்தக்…

View More புனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா?

நார்வே சிறையும் போதிசத்வரும்

அது ரோமன் கத்தோலிக்கம் யூதக் குடும்பத்துக்கு எதிராக; இது நார்வேஜிய அரசாங்கம் என்கிற போர்வையில் புரோட்டஸ்டண்ட் மேலாதிக்கம் இந்துக் குடும்பத்துக்கு எதிராக… பட்டாச்சாரியா குடும்பத்தின் மீது நார்வேஜிய அரசாங்கம் செய்யும் கொடும் தாக்குதல் காலனிய ஆபிரகாமிய புனிதப்போர் எனும் சங்கிலியில் ஒரு வரலாற்றுக் கண்ணியே அன்றி வேறல்ல…
மதப்பொறுமையின் பண்பாட்டு அடிச்சுவடும் இல்லாத, பண்பாட்டுப் பன்மையின் அடிப்படையும் தெரியாத ஆபிரகாமிய நாடுகளுக்குச் செல்லும் ஹிந்துக்கள் பாரதிய அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சட்டம் அது.

View More நார்வே சிறையும் போதிசத்வரும்

[பாகம் -31] தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம் – அம்பேத்கர் [நிறைவுப் பகுதி]

“…மதம் என்பது நமது கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒரு பிணம் என்று நினைக்காதீர்கள். புத்தமதத்தைப் பொருத்தவரையில் நமது இந்திய நாடு அதற்கு அந்நியமல்ல. எனவே புத்த மதத்தை மிகச்சிறந்த முறையில் பின்பற்ற நாம் உறுதி பூண வேண்டும். மஹர் மக்கள் புத்தமதத்துக்கு அவக்கேட்டைக் கொண்டுவந்து விட்டார்கள் என்ற பழிச்சொல்லுக்கு நாம் ஆளாகக்கூடாது. இது விஷயத்தில் நாம் உருக்கு உறுதியோடு இருக்க வேண்டும். இதனை நாம் சாதித்தோமானால் நம் தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம். செழித்தோங்குவோம். அதுமட்டுமல்ல உலகம் முழுவதற்குமே இந்த நற்பேறு கிட்டும். நீதி நிலைநாட்டப்பட்டா லொழிய உலகில் சமாதானம் நிலவாது….”

View More [பாகம் -31] தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம் – அம்பேத்கர் [நிறைவுப் பகுதி]

[பாகம் -30] பௌத்தம் பாரதப் பண்பாட்டில் தோன்றிய மதம் – அம்பேத்கர்

அ.மார்க்ஸ் எழுதிய ‘அம்பேத்கர் வாழ்வில்’ என்ற புத்தகத்தில் ஒரு மெகாபுளுகை எழுதியிருக்கிறார்… “… இந்தியாவிலிருந்து புத்தமதம் மறைந்துபோனதற்கான காரணங்களில் முதலாவதாக புத்தமதம் பிராமணர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டது… முஸ்லீம் படையெடுப்பு, புத்தமதம் முற்றிலுமாக அழிவதற்கு இட்டுச்சென்றது. முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கொடிய வன்முறையைக் கையாண்டு விகாரங்களை அழித்தொழித்தனர். பௌத்த பிட்சுகளைக் கொன்று குவித்தனர்… மறுபிறப்பில் எனக்கு முழுநம்பிக்கை உண்டு. மறுபிறப்பு என்பது தடுக்க முடியாது என்பதை விஞ்ஞானிகளுக்கு என்னால் நிரூபித்துக்காட்ட முடியும்… என்னுடைய மதமாற்றத்தால் இந்நாட்டின் கலாசார மரபுகளும் வரலாறும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளேன்.’’

View More [பாகம் -30] பௌத்தம் பாரதப் பண்பாட்டில் தோன்றிய மதம் – அம்பேத்கர்

[பாகம் -29] கம்யூனிஸ்டுகள் வன்முறையை அங்கீகரிப்பர் – அம்பேத்கர்

“…நாளைய தினம் ரஷ்யாவில் சர்வாதிகாரம் தோல்வியடைந்து அதன் தோல்விக்கான அறிகுறிகளை நான் காணும்போது என்ன நடக்கும்?… ரஷ்ய மக்கள் தங்களுக்குள் சச்சரவிட்டுக்கொண்டு கொடிய ரத்தக் களறியில் ஈடுபடுவார்கள்…. சொத்துரிமையை ஒழிப்பது என்ற அடிப்படையில் அமைந்த கம்யூனிசத்தைக் கொண்டுவருவதற்கு வன்முறையையும் பகைவர்களைக் கொல்லுவதையும் வழிமுறையாக கடைபிடிக்க கம்யூனிஸ்டுகள் விரும்புகின்றனர்… மனிதர்களை ஒழித்துக்கட்டும் வழிமுறைகளை நீங்கள் கைக்கொள்ளும்போது, உங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் உயிரோடு இருப்பதில்லை… தங்களுடைய தொன்னெடுங்கால மரபுகளையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றி வரும்வரை அவர்களை ஒருபோதும் உங்கள் மன்னரால் வெற்றிகொள்ள முடியாது… “

View More [பாகம் -29] கம்யூனிஸ்டுகள் வன்முறையை அங்கீகரிப்பர் – அம்பேத்கர்

[பாகம் -28] காரல் மார்க்சு கம்யூனிசம் உலகை அழிக்கும் – அம்பேத்கர்

“வாரிசு வழி அதிகாரத்தை மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்று ஆட்சியிலுள்ளவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் இந்நாடு அழிந்தே போகும்… கம்யூனிசமும் சுதந்திர ஜனநாயகமும் ஒன்றிணைந்து செயல்படும் என்று கூறப்படுவது அறிவுக்குப் பொருந்தாக் கூற்று… இந்தியாவில் கம்யூனிஸ்டு இயக்கத்தை வளர்க்க பிராம்மண இளைஞர்களை நம்பியது ரஷ்யர்கள் செய்த பெரும் தவறு… நான் கம்யூனிசத்தில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை; என் கட்சி எக்காரணத்தைக்கொண்டும் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி அமைக்காது… பௌத்தமதம் மார்க்சுக்கும் அவரது கம்யூனிசத்துக்கும் ஒரு மாபெரும் சவால்…”

View More [பாகம் -28] காரல் மார்க்சு கம்யூனிசம் உலகை அழிக்கும் – அம்பேத்கர்

[பாகம் -27] நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி – அம்பேத்கர்

“…மதத்தை அலட்சியமாக நினைக்கும் இளைஞர்கள் எனக்கு மிக மிக வருத்தத்தைத் தருகிறார்கள்…. சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் சொல்வதுபோல் மதமே தேவையில்லை என்று தான் நம்பவில்லை…. மனிதனுக்கு மதம் கண்டிப்பாகத் தேவை. நீதி, தர்மசாஸ்திரங்களைப்போல மனிதகுலத்தை எந்த அரசாங்கமும் பாதுகாக்கவோ, ஒழுங்குபடுத்தவோ இயலாது… கம்யூனிஸ்ட்டுகள் என்பவர்கள் தொழிலாளர்களைத் தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காகச் சுரண்டுபவர்கள். நான் அவர்களின் பரம்பரை எதிரி…”

View More [பாகம் -27] நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி – அம்பேத்கர்

[பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்

‘‘….. பண்டிட் நேரு எப்போதும் முஸ்லீம்களின் பக்கம் நிற்பார். முஸ்லீம்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களைவிட அதிகப் பாதுகாப்பு தேவைப்படுகிற மற்ற வகுப்பினருக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை அவர்கள் தட்டிச்செல்லக் கூடாது என்றுதான் கூறுகிறேன்….. காங்கிரஸ் அரசாங்கம் அவர்களது குறைகளைத் தீர்க்க முன்வராது என்பதை உணர்ந்தேன். எனவே பதவி விலகுவதென முடிவு செய்தேன். பண்டிட் நேரு எந்தப் பதிலும் எனக்குத் தரவில்லை.’’

View More [பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்

[பாகம் -25] தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முஸ்லீம்கள் நண்பர்களல்ல – அம்பேத்கர்

“…பாகிஸ்தானிலோ அல்லது ஹைதராபாத்திலோ இருக்கும் தாழ்த்தப்பட்ட இன மக்கள் முஸ்லீம்கள் அல்லது முஸ்லீம் லீக்கின் மீது நம்பிக்கை வைப்பது அவர்களுக்குப் பெருங்கேட்டைத்தான் விளைவிக்கும். இந்துக்களை வெறுப்பதனாலேயே முஸ்லீம்களை நண்பர்களாகப் பாவிப்பது பழக்கமாகிவிட்டது. இது ஒரு தவறான கண்ணோட்டமாகும்…. எப்போதுமே ஜின்னா இரட்டை வேடம் போட்டு வருகிறார்… இந்தியாவின் எதிரியாக இருக்கும் ஒருவருக்கு ஆதரவு கொடுப்பதன்மூலம், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த எவரும் அந்த இனத்திற்கு அவப்பெயரை தேடிக்கொடுத்துவிடக்கூடாது என்ற கவலை எனக்கிருக்கிறது.’’

View More [பாகம் -25] தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முஸ்லீம்கள் நண்பர்களல்ல – அம்பேத்கர்