Posts Tagged ‘ அம்மா குடிநீர் ’

அஞ்சலி: தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஜெ.ஜெயலலிதா

கடுமையான விமர்சனங்களை அவர் மீது கொண்டிருந்தாலும் கூட அவரது மறைவை ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும் கூட சொல்ல முடியாத ஒரு வேதனை ஏற்படுகிறது... 20-21ம் நூற்றாண்டுகளின் யுகசந்தியில் தமிழ்நாட்டை சுயலாப மக்கள் விரோத சுரண்டல்வாதிகளும், துவேஷம் வளர்க்கும் இனவாத அரசியல் கயவர்களும் சீரழித்து விடாமல் காத்த தேவதை ஜெயலலிதா... கறாரான அரசியல்வாதி, பாதரசம் போன்று நிலையின்றி அலைபாயும் ஆளுமை (mercurial personality), இரும்பை ஒத்த உறுதி, மிகவும் சிக்கலான நிர்வாகத்தையும் கையாளும் செயல்திறன் - இத்தகைய பிரமிப்பூட்டும் பண்புகளின் கலவையாக ஜெயலலிதா விளங்கினார்.... [மேலும்..»]

தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)

ஒரு உடல் நலன் இல்லாத அதிகார வெறி பிடித்த மர்மமான ஒரு பெண்மணிக்கு ஏன் தமிழ் நாடு வாக்களிக்க வேண்டும்? சிந்தியுங்கள். ஜெயலலிதாவுக்கு இன்றைய தேவை ஓய்வும், மருத்துவ சிகிச்சையும், பயிற்சிகளும், மருந்துகளுமே அன்றி நிச்சயமாக முதல்வர் பதவி கிடையாது. அதற்கான அருகதையுடையவர் அவர் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். அவருக்குத் தேவையான ஓய்வை அளியுங்கள்... தமிழ் நாட்டில் முக்கியமான இந்துத் தலைவர்கள் பலரும் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப் பட்டார்கள். ஆம்பூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பெரும் கலவரம் நடத்தி போலீஸ்காரர்களைக் கடுமையாகத் தாக்கி பெண் போலீஸ்காரர்களை மான பங்கப்... [மேலும்..»]

எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 3

முதல் பகுதி… இரண்டாம் பகுதி… . மக்களாட்சி முறையில் அரசாங்கங்களை அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு தொலைநோக்குடன் இயங்கும் அரசுகள், மக்கள் வாக்கை அடிப்படையாகக் கொண்டு கவர்ச்சித் திட்டங்களை முன்வைக்கும் அரசுகள், மக்களைப் பற்றிய கவலையின்றி தன்னிச்சையாக இயங்கும் எதேச்சதிகார அரசுகள் என பொதுவாகச் சொல்லலாம். தமிழகத்தில் இன்றும் காமராஜர் ஆட்சி பற்றிய முழக்கங்கள் எழுந்துவரக் காரணம், அவரது அரசு, இதில் முதன்மை வகையைச் சேர்ந்திருந்ததே. அதேபோல, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கவர்ச்சி அரசியலுக்கு மாறான வளர்ச்சித் திட்டங்களிலேயே கவனம் செலுத்தினார். பாஜகவின் ஆதரவு அமைப்பான... [மேலும்..»]

எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 2

2003- 04ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ. 2,828 கோடி வருமானம் கிடைத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு 2013-14ஆம் நிதியாண்டில் இது ரூ. 21,500 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் மொத்த வருமானத்தில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பெரும்பகுதி தான் விலையில்லாத் திட்டங்களில் செலவிடப்படுகிறது. “கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” என்று மகாகவி பாரதி கேட்டது இதைத் தான். இந்த டாஸ்மாக் வருமானம் முழுவதும் தமிழக இளைஞர்களின் ஆற்றலை உறிஞ்சி, தமிழகப் பெண்களின் கண்ணீரில் விளைவிக்கப்பட்ட வருவாய் தான். மாநிலத்தையே மலடாக்கும் டாஸ்மாக் அளிக்கும் வருவாயில்... [மேலும்..»]